ஆக்குபன்சி சான்றிதழ் வாங்கி 3 மாதங்களே ஆனது! பெங்களூருவில் இடிக்கப்படும் சொகுசு டவர்! என்ன காரணம்

  • பெங்களூரு: பெங்களூருவின் பரபரப்பான ஓசூர் சாலைக்கு அருகிலுள்ள குட்லு பகுதியில் "SNN ராஜ் எட்டர்னியா" என்ற சொகுசு குடியிருப்பு வளாகம் அமைந்துள்ளது. இந்த வளாகத்தில் உள்ள ஒரு டவருக்கு அரசாங்கத்திடம் இருந்து OC (Occupancy Certificate) எனப்படும் ஆக்குபன்சி சான்றிதழ் கிடைத்து வெறும் 3 மாதங்களே ஆன நிலையில், அந்த டவரை இடிக்கும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு வீடு வாங்கிய 49 குடும்பங்கள் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர்.. பல கோடி ரூபாய் முதலீடு செய்து வீடு வாங்கியவர்கள் தங்களின் சொத்து மற்றும் எதிர்காலம் குறித்து அச்சத்திலும் கவலையிலும் ஆழ்ந்துள்ளனர்.. என்ன நடந்தது?

    Advertisement

    பெங்களூருவின் குட்லு பகுதியில் "SNN ராஜ் எட்டர்னியா" என்ற குடியிருப்பு திட்டத்தில் மொத்தம் 15 டவர்களும், 972 வீடுகளும் வடிவமைக்கப்பட்டுள்ளன. இதில் 14 கோபுரங்கள் எந்தவிதமான பாதிப்பும் இல்லால் பாதுகாப்பாக உள்ளன.. எனவே அதிலுள்ள 822 வீடுகளுக்கான சாவிகள் ஏற்கனவே உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டு விட்டன.

    Advertisement

    பெங்களூரு சொகுசு டவர்

    ஆனால், 49 வீடுகள் கொண்ட அந்த ஒரு குறிப்பிட்ட கட்டிடத்தில், புதிய வீடுகளை உரிமையாளர்களிடம் ஒப்படைக்கவில்லை.. காரணம், "வாட்டர் லோட் டெஸ்ட்" எனப்படும் தண்ணீரை ஊற்றி பாரத்தை டெஸ்ட் செய்யும் ஆய்வு நடத்தப்பட்டது. அப்போது கட்டிடம் லேசாக சாய்ந்திருப்பது கண்டறியப்பட்டது.

    கட்டிடம் ஒரு பக்கமாகச் சாய துவங்கியதுமே, அஸ்திவாரம் கொஞ்சம் கீழ்நோக்கி அமுங்குவதும் அந்த ஆய்வில் தெரியவந்தது. உடனே அந்த நிலத்தின் மண் தன்மையை மறுபடியும் மறுபரிசோதனை செய்திருக்கிறார்கள்.. அப்பொழுதுதான் ஆரம்பத்தில் மண் பரிசோதனை செய்த பொறியியல் ஆலோசகர், மண்ணின் தாங்குதிறன் தொடர்பான தரவுகளை தவறாக பதிவு செய்திருந்தது தெரியவந்தது.

    Advertisement

    கோடி கோடியாக கொட்டி வாங்கிய வீடு

    வெளிப்புற பார்வைக்கு கட்டிடம் உறுதியாக தோன்றினாலும் இன்னும் 10 அல்லது 15 ஆண்டுகளில் ஆபத்தைச் சந்திக்க வாய்ப்புள்ளது என்பதை பில்டர் தரப்பு உணர்ந்தது.

    எந்த நேரத்திலும் அசம்பாவிதம் நடந்துவிடக் கூடாது என்பதால், SNN ராஜ் கார்ப் நிறுவனத்தின் இயக்குநர் அனுஜ் சஞ்சய் ஜெயின் கட்டிடத்தை இடித்து மீண்டும் கட்ட முடிவு செய்தார். பாதிக்கப்பட்ட குடும்பங்களை நேரில் அழைத்து நிலைமையை விளக்கினார்.

    "உங்களின் உயிர் பாதுகாப்புதான் எங்களுக்கு முக்கியம், அதனால் இந்த கட்டிடத்தை முற்றிலுமாக இடித்துவிட்டு, அஸ்திவாரத்தில் இருந்து ம்றுபடியும் புதிதாக கட்டி தருகிறோம்" என்று தெரிவித்தார். இதைக் கேட்டு உரிமையாளர்கள் ஏமாற்றம் அடைந்தாலும், பில்டரின் இந்த முடிவிற்கு ஆதரவு தெரிவித்தனர்.

    Advertisement


    ஆக்குபன்சி சான்றிதழ்

    GBA என்று சொல்லக்கூடிய பெருநகர பெங்களூரு அதிகார அமைப்பிடம் ஏற்கனவே பெற்ற ஆக்குபன்சி சான்றிதழை திரும்ப பெற்றுக்கொண்டு, கட்டிடத்தை இடிப்பதற்கான மனுவையும் பில்டர் கொடுத்துள்ளார்.

    இந்தக் கட்டிடத்தைப் பாதுகாப்பாக பிரித்து இடிக்க எப்படியும் 6 மாதங்கள் ஆகுமாம்.. அதன் பிறகு அஸ்திவாரத்தில் இருந்து மறுபடியும் பணிகளை முடித்து வீடுகளை ஒப்படைக்க 18 மாதங்கள் ஆகுமாம்.. அதாவது மொத்தம் 2 ஆண்டுகளில் புதிய கோபுரம் கட்டி முடிக்கப்பட்டு வீடுகள் ஒப்படைக்கப்படும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.

    சுற்றியுள்ள பிற வீடுகளுக்கும், மக்களுக்கும் எந்தவிதப் பாதிப்பும் ஏற்படாத வகையில், இந்த இடிப்புப் பணிகள் கவனமாக மேற்கொள்ளப்படும் என அதிகாரிகளும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

    Advertisement

    இருந்தாலும், பெங்களூருவின் கட்டுமானத் துறை மற்றும் கட்டிட அனுமதி வழங்கும் நடைமுறைகள் குறித்த பல்வேறு கேள்விகளையும், விவாதங்களையும் இந்த சம்பவம் எழுப்பியுள்ளது. பாதுகாப்பற்ற கட்டிடத்திற்கு எப்படி பயன்பாட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது? என்ற கேள்வி எழுந்துள்ளது?

    ஆக்குபேஷன் சர்ட்டிபிகேட் (Occupancy Certificate - OC) என்பது, ஒரு கட்டிடம் அனைத்து கட்டுமான விதிமுறைகளையும் பூர்த்தி செய்து, மக்கள் வசிப்பதற்கு பாதுகாப்பானது என்று உள்ளாட்சி அமைப்பு வழங்கும் அதிகாரப்பூர்வ சான்றிதழாகும்.. இந்த சர்ட்டிபிகேட் கிடைத்த பிறகுதான், அந்த கட்டிடத்தில் சட்டப்பூர்வமாக குடியிருக்கவும், பயன்படுத்தவும் அனுமதி வழங்கப்படும். அப்படிப்பட்ட சர்ட்டிபிகேட் எப்படி வழங்கப்பட்டது? அதிகாரிகள் மேற்கொண்ட ஆய்வில் அலட்சியம் நடந்ததா? என்ற கேள்விகளும் துளைத்து கொண்டு எழுந்துள்ளன....!!!

    English Summary

    Bengaluru Luxury Tower to Be Demolished Just 3 Months After Occupancy Certificate.. What Went Wrong?