பெங்களூரு மெட்ரோவில் ரகசியமாக வீடியோ எடுத்தவருக்கு பெண் தந்த மறக்க முடியாத பரிசு

  • பெங்களூர்: பெங்களூரு மெட்ரோவில் "நான் இப்போது உண்மையிலேயே நடுங்கிக் கொண்டிருக்கிறேன். மெட்ரோ ரயிலில் என்னை ரகசியமாக வீடியோ எடுத்த ஒருவரை கையும் களவுமாகப் பிடித்தேன்" என்று பெண் ஒருவர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் மிகப்பெரிய விவாதத்தை ஏற்படுத்தியது. பெங்களூரு மெட்ரோ ரயிலில் தன்னை ரகசியமாக வீடியோ எடுத்தவரை கையும் களவுமாக பிடித்து அந்த பெண் போலீசில் ஒப்படைத்த சம்பவம் பெரும் பாராட்டையும் பெற்றுள்ளது.

    Advertisement

    முன்னதாக அந்த பெண் வெளியிட்ட வீடியோவில், தன்னை வீடியோ எடுத்ததாகக் குற்றம்சாட்டிய நபரிடம் அந்தப் பெண் வாக்குவாதத்தில் ஈடுபடுவதும், அவரது செல்போனைத் திறக்கும்படி வலியுறுத்துவதும் இடம்பெற்று உள்ளது

    Advertisement

    இந்தச் சம்பவம் தொடர்பாக அந்தப் பெண் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் தற்போது முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்துள்ளனர்.

    இன்ஸ்டாகிராம் சமூக வலைதளத்தில் சௌபிகாஎன்ற பெயரில் உள்ள அந்தப் பெண், தனக்கு நேர்ந்த சம்பவத்தை விவரிக்கும் வீடியோ ஒன்றைப் பகிர்ந்துள்ளார். அதில், பெங்களூருவின் வைட்ஃபீல்டு பகுதியில் உள்ள மெட்ரோ ரயிலில் செவ்வாய்க்கிழமை மாலை சுமார் 4.30 மணியளவில் ஏறினேன்.
    சக பயணி ஒருவர் என்னை ரகசியமாக வீடியோ எடுத்தார். அப்போது நான் (அணிந்திருந்த ஆடைகளையும் வீடியோவில் காட்டுகிறார்) உடல் முழுவதையும் மறைக்கும் வகையிலான ஆடைகளை அணிந்திருந்தேன்.
    எனது உடலில் எந்தப் பகுதியும் வெளியே தெரியவில்லை. ஆனால் ரகசியமாக வீடியோ எடுத்தார் என்று குற்றஞ்சாட்டினார்

    Advertisement

    தொடர்ந்து
    தன்னை ரகசியமாக வீடியோ எடுத்ததாகக் குற்றம்சாட்டிய நபரிடம் பெங்களூர் பெண் நேரடியாக வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அந்த நபரின் செல்போனைப் பிடித்துக்கொண்ட அவர், தொடர்ந்து, "ஏன் என்னை வீடியோ எடுத்தீர்கள்?" என்று கேள்வி எழுப்பினார்

    ஒரு கட்டத்தில், செல்போனைத் ஓபன் பண்ணுங்க என்று அந்த நபரிடம் அவர் வலியுறுத்துகிறார்.

    அதற்கு அந்த நபர், "நான் ஓபன் பண்ணி தருகிறேன். கொடுங்கள்" என்று பதிலளிக்கிறார்.

    இந்த வாக்குவாதம் நடைபெற்றபோது மெட்ரோ ரயில் பாதுகாப்புப் பணியாளர்களும் அங்கு இருப்பதை வீடியோவில் காண முடிகிறது.

    இதுகுறித்து அந்தப் பெண் வீடியோவில் கூறியதாவது:

    "நான் அவரது செல்போனைப் பிடித்துக்கொண்டேன். ஆனால், மெட்ரோ ரயில் அடுத்த நிலையத்தில் நின்றபோது அவர் இறங்கிவிட்டார். ரயிலில் இருந்து ஓடிவிட்டார். நான் அவரது செல்போனைப் பிடித்து பாதுகாப்புப் பணியாளர்களிடம் கொடுத்தேன். ஆனால், அவர் அதை மீண்டும் பறித்துக்கொண்டு ஓடிவிட்டார்.

    Advertisement

    பெங்களூரு மக்களே, தயவுசெய்து இந்த நபரைக் கண்டுபிடியுங்கள். அவர் வேலை செய்யும் நிறுவனத்தையும், அவரது குடும்பத்தினரையும் கண்டுபிடியுங்கள்.

    இந்தச் சம்பவம் தொடர்பாக மெட்ரோ ரயில் நிலையத்தில் அதிகாரப்பூர்வமாகப் புகார் அளித்துள்ளேன். ஏழு நாட்களுக்குள் நடவடிக்கை குறித்து தகவல் தெரிவிப்பதாக அவர்கள் கூறினார்கள்" என்று தெரிவித்துள்ளார்.

    "இதை சமூக வலைதளங்களில் பதிவிடுவேன்"

    இதையடுத்து, மெட்ரோ ரயில் நிலையத்தில் உள்ள லிப்ட்டில் அந்தப் பெண்ணுக்கும் அந்த நபருக்கும் இடையே நடந்த உரையாடலும் வீடியோவில் இடம்பெற்றுள்ளது.

    அப்போது அந்தப் பெண், "இதைச் சமூக வலைதளங்களில் பதிவிடுவேன்" என்று கூறுகிறார்.

    அதற்கு அந்த நபர், "மன்னித்துவிடுங்கள்" என்று பதிலளிக்கிறார்.

    Advertisement

    உடனே அந்தப் பெண், "நீங்கள் மன்னிப்புக் கேட்கிறீர்களா? அப்படியானால், என்னை வீடியோ எடுத்ததை ஒப்புக்கொள்கிறீர்களா?" என்று கேட்கிறார்.

    அதற்கு அந்த நபர், "இல்லை" என்று பதிலளிக்கிறார்.

    இதையடுத்து அந்தப் பெண், "அப்படியா? நான் உங்களைப் பிடித்துவிட்டேன். உங்களுக்குத் தண்டனை கிடைப்பதை உறுதி செய்வேன்" என்று கூறுகிறார்.

    பின்னர், அந்த நபரிடம் மீண்டும் செல்போனைத் திறந்து பாஸ்வேர்டு தெரிவிக்கும்படி அந்தப் பெண் கேட்கிறார். ஆனால், அந்த நபர் தனது செல்போனை மீண்டும் எடுத்துக்கொண்டு அங்கிருந்து நடந்து செல்வதை வீடியோவில் காண முடிகிறது. அப்போதும் அந்தப் பெண் செல்போனைத் திறக்கும்படி தொடர்ந்து வலியுறுத்துகிறார். இப்படி வீடியோ முடிந்தது.

    Advertisement

    வைரலான வீடியோ குறித்து பெங்களூரு போலீசார் பதில்

    இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவத் தொடங்கியதைத் தொடர்ந்து, பெங்களூரு மாநகர போலீசார் இன்ஸ்டாகிராம் கருத்துப் பகுதியில் அந்தப் பெண்ணைத் தொடர்புகொண்டனர்.

    "இந்தச் சம்பவம் நடந்த சரியான இடத்தைத் தெரிவிக்கவும். உங்கள் தொடர்பு எண்ணைத் தனிப்பட்ட செய்தி (DM) மூலம் அனுப்பவும்" என்று போலீசார் கேட்டுக்கொண்டனர்.

    பின்னர், இந்தச் சம்பவம் தொடர்பாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், விசாரணை நடைபெற்று வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

    புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு

    இதையடுத்து வெளியிட்ட மற்றொரு வீடியோவில், தான் கடுகோடி காவல் நிலையத்துக்குச் சென்றதாக அந்தப் பெண் தெரிவித்துள்ளார்.
    அங்கு தான் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

    இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். தன்னை வீடியோ எடுத்த நபருக்கு தரமான பதில் தந்ததாக அப்பெண்ணை சமூக வலைதளங்களில் பலரும் பாராட்டுகிறார்கள்.

    English Summary

    A woman caught a man red-handed while he was secretly filming her on a Bengaluru Metro train and handed him over to the police—an act that has drawn widespread praise.