பெங்களூரு: பெங்களூருவில் உள்ள மதுவிடுதி ஒன்றில் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, ஆந்திரப் பிரதேச கேடர் ஐஏஎஸ் அதிகாரி விகாஸ் மர்மாட் மீது பெங்களூரு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். குப்பம் பகுதி மேம்பாட்டு ஆணையத்தின் திட்ட இயக்குநரும், ஆந்திரப் பிரதேச பிரிவு ஐஏஎஸ் அதிகாரியுமான விகாஸ் மர்மாட், பெங்களூரு ரெசிடென்சி சாலையில் உள்ள ஒரு மதுவிடுதியில் காவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் சம்பவத்தைத் தொடர்ந்து அவர் மீது இந்த வழக்கு பதியப்பட்டுள்ளது.
பெங்களூரு ரெசிடென்சி சாலையில் உள்ள தனியார் மதுபான விடுதியில் நடந்த மோதல் குறித்து, அந்த ஏரியா இன்ஸ்பெக்டர் அருண் சலுங்கே அளித்த புகாரின் அடிப்படையில் கப்பன் பூங்கா காவல் நிலையத்தில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. விகாஸ் மர்மாட் மற்றும் அவருடன் இருந்த அபய் உதய்சிங், நிதீஷ், ரோஷன் ஆகிய மூவர் மீதும் வழக்கு பதியப்பட்டுள்ளது.
அக்டோபர் 10-ஆம் தேதி அதிகாலை சுமார் 1.30 மணியளவில் ரெசிடென்சி சாலையில் உள்ள 'கேவோர் பார் அண்ட் ரெஸ்டாரண்ட்' என்ற மதுபான பாரில், வாடிக்கையாளர்களின் வயதை உறுதிப்படுத்த பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு காவலர்கள் அடையாள அட்டைகளைச் சரிபார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது குப்பம் பகுதி மேம்பாட்டு ஆணையத்தின் திட்ட இயக்குநரும், ஆந்திரப் பிரதேச பிரிவு ஐஏஎஸ் அதிகாரியுமான விகாஸ் மர்மாட் மற்றும் அவருடன் இருந்தவர்கள் நான்கு பேர் காவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், அவர்களைத் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து, விகாஸ் மர்மாட் மற்றும் அவருடன் இருந்த மூவர் மீதும் கப்பன் பூங்கா காவல் நிலையத்தில் காவலர்கள் குற்றவியல் வழக்கு பதிவு செய்துள்ளனர். பெங்களூரு நகரக் காவல் ஆணையரின் உத்தரவின்படி, கப்பன் பார்க் மற்றும் அசோக் நகர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பார்கள் மற்றும் உணவகங்களில் சந்தேகத்திற்கிடமான நபர்களை ஆய்வு செய்யும் பணியில் தனது குழுவினருடன் (அதிகாரிகள் பி.எஸ். மகாதேவய்யா, ஏ.எஸ்.ஐ பலராம் நாயக், ஹரிஷ்சந்திரா, நிதின் ஈசபல்லி, கார்த்திக், நாகநாத் காளே, மிருத்யுஞ்சய், ஸ்ரீதர்) ஈடுபட்டிருந்தார். இரவு சுமார் 01:30 மணி அளவில், 'காவேரி' பப்பில் இருந்த வாடிக்கையாளர்களின் வயதை உறுதி செய்ய அடையாள அட்டைகளை ஆய்வு செய்தனர். அப்போது பப்பிற்கு வந்திருந்த 4 நபர்கள் (விகாஸ் மர்மத், அபய் உதய் சிங், நிதீஷ், ரோஷன்) தேவையில்லாமல் காவல் ஆய்வாளருடன் தகராறில் ஈடுபட்டு, தகாத வார்த்தைகளால் பேசி மிரட்டல் விடுத்துள்ளனர். அரசு அதிகாரியைப் பணி செய்ய விடாமல் தடுத்து, பிற ஊழியர்கள் மீதும் வீண் தகராறு செய்து, அநாகரிகமான வார்த்தைகளால் திட்டி, தாக்குதல் நடத்தி மிரட்டல் விடுத்ததால், விகாஸ் மர்மத் மற்றும் பிற நபர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு புகார் அளிக்கப் பட்டுள்ளது. இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டுள்ளது" இவ்வாறு எப்ஐஆரில் குறிப்பிடப்பட்டுள்ளது. பெங்களூரு போலீசார் பாரதிய நியாய சன்ஹிதாவின் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த மோதல் தொடர்பான காணொளிகள் இன்று சமூக ஊடகங்களில் வைரலாகின. இதனிடையே பணியில் இருந்த காவலர்களிடம் அநாகரிகமாக நடந்துகொண்டதாக ஐஏஎஸ் அதிகாரி மீது கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பாக இதுவரையில் போலீசார் எந்த மேல் நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த விவகாரம் தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை டேக் செய்து ஆந்திராவில் கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.இந்த விவகாரம் ஆந்திராவில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. அதேநேரம் அந்த ஐஏஎஎஸ் அதிகாரிக்கு ஆதரவாகவும் சிலர் கருத்துக்களை கூறியிருக்கிறார்கள். ஒரு நெட்டிசன் கூறுகையில்," காவலர்களும் கண்ணியமாக நடந்துகொள்ள வேண்டும். ஒரு ஐஏஎஸ் அதிகாரியிடமே அவர்கள் இப்படி நடந்துகொள்கிறார்கள் என்றால், சாதாரண பொதுமக்களிடம் எப்படி நடந்துகொள்வார்கள் என்று நினைத்துப் பாருங்கள். இருப்பினும், அந்த ஐஏஎஸ் அதிகாரியும் சற்று நிதானத்தைக் கடைப்பிடித்து தனது அடையாள அட்டையைக் காண்பித்திருக்கலாம்; பின்னர் அந்த அதிகாரி மீது அவரது மேலதிகாரிகளிடம் எளிதாகப் புகார் அளித்திருக்கலாம்" என்று தெரிவித்தார்.என்ன நடந்தது
₹20 டெண்டரே ஊழல் என்றால்.. ₹35 க்கு மின்சாரம் வாங்குவது என்ன கணக்கு? விஜய் அரசுக்கு கேள்விகள்
எப்ஐஆர் கூறுவது என்ன
62 லட்சம் குழந்தைகள் ஒரு பைலட் பிராஜக்ட் அல்ல.. கேக் திட்டத்திற்கு எதிர்ப்பு.. அரசுக்கு கோரிக்கை
சந்திரபாபு நாயுடுவை டேக் செய்த நெட்டிசன்கள்
காவலர்களும் கண்ணியமாக நடந்து கொள்ள வேண்டும்