விஜய் பாணியில்.. கர்நாடகாவில் புதிய கட்சி தொடங்கும் நடிகர்.. யார் இந்த சேத்தன் அஹிம்சா?

  • பெங்களூர்: நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கி தமிழகத்தின் முதல்வராகி உள்ளார். இது பல நடிகர், நடிகைகளுக்கு அரசியல் ஆர்வத்தை தூண்டி உள்ளது. அந்த வகையில் கர்நாடகாவில் நடிகர் சேத்தன் அஹிம்சா புதிய அரசியல் கட்சியை தொடங்குவதாக அறிவித்துள்ளார்.

    Advertisement

    தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் நடிகர் விஜய். தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கி 2 ஆண்டுகளில் தமிழகத்தின் முதல்வராகி விட்டார். இவரது இந்த அரசியல் வெற்றி தமிழகத்தில் பல்வேறு நடிகர்களுக்கு அரசியல் ஆசையை ஏற்படுத்தி உள்ளது.

    Advertisement

    இது தமிழ்நாட்டில் மட்டுமில்லை. தமிழகத்தை கடந்து அண்டை மாநிலங்களிலும் உள்ள நடிகர்களுக்கும் அரசியல் ஆர்வத்தை ஏற்படுத்தி உள்ளது. அந்த வரிசையில் தற்போது இணைந்து இருப்பவர் தான் கன்னட நடிகர் சேத்தன் அஹிம்சா.

    இதுதொடர்பாக நடிகர் சேத்தன் அஹிம்சா நேற்று கூறியுள்ளதாவது: ''நான் கர்நாடகாவில் புதிய அரசியல் கட்சியை தொடங்க உள்ளேன். இதற்கான பணிகள் நடந்து வருகிறது. வரும் ஜனவரி மாதத்துக்குள் புதிய கட்சி தொடங்கப்படும். இதற்காக மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணத்தை தொடங்கி உள்ளேன். ஹிந்துத்துவா அரசியல் மற்றும் கர்நாடகாவின் தற்போதைய அரசியலை மாற்ற நினைக்கும் என்னை போன்றவர்கள் இதில் இணையலாம்.

    Advertisement

    நடிகரும், இயக்குநருமான உபேந்திரா கடந்த 2018 ம் ஆண்டில் பிரஜாகியா கட்சியை தொடங்கினார். ஆனால் கொள்கை சரியானதாக இல்லை. இதனால் அந்த கட்சி சரியான பாதையில் செல்லவில்லை. தற்போது உள்ள அரசியல் கட்சிகள் தனிப்பட்ட லாபத்துக்காக செயல்பட்டு வருகின்றன. தமிழ்நாடு முதல்வர் விஜய் மற்றும் ஆந்திர பிரதேச துணை முதல்வர் பவன் கல்யாண் ஆகியோர் மக்களுடன் நேரடியாகக் கலந்துரையாடினால் மட்டுமே, மக்கள் எதிர்கொள்ளும் உண்மையான பிரச்சினைகளைப் புரிந்துகொள்ள முடியும்'' என்றார்.

    அரசியல் கட்சி தொடங்குவதாக சேத்தன் அஹிம்சாவின் உண்மையான பெயர் சேத்தன் குமார். இவர் கன்னடத்தில் ஏ தினகலு, பிருகாளி, சூர்யகாந்தி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். சமூக ஆர்வலராகவும் உள்ளார். பிரதமர் மோடி மற்றும் பாஜகவின் கொள்கைகளை தீவிரமாக எதிர்த்து வருபவர். அம்பேத்கர் கொள்கை சார்ந்து பேசி வருவதாகவும், காங்கிரஸ் கட்சியையும் எதிர்த்து வருகிறார்.

    Advertisement

    பிராமணர்களுக்கு, எதிராக பேசியதாக கடந்த 2021ம் ஆண்டும், அதன்பிறகு 2022ம் ஆண்டில் ஹிஜாப் பிரச்சனை வெடித்தபோது கர்நாடகா உயர்நீதிமன்ற நீதிபதிக்கு எதிராக கருத்து தெரிவித்தும் கைது செய்யப்பட்டார். கடந்த ஏப்ரல் மாதம் கூட கன்னட நடிகர் ராஜ்குமாரின் நினைவிடம் பற்றி சர்ச்சையை கிளப்பினர்.

    மறைந்த கன்னட நடிகர் ராஜ்குமார் சிறந்த நடிகர். ஆனால் அவரது நினைவிடத்துக்காக பெங்களூர் நகரின் மைய பகுதியில் 2.5 ஏக்கர் நிலத்தை கடந்த 2006ல் மாநில அரசு ஒதுக்கியது பற்றி கேள்வி கேட்க வேண்டி உள்ளது. இந்த நிலத்தை பிற பயன்பாட்டிற்காக அரசு வழங்க வேண்டும் என்று கூறியிருந்தார். இதனால் நடிகர் ராஜ்குமாரின் ரசிகர்கள் மற்றும் கன்னட அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். சேத்தன் அஹிம்சாவின் வீட்டுக்கு சென்று அவரை வெளியே இழுத்து வந்து மன்னிப்பு கோர வைத்தனர்.

    Advertisement

    சமீபத்தில் முதல்வர் விஜய்யையும் விமர்சனம் செய்திருந்தார். தமிழக எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி கைதையும் விமர்சனம் செய்துள்ளார். இதுபற்றி அவர்,''உதயநிதியின் வார்த்தைகள் அருவருக்கத்தக்கதாவும், கேள்விக்குள்ளாக்கப்பட வேண்டியதாகவும் இருக்கலாம். ஆனால் ஆனால் அதற்காக கைது நடவடிக்கையா? தவெக தலைவர் விஜய்க்கு ஜனநாயகம் என்றால் என்ன? என்பது புரியவில்லை.

    எதிர்பாளர்களுக்கு எதிராக அரசு இயந்திரத்தையும் காவல் துறையும் ஆயுதமாக்குவதே அவரது தொடர்ச்சியான பாணியாக உள்ளது. கொசுவை கொல்ல அரிவாளா? அறிவற்ற ஒருவரை முதல்வராக்கியதால் தமிழ்நாடு காவல்துறையின் மாநிலமாக மாறி வருகிறது'' என்று விமர்சனம் செய்திருந்தார்.

    English Summary

    Actor Vijay has launched the 'Tamillaga Vettri Kazhagam' and become the Chief Minister of Tamil Nadu. This has sparked political interest among many actors and actresses. In a similar development, actor Chetan Ahimsa has announced that he is launching a new political party in Karnataka.