மெட்ரோவ முடிச்சிட்டு ரோட்டுல கை வைங்க! WFH தர்றது கஷ்டம்.. பெங்களூர் ORR ஐடி கம்பெனிகள் அடம்!

  • பெங்களூர்: பெங்களூர் அவுட்டர் ரிங் ரோட்டை (ORR).. கான்கிரீட் சாலையாக மாற்றும் ஒயிட்-டாப்பிங் பணிகளுக்கு, ஐடி நிறுவனங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றன. சில்க் போர்டு முதல் கே.ஆர்.புரம் வரை சாலை பணிகள் மேற்கொள்ளப்பட இருக்கின்றன. ஆனால், முதலில் மெட்ரோ பணிகளை முடிக்க வேண்டும் என்றும்.. அதன் பின்னர் சாலை பணிகளை தொடங்க வேண்டும் இப்பகுதியில் உள்ள ஐடி நிறுவனங்கள் வலியுறுத்தியுள்ளன.

    Advertisement

    பெங்களூர் எதுக்கு பேமஸோ இல்லையோ.. டிராபிக் ஜாமுக்கு உலக புகழ் பெற்றது. காரில் அரை கி.மீ நகர்வதர்க்குள் ஆயுளே முடிந்துவிடும். இப்பேர்ப்பட்ட நெரிசலை கட்டுப்படுத்த அரசு தீவிரமாக முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று மக்கள் கேட்டு வரும் நிலையில்தான்.. தற்போது சொதப்பல் பிளானை அரசு மேற்கொண்டுள்ளது.

    Advertisement

    ORR நிறுவனங்கள்

    மொத்தம் 17.1 கி.மீ நீளம். ரிங் ரோடு முழுவதும் கான்கிரீட் சாலையாக மாற்ற ரூ.450 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. பிரச்சனை என்னவெனில் இந்த பகுதியில் ஏற்கெனவே மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருகின்றன. பெங்களூரின் நம்ம மெட்ரோவின் ப்ளூ லைன் இந்த பாதையில்தான் வருகிறது. இதற்கான பணிகள் முடிந்து, மெட்ரோ ரயில் சேவைகள் அடுத்த ஆண்டுதான் தொடங்க இருக்கிறது. எனவே அதுவரை சாலை பணிகளை தொடங்க கூடாது என்று இந்த பகுதியில் அமைந்திருக்கும் நிறுவனங்கள் வலியுறுத்தியிருந்தன.

    போக்குவரத்து நெரிசல்

    அவுட்டர் ரிங் ரோடு (ORR) பகுதியில் சுமார் 500க்கும் அதிகமான நிறுவனங்கள் இருக்கின்றன. இதில் 13 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வேலை பார்க்கின்றனர். எனவே, மெட்ரோ பணிகள் முடிவதற்கு முன்னர், சாலை பணிகள் தொடங்கப்பட்டால் நிச்சயம் போக்குவரத்து நெரிசல் அதிகமாகும் என்று இந்த நிறுவனங்கள் கூறியிருக்கின்றன. ஆக.4ம் தேதியன்று இந்நிறுவனங்களுடன் அரசு ஆலோசனை மேற்கொண்டது. ஆலோசனையின்போது இக்கருத்தை நிறுவனங்கள் தெரிவித்திருந்தன.

    Advertisement

    சொதப்பல் பிளான்

    இதை காதில் வாங்கிக்கொள்ளாத அரசு, சாலை பணிகளை அக்டோபர் மாதம் முதல் தொடங்குவதாக அறிவித்திருக்கிறது. போக்குவரத்து நெரிசலை சமாளிக்க ஊழியர்களுக்கு வொர்க் ஃபிரம் ஹோம் வழங்கவும் கேட்டுக்கொண்டிருக்கிறது. ஆனால், நிறுவனங்கள் இதற்கு சம்மதிக்கவில்லை. சரியான போக்குவரத்து மற்றும் உள்கட்டமைப்பு திட்டமிடல் இல்லாததற்கு.. வொர்க் ஃபிரம் ஹோம் என்பது மாற்று யோசனை கிடையாது என நிறுவனங்கள் கூறியிருக்கின்றன.

    அடம் பிடிக்கும் நிறுவனங்கள்

    நாங்கதான் ஆலோசனை கூட்டத்தில் தெளிவா சொல்லிட்டோமே.. தொழில்நுட்ப ஆய்வுகளும், மெட்ரோ பணிகளும் முடிவதற்கு முன்னாள் சாலை பணிகளை தொடங்க கூடாது என.. இப்போ வந்து வொர்க் ஃபிரம் ஹோம் கொடுக்க சொன்ன எப்படி தருவது? இதுபற்றி இன்னொரு ரவுண்டு ஆலோசனை கூட்டம் நடத்தனும். டிராபிக் ஜாம் ஆகாமல் இருக்க நடவடிக்கை எடுக்கணும். அதுவரைக்கும் சாலை பணிகளுக்கான டெண்டரை நிறுத்தி வைக்கணும் என நிறுவனங்கள் வலியுறுத்தியுள்ளன.

    Advertisement

    நிறுவனங்களுக்கும், அரசுக்கும் இடையில் மாட்டிக்கொண்டு தவிப்பது என்னவோ வேலை பார்க்கும் தொழிலாளர்கள்தான்.

    English Summary

    Bengaluru IT Firms on ORR Express Concern: IT companies have strongly opposed the 'white-topping' work intended to convert Bengaluru's Outer Ring Road (ORR) into a concrete road. Roadworks are scheduled to be carried out from Silk Board to K.R. Puram; however, IT companies in the area have insisted that Metro construction work be completed first before the roadworks begin.