மருதாணியை பார்க்க வந்த 60 வயது ஹவுஸ் ஓனர்.. வாடகை வீட்டு பெண்ணிடம் அசிங்கம்.. பெங்களூருவில் செம ஷாக்

  • பெங்களூரு: பெங்களூருவில் ஹவுஸ் ஓனர் ஒருவர், இளம்பெண்ணிடம் அநாகரீகமாக நடந்துகொண்டுள்ளார்.. தன்னிடம் குடியிருப்போருக்கு வழங்கப்பட வேண்டிய பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய வீட்டு உரிமையாளரே, இப்படியான கொடூர செயலில் ஈடுபட்டிருப்பதற்கு கண்டனங்கள் கிளம்பி உள்ளன.. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ஆனால், அந்த அதிர்ச்சி சாந்திநகர்

    Advertisement

    பெங்களூருவின் சாந்திநகர் பகுதியில் உள்ளது அந்த பிரபலமான அப்பார்ட்மென்ட்.. இந்த குடியிருப்பில் 2வது தளத்தில் வீடு எடுத்து தங்கி, தனியார் பல்கலைக்கழகம் ஒன்றில் 3ம் ஆண்டு படித்து வருகிறார் 20 வயது மாணவி.

    Advertisement

    கடந்த இரண்டரை மாதங்களாகத்தான் அங்கு தங்கி படித்து வருகிறாராம்.. இந்த வீட்டின் ஹவுஸ் ஓனர் கமலேஷ் குமாருக்கு 60 வயதாகிறது.. இவர் தனக்கு பாலியல் ரீதியாகத் தொல்லை கொடுத்ததாக மாணவி குற்றம் சாட்டியுள்ளார்.

    மருதாணி நல்லா இருக்கே

    கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி சாயங்காலம் அந்த சம்பவம் நடந்துள்ளது.. வீட்டை ரிப்பேர் செய்ய வேண்டும், அதனால் எங்கே பழுது உள்ளது என்று, ஒருமுறை பார்த்து கொள்கிறேன் என்று சொல்லிட, கமலேஷ் குமார் மாணவியின் வீட்டிற்குள் நுழைந்துள்ளார்.. அந்த நேரத்தில் மாணவி வீட்டில் தனியாக இருந்துள்ளார்.

    Advertisement

    பழுதுபார்ப்பு பணிகளை ஆய்வு செய்து முடித்த பிறகு, அந்த மாணவியிடம் மெல்ல பேச்சு தந்துள்ளார்.. மாணவியின் கல்லூரி வாழ்க்கை, அவரது தனிப்பட்ட விஷயங்கள் குறித்து விசாரிக்க தொடங்கியுள்ளார்.

    பிறகு, மாணவி கையில் வைத்திருந்த, மருதாணியை பார்ப்பதாக கூறி, திடீரென அவரது கையைப் பிடித்துள்ளார். பேசிக்கொண்டிருக்கும்போதே கையை இழுத்து பிடித்ததுமே மாணவி அதிர்ச்சியடைந்தார்.. உடனே தனது கையை விலக்க முயன்றார். ஆனால், கமலேஷ் குமார் அவரை விடாமல் வலுக்கட்டாயமாகத் தன்னை நோக்கி இழுத்து, இறுக்கமாக அணைத்துக்கொண்டுள்ளார்.

    பயப்படாதே..ம்மா

    மாணவி அங்கிருந்து நகரப் போராடிய நிலையிலும், அவர் விடவில்லை. மாணவியின் 2 கன்னங்களிலும் முத்தமிட்டு, "பயப்படாதே..ம்மா" என்று சொல்லி அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். பிறகு சிரித்துக்கொண்டே அங்கிருந்து கிளம்பியவர், "எனக்கு உன்னுடன் நிறைய நேரம் செலவிட ஆசை" என்று சொல்லிவிட்டு போனாராம்.

    Advertisement

    இந்த சம்பவத்தால் அதிர்ச்சியும் மன உளைச்சலும் அடைந்த மாணவி, உடனடியாக அசோக் நகர் போலீஸ் ஸ்டேஷனுக்கு புகார் அளித்துள்ளார். மாணவியின் புகாரின் அடிப்படையில், இந்திய நீதிச் சட்டத்தின் (BNS, 2023) கீழ் பெண்களின் கண்ணியத்திற்கு ஊறு விளைவிக்கும் வகையில் செயல்படுதல் (பிரிவு 74) மற்றும் பாலியல் துன்புறுத்தல் (பிரிவு 75) ஆகிய பிரிவுகளின் கீழ் கமலேஷ் குமார் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி, முறைப்படி நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

    ஹவுஸ் ஓனர் சொல்லும் காரணம்

    வீட்டு உரிமையாளரே, வாடகைக்கு இருக்கும் மாணவியிடம் இப்படி அத்துமீறி நடந்துகொண்ட சம்பவம், பெங்களூரு சாந்திநகர் பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

    Advertisement

    ஆனால் வீட்டு உரிமையாளர் கமலேஷ் குமார் போலீசாரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில், "தன் மீதான குற்றச்சாட்டுகள் பொய்யானவை.. மாணவி வாடகை பாக்கி குறித்து கேள்வி கேட்டேன். அதனால் கேட்டதால், பழிவாங்கும் நோக்கத்தில் இப்படி பொய்ப் புகார் அளித்து விட்டார்" என்று கமலேஷ் குமார் வாதிட்டுள்ளார்.

    இதில் யார் சொல்வது உண்மை என்று தெரியவில்லை.. அதனால் போலீசார் 2 தரப்பு புகார்களையும் ஒப்பிட்டு, தீவிர விசாரணையை நடத்தி கொண்டிருக்கிறார்கள்..

    எனினும், வீடுகளில் தனியாக தங்கி படிக்கும் பெண்களின் பாதுகாப்பு குறித்த கேள்விகளையும், அச்சத்தையும் இந்தச் சம்பவம் மீண்டும் விவாதத்திற்கு உள்ளாக்கியுள்ளது...!!

    English Summary

    Bengaluru House Owner Harasses 20 Year Old Tenant.. 60 Year Old Man Faces Complaint Over Shocking Act