பெங்களூர் புறநகரில் திடீர் நிலநடுக்கம்.. பூமி குலுங்கியதில் அலறிய மக்கள்!

  • பெங்களூர்: பெங்களூர் புறநகர் பகுதியான திம்மோஜனஹள்ளி கிராமத்தில் இன்று திடீரென்று நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்த நிலையில் கர்நாடகா மாநில இயற்கை பேரிடர் கண்காணிப்பு மையம் மக்கள் அச்சப்பட தேவையில்லை என்று அறிவித்துள்ளது.

    Advertisement

    பெங்களூர் புறநகர் மாவட்டம் திம்மோஜனஹள்ளி கிராமத்தில் இன்று காலையில் திடீரென்று நிலநடுக்கம் ஏற்பட்டது. கிராமத்தில் உள்ள மக்கள் இந்த நிலநடுக்கத்தை உணர்ந்தனர். சில வீடுகளில் இருந்த பாத்திரங்கள் கீழே விழுந்தன.

    Advertisement

    இதனால் பயந்துபோன மக்கள் வீடுகளில் இருந்து வெளியேறி பொதுவெளியில் தஞ்சமடைந்தனர். இது அங்குள்ள மக்களை பரபரப்பாக்கியது.

    இதுபற்றி அறிந்தவும் அரசு அதிகாரிகள் அந்த கிராமத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். திம்மோஜனஹள்ளி கிராமத்தில் அருகே உள்ள அருகே நரகனஹள்ளி, கர்னலா, துபெகெகெரே உள்ளிட்ட கிராமங்களிலும் நிலஅதிர்வு உணரப்பட்டதாக கூறப்படுகிறது.

    முதற்கட்ட விசாரணையில் நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3 என்ற அளவில் பதிவாகி உள்ளது. அதிர்ஷ்டவசமாக எந்த சேதமும் ஏற்படவில்லை. இந்த நிலநடுக்கத்தை கர்நாடகா மாநில இயற்கை பேரிடர் கண்காணிப்பு மையம் உறுதி செய்துள்ளது.

    இதுதொடர்பாக அந்த மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''பெங்களூர் புறநகர் மாவட்டம் தொட்டப்பள்ளாப்புரா தாலுகாவில் உள்ள திம்மோஜனஹள்ளி கிராமத்தில் இன்று காலை 9.01 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. திம்மோஜனஹள்ளிகிராமத்தில் இருந்து வடக்கே 0.5 கிலோமீட்டர் தூரத்தில் பூமிக்கடியில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் நிலை கொண்டிருந்தது.

    Advertisement

    இந்த ரிக்டர் அளவில் 3 என பதிவாகி உள்ளது. மையம் கொண்டிருந்த பகுதியில் இருந்து 20-30 கிலோமீட்டர் சுற்றளவு வரை உணரப்பட்டுள்ளன. இந்த நிலநடுக்கம் லேசானது தான். மக்கள் நிலநடுக்கத்தை உணர்ந்து இருக்கலாம். அதேவேளையில் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு இல்லை. இதனால் பொதுமக்கள் அச்சப்படை தேவையில்லை. '' என கூறப்பட்டுள்ளது.

    English Summary

    Bengaluru Earthquake: An earthquake occurred suddenly today in Thimmojanahalli village, located in the outskirts of Bengaluru. While the incident caused alarm among the public, the Karnataka State Natural Disaster Monitoring Centre has stated that there is no need for people to be concerned.