டேய் அது ‘கித்தார்'டா.. குழம்பிபோன ஏஐ கேமரா.. பெங்களூர் ஸ்கூட்டர் ரைடருக்கு ரூ.500 அபராதம்

  • பெங்களூர்: ஏஐ எனும் செயற்கை நுண்ணறிவு வந்துவிட்டது. இந்த ஏஐ அனைத்தையும் துல்லியமாக செய்யும் என்றால் கிடையாது. ஏஐ-யும் தவறுகள் செய்யும் என்பதற்கு உதாரணமாக பெங்களூரில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. பெங்களூரில் வசிக்கும் ஒருவர் தனது தோளில் கித்தார் கருவியை சுமந்து டூவீலரில் சென்றார். அப்போது கித்தார் கருவியை மனிதன் என நினைத்த ஏஐ கேமரா ஹெல்மெட் அணியவில்லை என்று ரூ.500 அபராதம் விதித்த சம்பவம் நடந்துள்ளது.

    Advertisement

    பெங்களூருவில் போக்குவரத்து விதிகளை மீறும் நபர்களை கண்டறிந்து அபராதம் விதிக்கும் வகையில் அதிநவீன ஏஐ கேமராக்கள் பல இடங்களில் பொருத்தப்பட்டுள்ளன.

    Advertisement

    இந்த கேமராக்கள் ஹெல்மெட் அணியாமல் செல்லும் வாகன ஓட்டிகளை கண்டுபிடித்தும், டிராபிக் சிக்னல்களை மதிக்காமல் செல்வோரை கண்டறிந்தும் அபராதம் விதிக்கும் பணியை மேற்கொண்டு வருகிறது.

    அந்த வகையில் சமீபத்தில் சவுவிக் தத்தா என்பவர் தனது மனைவியின் ஸ்கூட்டரில் ஹெப்பால் டின் பேக்டரி சாலையில் தனியாக சென்று கொண்டிருந்தார். அவர் தனது முதுகில் கித்தார் இசைக்கருவி இருந்த பேக்கை அணிந்தபடி சென்றார். சிக்னலில் இருந்த ஏஐ கேமரா அவரை படம்பிடித்தது.

    அவர் தனது முதுகில் அணிந்திருந்த கித்தார் பேக்கை மனிதர் என்று ஏஐ கேமரா புரிந்து கொண்டதோடு, பின்னால் இருக்கும் அந்த நபர் ஹெல்மெட் அணியவில்லை என்று ரூ.500 அபராதம் விதித்தது. இதற்கான அபராத செல்லான் புகைப்படத்துடன் சவுவிக் தத்தாவின் மனைவிக்கு அனுப்பி வைத்தது.

    Advertisement

    இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் உடனடியாக தனது கணவருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பிறகு சவுவிக் தத்தா தனது எக்ஸ் பக்கத்தில் கித்தார் உடன் தான் சென்ற போட்டோவை பகிர்ந்து நடந்த சம்பவத்தை விவரித்தார். ''நான் எனது மனைவியின் டூவீலரில் கித்தார் டன் சென்னேறன். ஆனால் பின்னால் இருந்த நபர் ஹெல்மெட் அணியவில்லை என்று என்னுடைய மனைவிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதனை திரும்ப பெற வேண்டும்'' என்று பெங்களூர் மாநகர போக்குவரத்து போலீசாரை டேக் செய்து குறிப்பிட்டு இருந்தார்.

    இதற்கு பெங்களூர மாநகர போக்குவரத்து போலீசார் பதிலளித்தனர். அதில் ''விதிமீறல் அபராதத்தை சரிசெய்ய தயவு செய்து automationpubbcp@ksp.gov.in என்ற முகவரிக்கு இ-மெயில் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் 080 - 22943381, 22942883 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்'' என்று கூறப்பட்டுள்ளது.

    Advertisement

    சவுவிக் தத்தாவின இந்த பதிவு நெட்டிசன்களின் கவனத்தை பெற்றது. பலரும் சவுவிக் தத்தாவின் அபராதத்தை ரத்து செய்ய வேண்டும் என்று கூறினர். அதோடு இன்னும் சிலரோ, ''ஏஐ வந்துவிட்டது. ஏஐ-யை நம்பினால் துல்லியமாக பணிகளை செய்ய முடியும் என்று எண்ணுவோருக்கு இது ஒரு பாடம். ஏஐ-யும் தவறுகள் செய்யும்'' என்று கூறி வருகின்றனர்.

    English Summary

    In Bengaluru, a person riding a two-wheeler with a guitar slung over his shoulder was fined Rs.500; an AI camera mistook the guitar for a human and issued the penalty for not wearing a helmet.