“19 கி.மீ.. 3 மணி நேரம்!”.. பெங்களூர் டிராபிக்கில் சிக்கிய பெண்.. கடைசி 2 நிமிடத்தில் திக்திக்

  • பெங்களூர்: கர்நாடக தலைநகர் பெங்களூரில் டிராபிக் என்பது தவிர்க்கவே முடியாத பிரச்சினையாக மாறிவிட்டது. சில ஆண்டுகளுக்கு முன்பு வரை பிரதான சாலைகளில் மட்டுமே இருந்த டிராபிக் என்பது இப்போது நகரம் முழுக்க சிறிய சாலைகளும் கூட எதிர்கொள்ளும் ஒரு பிரச்சினையாகவே இருக்கிறது. அப்படி பெங்களூர் டிராபிக்கில் சிக்கிய பெண் ஒருவர் தனது அனுபவத்தை சமூக வலைத்தளத்தில் புலம்பி தள்ளி இருக்கிறார்.

    Advertisement

    பெங்களூருவில் போக்குவரத்து நெரிசல் என்பது அன்றாடம் எதிர்கொள்ளும் பிரச்சினையாக மாறிவிட்ட நிலையில், கனமழையால் மேலும் மோசமடைந்த போக்குவரத்து நெரிசலில் சிக்கிய பெண் ஒருவர் தனது அனுபவத்தை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். வெறும் 19 கி.மீ தூரத்தை கடக்க அவருக்கு 3 மணி நேரத்துக்கும் மேல் ஆனதாக தெரிவித்துள்ளார்.

    Advertisement

    பெங்களூர் டிராபிக்

    "உங்கள் நகரத்தை பற்றி தான் குற்றஞ்சாட்டுகிறேன். அதேநேரம் இந்த நகரம் எனக்கு ரொம்பவே பிடிக்கும்" என்ற தலைப்பில் சில்பா என்பவர் இன்ஸ்டாகிராமில் தனது அனுபவத்தை பகிர்ந்துள்ளார். அவர் எலக்ட்ரானிக் சிட்டியில் இருந்து கிருஷ்ணராஜபுரம் ரயில் நிலையத்துக்கு செல்ல வேண்டியிருந்தது. மாலை 7 மணிக்கு ரயிலை பிடிக்க வேண்டியிருந்ததால், மாலை 5 மணியளவில் வீட்டில் இருந்து புறப்பட்டதாக சில்பா தெரிவித்துள்ளார்.

    மேலும், ரயிலின் லைவ் லோக்கேஷனை டிராக் செய்தபோதும் அது ஏற்கனவே 2 மணி நேரம் தாமதமாக இருந்ததும் அவருக்கு தெரிந்திருந்தது. இதனால் ரயிலை ஈஸியாக பிடித்துவிடுவோம் என்றே நினைத்திருக்கிறார். ஆனால், பெங்களூர் டிராபிக் அவருக்கு வேறு பிளான் வைத்திருந்தது. அன்றைய தினம் பெங்களூரில் பெய்த கனமழை அவரது பயணத்தை மேலும் சிக்கலாக்கியது. சாலைகளில் வாகனங்கள் மெதுவாக நகர்ந்ததால், ரயில் நிலையத்தை சரியான நேரத்தில் சென்றடைய முடியுமா என்ற பதற்றம் ஏற்பட்டது.

    Advertisement

    19 கி.மீ. 3 மணி நேரம்!

    இது தொடர்பாக அவர், "பெங்களூருவில் கனமழை பெய்தது. அதனால் போக்குவரத்து இன்னும் மோசமாக இருந்தது. எலக்ட்ரானிக் சிட்டியில் இருந்து கிருஷ்ணராஜபுரம் ரயில் நிலையத்துக்கு 19 கி.மீ தூரத்தை கடக்க 3 மணி நேரத்துக்கும் மேல் ஆனது" என்று சில்பா தெரிவித்துள்ளார். ஒரு கட்டத்தில் ரயிலை நிச்சயம் மிஸ் செய்துவிடுவோம் என்றே அவர் நினைத்துள்ளார். இருப்பினும், ரயிலை டிராக் செய்ததில் அது தாமதமானதை உறுதி செய்த அவர், அதற்குள் ரயில் நிலையத்திற்கு செல்ல முடியுமா என பார்க்கலாம் என்று நினைத்தே ரயில்வே ஸ்டேஷன் சென்றுள்ளார்.

    Advertisement

    ஜஸ்ட் மிஸ்

    அவர் ரயில் நிலையத்துக்குள் சென்ற போது, ரயில் பிளாட்பார்மில் இருந்தது. இதனால் சூட்கேஸ்களுடன் வேகமாக ஓடி, பிளாட்வார்மிற்கு சென்றதாக சில்பா தெரிவித்துள்ளார். ரயில் புறப்படுவதற்கான அறிவிப்பும் வந்துவிட்ட நிலையில், ஓரிரு நிமிடங்கள் இருந்தபோது தான் ரயிலில் ஏறியிருக்கிறார். ஒருவழியாக ரயிலில் ஏறிய பிறகுதான் சில்பாவுக்கு நிம்மதி ஏற்பட்டுள்ளது.

    பாராட்டு

    இந்த அனுபவத்துக்கு பிறகு, தினமும் பெங்களூர் டிராபிக் உடன் போராடும் மக்களை நினைத்தால் பிரமிப்பாக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். அவர் மேலும், "19 கி.மீ. தூரம். 3 மணி நேரம். பிடிக்க வேண்டிய ஒரே ஒரு ரயில். இடையில் சுமார் 17 முறை பதறி போனேன். ஒரு கட்டத்தில் ரயில் போய்விட்டது.. பெங்களூர் டிராபிக் என்னை ஜெயித்துவிட்டது என்றும் நினைத்துவிட்டேன். ஆனால் எப்படியோ, எப்படியோ ரயிலை பிடித்துவிட்டேன்" என்று சில்பா குறிப்பிட்டுள்ளார். அவரது இந்த போஸ்ட் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. பலரும் சில்பா சொன்னது சரி என்றே அவரை பாராட்டி வருகிறார்கள்.

    English Summary

    A woman named Shilpa shared her experience of battling Bangalore Traffic after heavy rain made the congestion worse(உச்சத்தில் பெங்களூர் டிராபிக்): Bangalore Traffic latest news in tamil.