என் குழந்தைகள் இப்படியா வளரனும்? பெங்களூர் 5 ஸ்டார் ஓட்டலில்.. தந்தை செய்த செயல்! கர்நாடகா ஷாக்

  • பெங்களூர்: மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்த கணவன், தனது 2 குழந்தைகளையும் கொன்றுவிட்டு.. தானும் தற்கொலைக்கு முயன்றுள்ள சம்பவம் பெங்களூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

    தனியார் கார் நிறுவனத்தில் மேனேஜராக வேலை செய்து வரும் எஸ்.ஜி.இம்ரான் என்பவர், நேற்று பெங்களூர் விமான நிலையத்திற்கு பக்கத்தில் உள்ள 5 நட்சத்திர ஓட்டலில் ரூமை வாடகைக்கு எடுத்திருக்கிறார்.

    பெங்களூரின் நாகவாரா பகுதியை சேர்ந்த இவர், தனது 10 மற்றும் 5 வயது இரண்டு மகள்களுடன் இந்த அறையில் தங்கியிருக்கிறார். ஆனால், நீண்ட நேரமாகியும் அறையின் கதவு திறக்கப்படாமல் இருந்திருக்கிறது. ரூம் சர்வீஸுக்கு வருபவர்கள் நீண்ட நேரம் கதவை தட்டியும் கதவு திறக்கப்படாமல் இருந்திருக்கிறது.

    எனவே சந்தேகத்தின் பேரில், ஓட்டல் மேனேஜ்மென்ட் ஆட்கள் கதவை திறந்து பார்த்திருக்கின்றனர். அப்போது அவர்கள் கண்ட காட்சி.. அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

    அதாவது படுக்கையில் குழந்தைகள் இருவரும் சடலமாக கிடந்திருக்கின்றனர். இம்ரான் கழிப்பறையில் கழுத்து அறுப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் துடித்துக்கொண்டிருந்தார். உடனே அவரை மீட்ட ஊழியர்கள் மருத்துவமனையில் அனுமதித்திருக்கின்றனர்.

    சம்பவம் குறித்து கேள்விப்பட்ட போலீசார், உடனே சம்பவ இடத்திற்கு வந்து விசாரணையை தீவிரப்படுத்தினர். விசாரணையில், தற்கொலைக்குறிப்பு கிடைத்திருக்கிறது. அதில், தனது மனைவியின் நடத்தை மீது தனக்கு சந்தேகம் இருந்ததாக இம்ரான் குறிப்பிட்டிருக்கிறார். இதற்கான அதாரம் தன்னிடம் இருப்பதாகவும், இப்படிப்பட்டவரிடம் தன்னுடைய குழந்தைகள் வளரக்கூடாது என்பதால், குழந்தைகளை கழுத்தை நெறித்து கொன்றுவிட்டது.. தானும் தற்கொலை செய்ய முயன்றதாக குறிப்பிட்டிருக்கிறார்.

    இதையடுத்து மருத்துவமனையில் தீவிர அவசர சிகிச்சையில், உயிருக்கு போராடிக்கொண்டிருக்கும் இம்ரான் மீது கொலை வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணையை மேலும் தீவிரப்படுத்தியிருக்கின்றனர்.

    மனைவியின் நடத்தையில் சந்தேகம் கொண்டு, 2 குழந்தைகளை கொன்று.. தந்தையும் தற்கொலைக்கு முயன்றுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

    தற்கொலை எதற்கும் தீர்வல்ல
    தற்கொலை எண்ணங்கள் அல்லது மன அழுத்தம் இருந்தால், கீழ்க்கண்ட உதவி எண்களைத் தொடர்பு கொள்ளலாம்:
    TeleMANAS: 1-800-891-4416 / 14416
    NIMHANS: 080-26685948

    English Summary

    Bengaluru: An incident in Bengaluru has caused shock: a husband, suspicious of his wife's conduct, killed his two children and attempted to take his own life.