பெங்களூருவில் கர்ப்பிணி தூங்கும்போது இப்படியா? 2 மனைவியும் ஓடி போனது இதனால்தானா? சிக்கிய பீர் முகமது

  • பெங்களூரு: கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நெஞ்சை பதறவைக்கும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது.. எத்தனையோ தம்பதிகள் குழந்தை பாக்கியத்துக்காக ஏங்கி தவித்து கொண்டிருக்கிறார்கள்.. ஆனால் இப்படியும் ஒரு கணவர் இருப்பாரா என்ற அதிர்ச்சியை 40 வயது பீர் முகம்மது ஏற்படுத்தி உள்ளார்.. என்ன நடந்தது பெங்களூருவில்? யாரிந்த பீர் முகம்மது?

    Advertisement

    பெங்களூரு சிக்கபானவாரா காவல் எல்லைக்கு உட்பட்ட எசருகட்டா சாலையில் வசித்து வருபவர் 40 வயதான முகமது பீர். இவருக்கு கடந்த 2 வருடங்களுக்கு முன்பு பெற்றோரின் சம்மதத்துடன் ஹசீனா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. ஹசீனாவுக்கு 35 வயதாகிறது..

    Advertisement

    கர்ப்படைந்த மனைவி

    தம்பதி இருவருமே மகிழ்ச்சியுடன் வாழ்க்கையை துவங்கினர்.. ஹசீனா கர்ப்பமடைந்தார். இந்த விஷயத்தை கணவரிடமும் சந்தோஷமாக சொல்லி உள்ளார்.. ஆனந்தத்தில் துள்ள வேண்டிய கணவரோ, இதைக்கேட்டு ஆத்திரம் அடைந்துள்ளார்.. இந்த குழந்தை வேண்டாம் என்றும் மனைவியிடம் சொல்லி உள்ளார்.. இதனால் அதிர்ந்து போன ஹசீனா, குழந்தையை கலைக்க முடியாது என்று கூறியிருக்கிறார், இதனால் தம்பதியிடம் தகராறு வலுத்து வந்துள்ளது.

    இப்போது ஹசீனா 8 மாத நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார்.. ஹசீனாவிடமும், வயிற்றில் வளரும் கருவை உடனடியாக கலைத்துவிடுமாறும் தொடர்ந்து வற்புறுத்தி, மிரட்டி வந்துள்ளார். ஆனால் குழந்தையை அழிக்க ஹசீனா திட்டவட்டமாக மறுத்துவிட்டார். தொடர்ந்து தகராறு செய்து வந்திருக்கிறார் கணவர்.

    Advertisement

    தலைமறைவு கணவர்

    இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூங்கி கொண்டிருந்த ஹசீனாவின் கழுத்தை நெரித்துள்ளார் முகமது பீர்.. இதனால் மூச்சு திணறி, அலறக் கூட முடியாமல் தவித்த ஹசீனா, சில நிமிடங்களிலேயே சுயநினைவிழந்து மயங்கி விழுந்து விட்டார்.. ஹசீனாவின் அசைவற்று படுத்து கிடப்பதை பார்த்த முகமது பீர், அவர் இறந்துவிட்டதாகவே முடிவு செய்தார். உடனே போலீஸிடமிருந்து தப்பிப்பதற்காக, வீட்டை பூட்டிவிட்டு அங்கிருந்து தப்பியோடி தலைமறைவானார்.

    ஆனால், ஹசீனாவுக்கு கொஞ்ச நேரம் கழித்து மயக்கம் தெளிந்தது.. கணவர் தன்னை கொலை செய்ய முயன்றதை உடனடியாக தன்னுடைய பெற்றோருக்கு தெரியப்படுத்தினார்.. விரைந்து வந்த குடும்பத்தினர், ஹசீனாவை மீட்டு, சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    Advertisement

    ஓடிப்போன 2 மனைவிகள்

    பிறகு ஹசீனாவின் குடும்பத்தினர் சிக்கபானவாரா போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தனர். அந்த புகாரில், உடனடியாக வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர்.

    அப்போதுதான் ஒரு பகீர் உண்மை தெரியவந்தது. அதாவது முகமது பீருக்கு ஏற்கனவே இரண்டு கல்யாணம் நடந்துள்ளது.. அந்த 2 மனைவிகளுமே கர்ப்பமாகி உள்ளனர்.. ஆனால அவர்களிடமும் குழந்தை வேண்டாம் என்று கலாட்டா செய்துள்ளார்.. இதனால் அந்த 2 பெண்களும் முகமது பீரை விட்டு பிரிந்து சென்றுவிட்டார்கள்.. அதனால்தான் 3வதாக ஹசீனாவை திருமணம் செய்தாராம். ஹசீனாவிடமும் இதே பிடிவாதத்தை முகமது பீர் காட்டி டார்ச்சர் செய்துள்ளதும் விசாரணையில் அம்பலமானது.

    Advertisement

    தற்போது தலைமறைவாக இருந்த முகமது பீரை தனிப்படை போலீசார் கைது செய்து விசாரித்து கொண்டிருக்கிறார்கள். இந்த சம்பவம் பெங்களூருவில் பரபரப்பை தந்து வருகிறது என்றாலும், குழந்தையே தனக்கு வேண்டாம் என்று முகமது பீர் சொல்ல என்ன காரணம் என்றுதான் தெரியவில்லை..!!!

    English Summary

    A 40-year-old Bengaluru man was arrested for attempting to kill his 8-month pregnant wife. The accused strangled her after she refused his demand to undergo an abortion. Police investigation revealed he had previously forced his two former wives to terminate pregnancies, leading to their separation. She is currently recovering in the hospital.