பெங்களூர் டூ புதுவை 300 கிமீ பைக்கில் பயணம்! போலீசிடம் சிக்காமல் இருக்க ஸ்வேதா போட்ட திட்டம்! மாட்டியது எப்படி?

  • பெங்களூர்: பெங்களூரில் தாய், தந்தை, சகோதரி என மூன்று பேரையும் கொன்று விட்டு காதலனுடன் தப்பி ஓடிய இளம்பெண் ஸ்வேதாவை புதுவையில் வைத்து போலீசார் கைது செய்தனர். போலீஸ் பிடியில் இருந்து தப்பிக்க செல்போன்களை ஸ்விட்ச் ஆப் செய்துவிட்டு இருவரும் பைக்கிலேயே பெங்களூரில் இருந்து புதுவைக்கு வந்து இருக்கிறார்கள். ஆனால், ஒரே ஒரு சின்ன தடயத்தை வைத்து ஸ்வேதாவை புதுவை வரை விரட்டி வந்த போலீசார் கையும் களவுமாக ஸ்வேதாவை பிடித்துள்ளனர்.

    Advertisement

    ஆண் நண்பருடன் லிவ் இன் உறவில் இருந்த பெங்களூர் ஸ்வேதா, பெற்றோர் கண்டித்ததால், தனது ஆண் நண்பர் கென்னத் உடன் இணைந்து தந்தை சோமசுந்தரம் (வயது 52), தாய் முத்துலட்சுமி ( 48) மற்றும் தங்கை சுப்ரியா (20) ஆகியோரை கொலை செய்துவிட்டு தலைமறைவு ஆனார்.. புதுவையில் வைத்து ஸ்வேதாவை போலீசார் கைது செய்தனர். அவர் அளித்த வாக்கு மூலத்தில், பெற்றோர் சுதந்திரமாகவே இருக்க விடவில்லை.

    Advertisement

    பரபரப்பு வாக்கு மூலம்

    என் தாய் என்னை ஒரு கைதி போலவே வைத்திருந்தார். இதுவே ஒரு கட்டத்தில் என் அம்மாவை வெறுக்க வைத்தது. இதனால் வங்கியில் ரூ. 30 லட்சம் கடன் வாங்கினேன். இதுவும் என் தாய்க்கு தெரிந்தது. அதையும் கண்டித்தார். இதனால் அடிக்கடி என்னை தொந்தரவு செய்து வந்தார். எனவே தான் வீட்டை விட்டு வெளியேறி கென்னத்துடன் குடியேறினேன்" என்று பரபரப்பு வாக்கு மூலம் அளித்துள்ளார்.

    இதற்கிடையே, கொலை செய்துவிட்டு கென்னத்தும், ஸ்வேதாவும் தமிழகத்திற்கு வந்து தலைமறைவு ஆக திட்டம் வகுத்ததாக கூறப்படுகிறது. போலீஸ் பிடியில் இருந்து தப்பிக்க செல்போன்களை ஸ்விட்ச் ஆப் செய்துவிட்டு இருவரும் பைக்கிலேயே பெங்களூரில் இருந்து புதுவைக்கு வந்து இருக்கிறார்கள். ஆனால், ஒரே ஒரு சின்ன தடயத்தை வைத்து ஸ்வேதாவை புதுவை வரை விரட்டி வந்த போலீசார் கையும் களவுமாக பிடித்தனர்.

    Advertisement

    செல்போன்களை சுவிட்ச் ஆஃப் செய்துவிட்டு

    இது பற்றி போலீஸ் வட்டாரங்களில் கூறப்படுவதாவது:- குடும்பத்தினரை கொலை செய்து விட்டு ஆண் நண்பருடன் பைக்கில் 300 கிலோ மீட்டர் தூரம் பயணித்து புதுவைக்கு ஸ்வேதாவும் கென்னத்தும் வந்துள்ளனர். போலீஸ் கண்டுபிடித்துவிடுவார்கள் என்பதால், டிஜிட்டல் பேமேண்ட் எதுவும் செலுத்தாமல், செல்போனை ஸ்விட்ச் ஆப் செய்துவிட்டு இருவரும் பயணித்துள்ளனர். ஆனாலும், ஹைவேயில் உள்ள டோல்கேட்களில் இருக்கும் சிசிடிவியை வைத்து டிரக் செய்த போலீசார், இருவரும் தமிழ்நாட்டிற்குள் நுழைந்ததை உறுதி செய்தனர்.

    மோட்டார் சைக்கிள் பழுதானதால்..

    இதையடுத்து, பல்வேறு சுங்கச்சாவடிகளில் உள்ள கேமிரா பதிவுகளை வைத்து ஸ்வேதாவை கண்டுபிடித்துள்ளனர். கென்னத்தின் சொந்த ஊரான திருச்சிக்கு செல்ல இருவரும் திட்டமிட்டு இருக்கலாம் என்றும் போலீசார் தெரிவித்தனர். அவர்கள் இருவரும் சென்ற போது பைக் பழுதாகியுள்ளது. இதனால், அந்த திட்டத்தை கைவிட்டுவிட்டு இருக்கிறார்கள்.

    Advertisement

    அப்போதுதான், புதுவையில் உள்ள ரயில் நிலையம் அருகே நின்று கொண்டிருந்த ஸ்வேதாவை போலீசார் சுற்றி வளைத்து இருக்கிறார்கள். இன்னும் தலைமறைவாக இருக்கும் கென்னத்தை போலீசார் தேடி வருகிறார்கள். பெங்களூரை அதிர்ச்சியில் உறைய வைத்த இந்த கொலை சம்பவம் குறித்து கென்னத் கைதுக்கு பிறகு மேலும் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகலாம் என சொல்லப்படுகிறது.

    English Summary

    Bangalore Woman Shweta After the Bengaluru triple murder, Shweta and her boyfriend allegedly switched off their mobile phones and travelled nearly 300 kilometres by motorcycle to Puducherry. Investigators, however, followed a crucial clue that ultimately led them to the couple and their arrest.