பெங்களூரு 5 ஸ்டார் ஹோட்டலில்.. வாட்ஸ்அப்பில் அந்த கோலத்தில் தோன்றிய பெண்! ஆடிப்போன கிரிக்கெட் வீரர்

  • பெங்களூரு: பெங்களூருவில் உள்ள 5 ஸ்டார் ஹோட்டலில், மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த 20 வயதான இளம் கிரிக்கெட் வீரர் ஒருவர் தங்கியிருந்தார்.. அப்போது நள்ளிரவில் வாட்ஸ்அப் வீடியோ கால் ஒன்று வந்துள்ளது.. அந்த வீடியோவில் ஒரு பெண் நிர்வாணமாக தோன்றியுள்ளார்.. இதனால் பதறிப்போன அந்த கிரிக்கெட் வீரர் என்ன செய்தார் தெரியுமா?

    Advertisement

    BCCI எனப்படும் இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் பெங்களூருவில் நடத்தப்பட்ட முக்கிய கிரிக்கெட் தொடரில் பங்கேற்பதற்காக, மகாராஷ்டிராவை சேர்ந்த அந்த வீரர் வந்திருந்தார்.. வட பெங்களூருவில் உள்ள 5 நட்சத்திர ஹோட்டலில் ரூம் போட்டு தங்கியிருந்தார்.

    Advertisement

    பெங்களூரு 5 நட்சத்திர ஹோட்டல்

    கடந்த ஜூலை 17-ம் தேதி நள்ளிரவு நேரத்தில், அவரது டேட்டிங் செயலி அக்கவுண்ட்டிற்கு ரஷிகா என்ற பெயரில் ஒரு பெண் மெசேஜ் அனுப்பியுள்ளார். கொஞ்ச நேரம் பேசியிருக்கிறார். பிறகு அந்த பெண் 8426051159 என்ற வாட்ஸ்அப் நம்பரை கொடுத்து, அதில் பேசுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

    தொடர்ந்து வாட்ஸ்அப்பில் பேசிய அந்த பெண், சிறிது நேரத்தில் வீடியோ காலில் பேசுமாறும் தூண்டியுள்ளார். வீடியோ அழைப்பின்போது அந்த பெண் திடீரென தன்னுடைய ஆடைகளைக் களைந்து ஆபாசமாகக் காட்சியளித்துள்ளார். இதை எதிர்பாராத அந்த இளம் வீரரும் ஆடைகளை களைந்து பேசியுள்ளார். சில நிமிடங்களில் அந்த வீடியோ அழைப்பு துண்டிக்கப்பட்டது.

    Advertisement

    வீடியோ கால் அழைப்பு

    அடுத்த சில நிமிடங்களில் அந்த பெண் மீண்டும் தொடர்புகொண்டு, வீடியோ கால் முழுவதையும் தனக்குத் தெரியாமல் பதிவு செய்து வைத்திருப்பதாக சொல்லி ஷாக் தந்துள்ளார்.. கேட்கும் பணத்தை கொடுக்காவிட்டால் இந்த ஆபாச வீடியோவை சோஷியல் வீடியோவில் அப்லோடு செய்து விடுவதாகவும், போலீசில் புகார் தந்து வாழ்க்கையையே அழித்து விடுவதாகவும் மிரட்டியிருக்கிறார்.

    இதனால் நடுநடுங்கிப்போன அந்த இளம் வீரர், உடனடியாக ரூ.1500 பணத்தை அனுப்பியுள்ளார். இருந்தாலும், அடுத்த நாள் மதியம் வரை, பணத்தை தருமாறு அந்த பெண் மிரட்டிக் கொண்டேயிருந்தார்.


    கிரிக்கெட் வீரர் முன் ஆபாசமாக நின்ற பெண்

    நிலைமை கைமீறிப்போவதை உணர்ந்த அந்த வீரர், இந்த விஷயத்தை தன்னுடைய நண்பர்களிடம் சொல்லி உள்ளார்.. சைபர் செக்ஸ்டார்ஷன் (Sextortion) கும்பலிடம் தான் சிக்கியிருப்பதை உணர்ந்த வீரர், உடனடியாக போலீசில் புகார் தந்தார்..

    Advertisement

    இந்த புகாரின் அடிப்படையில் போலீசாரும் விசாரணையை கையில் எடுத்துள்ளனர்.. மின்னணு வடிவில் ஆபாசப் பொருட்களை பரப்புதல், மிரட்டிப் பணம் பறித்தல் மற்றும் ஏமாற்றுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் தகவல் தொழில்நுட்ப சட்டம் மற்றும் பாரதிய நியாய சன்ஹிதா (BNS) பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக உள்ள நபரை காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

    கிரைம் போலீஸ் அட்வைஸ்

    இந்த சம்பவத்தையடுத்து, பெங்களூரு குற்றப்பிரிவு துணை ஆணையர் (DCP Crime-2) ராஜா இமாம் காசிம் பி பொதுமக்களுக்கு அலர்ட் ஒன்றை விடுத்துள்ளார். அதில், "சைபர் குற்றவாளிகள், பாதிக்கப்பட்டவர்களை ஒரு உண்மையான பெண்ணுடன் பேசுகிறார்கள் என்று நம்ப வைப்பதற்காக, ஏஐ மூலம் மூலம் உருவாக்கப்பட்ட வீடியோக்களையும், செயற்கை குரல்களையும் அதிகமாக பயன்படுத்தி கொண்டிருக்கிறார்கள்..

    Advertisement

    அதனால் முன்பின் தெரியாத நம்பர்களிலிருந்து வரும் வீடியோ அழைப்புகளை தவிர்க்க வேண்டும்.. ஒருவேளை அழைப்பை ஏற்க நேர்ந்தால் உடனே கேமராவை பின்புறமாக மாற்றி முகத்தை மறைத்து விடுங்கள்.. இதுபோன்ற சமரசத்திற்குரிய வீடியோக்கள் இணையத்தில் பதிவேற்றப்பட்டால் அதை உடனடியாக அகற்ற StopNCII (https://stopncii.org) என்ற வெப்சைட்டை பயன்படுத்துங்கள்" என்று அட்வைஸ் தந்துள்ளார்.

    இதனிடையே, பிசிசிஐ கிரிக்கெட் வீரர்களுக்கு ஹனிட்ராப் குறித்த விழிப்புணர்வு வழிகாட்டுதல்களை வழங்கி, ஹோட்டல் அறை பாதுகாப்புகளையும் பலப்படுத்தியுள்ளது...!!

    English Summary

    Bengaluru 5-Star Hotel.. Cricketer Shocked After Woman Appears Nude on WhatsApp Video Call