பெங்களூரில் சப்ளையாகும் காவிரி நீர் குடிக்க உகந்தது இல்லை.. மாசு கட்டுப்பாட்டு வாரியம் தகவல்

  • பெங்களூர்: பெங்களூர் நகரில் சப்ளை செய்யப்படும் காவிரி குடிநீர் குடிக்க உகந்தது இல்லை. இந்த தண்ணீரை விவசாயம் மற்றும் தொழிற்சாலைகளில் கூலிங் பயன்பாட்டுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். ஆனால் அந்த தண்ணீரை பொதுமக்கள் குடித்து வருகின்றனர் என்று கர்நாடகா மாநில மாசு கட்டுப்பாட்டு மையம் மேற்கொண்ட ஆய்வில் உறுதியாகி உள்ளது.

    Advertisement

    கர்நாடகாவில் பிறந்து தமிழகத்தில் பாயும் காவிரி ஆறு என்பது கர்நாடகா மற்றும் தமிழகத்துக்கு முக்கிய நீர் ஆதாரமாக உள்ளது. ஆனால் சமீப காலமாக காவிரி ஆற்றின் தண்ணீர் அதிகமாக மாசடைகிறது. காவிரி தண்ணீர் தமிழகம், கர்நாடகாவில் குடிநீர் பயன்பாட்டுக்கும், விவசாயத்துக்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

    Advertisement

    குறிப்பாக பெங்களூர் நகரின் குடிநீர் பயன்பாட்டுக்கு காவிரி ஆறு முக்கிய நீர் ஆதாரமாக உள்ளது. இந்நிலையில் தான் காவிரி ஆறு சமீப ஆண்டுகளாக அதிகமாக மாசடைந்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம் பெங்களூர் நகரின் சாக்கடை கழிவுநீர் சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலப்பது தான்.

    இந்நிலையில் தான் கர்நாடகா மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியம் தண்ணீர் தரத்தை ஆய்வு செய்து வகைப்படுத்தி உள்ளது. அதன்படி பெங்களூரில் பல இடங்களுக்கு சப்ளை செய்யப்படும் காவிரி நீர் குடிப்பதற்கு தகுதியற்றதாக உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்து.

    பெங்களூர் சர்ஜாபுரா, மகாதேபுரா பகுதிகளில் சப்ளை செய்யப்படும் காவிரி குடிநீர் 'இ' கேட்டகிரியில் வகைப்படுத்தப்பட்டுள்ளது. மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின்படி 'இ' கேட்டகிரியில் வகைப்படுத்தப்படும் தண்ணீர் குடிக்க உகந்தது இல்லை. இந்த தண்ணீரை விவசாயம், தொழில்துறையில் கூலிங் பயன்பாட்டுக்கு மட்டுமே பயன்படுத்த முடியும். இது குடிப்பதற்கு உகந்தது இல்லை என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இன்மூமல் குடிக்க தகுதியற்ற நீரை பெங்களூர் மக்கள் குடித்து வருவது உறுதியாகி உள்ளது.

    Advertisement

    அதேபோல் சாம்ராஜ்நகர், மண்டியா, ராமநகர் உள்ளிட்டஇடங்களுக்கு சப்ளையாகும் காவிரி நீர் 'சி' கேட்டகிரியில் உள்ளது. இந்த 'சி' கேட்டகிரி தண்ணீரை சுத்திகரிப்பு மற்றும் கிருமி நீக்கம் செய்த பிறகு குடிக்க பயன்படுத்தப்படலாம்.

    அதேபோல் கர்நாடகாவில் பிறக்கும் தென்பெண்ணையாறும் தமிழகத்தின் வழியாக தான் கடலில் கலக்கிறது. இந்த ஆறும் மாசடைந்து வருகிறது. இந்த ஆறும் 'இ' கேட்டகிரியில் வகைப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் கர்நாடகாவில் இருந்து தமிழகத்துக்கு வரும் காவிரி, தென்பெண்ணையாறு தண்ணீர் சுத்தமானது இல்லை என்பது உறுதியாகி உள்ளது.

    English Summary

    Bengaluru Cauvery Water: The Cauvery drinking water supplied in Bengaluru is not fit for consumption; it should be used solely for agriculture and industrial cooling purposes. However, a study conducted by the Karnataka State Pollution Control Board has confirmed that the public is consuming this water.