16 மணி நேரத்தில் பெங்களூரு-மும்பை.. 10-ஆம் தேதி முதல் படுக்கை வசதி வந்தே பாரத் ரயில்? முழு விவரம்

  • பெங்களூரு: படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயில் சேவை தென்னிந்தியாவில் எப்போது இயக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது. இந்நிலையில் தென்னிந்தியாவின் முதல் படுக்கை வசதி வந்தே பாரத் ரயில் சேவை, பெங்களூரு-மும்பை இடையே வருகிற 10-ஆம் தேதி தொடங்கப்பட வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

    Advertisement

    இந்தியாவில் ஒரே நாளில் முக்கிய நகரங்களுக்குச் சென்று திரும்பும் வகையிலான பகல் நேர வந்தே பாரத் ரயில் சேவைக்கு நல்ல வரவேற்பு உள்ளது. தமிழ்நாட்டில் இயங்கும் அனைத்து வந்தே பாரத் ரயில்களுமே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. அதேபோல் பெங்களூரு, மைசூரு, மங்களூரு, கோவா, ஹைதராபாத், விஜயவாடா, மும்பை, டெல்லி, கொல்கத்தா எனப் பல்வேறு வழித்தடங்களிலான வந்தே பாரத் ரயில் சேவைகளுக்கும் அமோக வரவேற்பு இருக்கிறது.

    Advertisement

    ஆனால் இதுவரை இயக்கப்பட்டு வரும் வந்தே பாரத் ரயில்கள் இருக்கை வசதி (Seater) கொண்டவை மட்டுமே. இதனால் படுக்கை வசதி (Sleeper) கொண்ட வந்தே பாரத் ரயில்களை இயக்க இந்திய ரயில்வே திட்டமிட்டு வருகிறது. அதிவிரைவு வந்தே பாரத் படுக்கை வசதி ரயில்கள் இரவில் இயக்கப்பட்டால், தொலைதூர நகரங்களுக்கும் இயக்க முடியும். இந்தத் திட்டப்படி, நாட்டின் முதல் படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயில் ஹவுரா (கொல்கத்தா) - கவுகாத்தி இடையே கடந்த ஜனவரி மாதம் தொடங்கப்பட்டது. இதற்குப் பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது.

    Advertisement

    இந்த நிலையில், நாட்டின் 2-வது படுக்கை வசதி வந்தே பாரத் ரயில் சேவையை இந்தியாவின் சிலிக்கான் வேலி என்று போற்றப்படும் பெங்களூரு மற்றும் நாட்டின் வர்த்தகத் தலைநகரான மும்பை இடையே இயக்க முடிவு செய்யப்பட்டது. பெங்களூரு - மும்பை இடையே தற்போது ஒரே ஒரு தினசரி அதிவேக ரயில் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது. அந்த ரயிலின் பயண நேரம் 24 மணி நேரமாக உள்ளது.

    இதனால் பயணிகளின் வேண்டுகோளுக்கு இணங்க, வந்தே பாரத் படுக்கை வசதி ரயிலை இயக்க இந்திய ரயில்வே முடிவு செய்தது. இதற்காகச் சென்னையில் உள்ள ரயில் பெட்டிகள் தயாரிப்புத் தொழிற்சாலையில் (ICF) 2 தொகுப்பு படுக்கை வசதி வந்தே பாரத் ரயில்கள் தயாரிக்கப்பட்டிருக்கின்றன.

    Advertisement

    10-ஆம் தேதி தொடக்கம்?

    இந்த 2 தொகுப்பு வந்தே பாரத் ரயில்கள் அண்மையில் பெங்களூருவுக்கு வந்தடைந்தன. ஒரு ரயில் கண்டோன்மென்ட் ரயில் நிலையத்திலும், மற்றொரு ரயில் பங்காருபேட்டை அருகே உள்ள வரதாபுரா ரயில் நிலையத்திலும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் பெங்களூரு - மும்பை இடையே படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயில் சேவை வருகிற 10-ஆம் தேதி தொடங்க உள்ளதாகவும், இதனை மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தொடங்கி வைக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

    இந்த ரயில் பெங்களூரு - மும்பை இடையே திங்கட்கிழமையைத் தவிர மற்ற 6 நாட்களும், மும்பை - பெங்களூரு இடையே செவ்வாய்க்கிழமையைத் தவிர மற்ற 6 நாட்களும் இயங்கவுள்ளதாகத் தெரிகிறது.

    Advertisement

    பெங்களூரு - மும்பை வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கப்பட்டால் 24 மணி நேரப் பயண நேரம், வெறும் 16 மணி நேரமாகக் குறையும். இந்த ரயில் பெங்களூரு எஸ்.எம்.வி.டி. (SMVT) ரயில் நிலையத்திலிருந்து இரவு 10 மணிக்குக் கிளம்பி, மறுநாள் மதியம் 1.50 மணிக்கு மும்பையைச் சென்றடையும் என்றும்; மும்பையிலிருந்து இரவு 10.30 மணிக்குக் கிளம்பி, மறுநாள் மதியம் 2.50 மணிக்கு பெங்களூருவை வந்தடையும் என்றும் கால அட்டவணை தயார் செய்யப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

    இந்த ரயில்கள் அனந்தபூர், குண்டக்கல், ராய்ச்சூர், கல்புரகி, சோலாப்பூர் மற்றும் கல்யாண் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் எனக் கூறப்பட்டுள்ளது. இந்த ரயிலின் சேவை தொடங்கும் நாள், கட்டண விவரம்

    English Summary

    There is growing anticipation regarding when the Vande Bharat train service featuring sleeper facilities will be launched in South India. Amidst this, reports indicate that the first sleeper-class Vande Bharat train in the region is likely to be introduced on the Bengaluru–Mumbai route on the 10th of this month.