பெங்களூரை புரட்டிப்போட்ட கனமழை.. இன்று முதல் 3 நாள் ‘மஞ்சள் அலர்ட்'.. மக்களே உஷார்

  • பெங்களூர்: பெங்களூர் நகரில் நேற்று மாலை முதல் அதிகாலை 3 மணி வரை விடியவிடிய பல இடங்களில் சூறைக்காற்றுடன் ஆலங்கட்டி மழையும், கனமழையும் கொட்டி தீர்த்தது. இதனால் நகரின் தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கி வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தான் கனமழை இன்னும் முடியவில்லை. இன்று முதல் அடுத்த 3 நாட்கள் வரை பெங்களூர் நகருக்கு 'எல்லோ அலர்ட்' விடுக்கப்பட்டுள்ளது. இந்த 'எல்லோ அலர்ட்' என்பது என்ன? என்பது பற்றி இங்கு பார்க்கலாம்.

    Advertisement

    பெங்களூரில் நகரில் தற்போது கோடை மழை பெய்து வருகிறது. நேற்று மாலை முதல் இன்று அதிகாலை வரை நகரின் பல்வேறு பகுதிகளில் சூறைக்காற்றுடன் கனமழை கொட்டி தீர்த்தது.

    Advertisement

    நேற்று மாலை 6 மணியில் இருந்து நகரின் பல இடங்களில் ஆலங்கட்டி மழை பெய்தது. அதன்பிறகு, இரவிலும் கனமழை கொட்டி தீர்த்தது. அதிகாலை 3 மணிவரை நகரின் பல இடங்களில் விட்டு விட்டு கனமழை பெய்தது. இதனால் பல இடங்களில் தண்ணீர் தேங்கியிருந்தது.

    சில இடங்களில் மரக்கிளைகள் முறிந்து விழுந்து கார்கள் சேதமடைந்தன. பல இடங்களில் மின்சாரம் தடைப்பட்டது. மெட்ரோ ரயில்கள் பாதி வழியில் நிறுத்தப்பட்டன. இதனால் மாலை மற்றும் இரவு நேரங்களில் பெங்களூரில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. அலுவலகங்கள் முடிந்து வீட்டுக்கு செல்வோர் சிரமத்தை எதிர்கொண்டனர்.

    Advertisement

    இந்நிலையில் தான், பெங்களூர் நகருக்கு 'எல்லோ அலர்ட்' விடுக்கப்பட்டுள்ளது. நேற்று வரை 'ஆரஞ்சு அலர்ட்' விடுக்கப்பட்டு இருந்த நிலையில் இன்று முதல் வரும் 25ம் தேதி வரை 3 நாட்கள் பெங்களூர் நகருக்கு 'எல்லோ அலர்ட்' விடுத்துள்ளது.

    இந்திய வானிலை ஆய்வு மையம். 'எல்லோ அலர்ட்' விடுக்கப்படும்போது 24 மணிநேரத்தில் நகரில் குறைந்தபட்சம் 64.5 மில்லி மீட்டர் (அறுபத்து நான்கரை சென்டிமீட்டர் மழை) முதல் அதிகபட்சமாக 115.5 மில்லி மீட்டர் (பதினொன்றரை சென்டிமீட்டர் மழை) மழை வரை பெய்ய வாய்ப்பு இருக்கும்.

    இதுபற்றி இந்திய வானிலை ஆய்வு மையத்தின் மூத்த ஆய்வாளர் சிஎஸ் பட்டீல் கூறுகையில், ''தென்மேற்கு பருவமழை கேரளாவில் மே 26ம் தேதி தொடங்க உள்ளது. இன்னும் 4 நாட்கள் தான் உள்ளது. இது கர்நாடகாவிலும் எதிரொலிக்கலாம். கர்நாடகாவில் ஜூன் மாதம் முதல் வாரத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்க வாய்ப்புள்ளது'' என்றார்.

    English Summary

    Bengaluru Rain: The India Meteorological Department (IMD) issued a yellow alert for Bengaluru, forecasting continuous showers till May 25, after heavy rain and gusty winds lashed parts of the city till 3 a.m. on May 22.