நட்சத்திர ஓட்டல் 4வது மாடி.. கதவை திறந்த பெங்களூரு மேனேஜர்.. துபாய் கெஸ்ட் என தங்கியவர் பின்னணி என்ன

  • பெங்களூரு: பெங்களூரு நகரை அதிர வைத்துவிட்டது இந்த கொடூர சம்பவம்! KIA அதாவது கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்திற்கு மிக அருகே உள்ள காஸ்ட்லி 5 நட்சத்திர ஹோட்டலில், 2 குழந்தைகளையும் கொன்று தற்கொலைக்கு செய்து கொண்டுள்ளார் கணவர்.. இது தொடர்பான விசாரணையை போலீசார் நடத்தி வரும் நிலையில், இச்சம்பவம் குறித்து கூடுதல் தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளன.

    Advertisement

    பெங்களூரு நாகவாரா மெயின் ரோடு அருகே உள்ள பிலால்நகரைச் சேர்ந்தவர் எஸ்ஜி இம்ரான்.. இவருக்கு 40 வயதாகிறது.. தனியார் Cab நிறுவனத்தில் மேனேஜராக வேலை பார்த்து வருகிறார்.

    Advertisement

    தனது 10 மற்றும் 5 வயதுடைய இரு பெண் குழந்தைகளுடன் கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்திற்கு அருகே உள்ள 5 நட்சத்திர ஹோட்டல் அறையில் தங்கியிருந்தார்.. அப்போது இவரது அறைகக்தவு நீண்ட நேரமாக திறக்கப்படாததால் மாற்றுச் சாவியைக் கொண்டு திறந்த ஹோட்டல் ஊழியர்கள் உள்ளே சென்று பார்த்தனர்.

    ஐசியூவில் தீவிர சிகிச்சை

    அப்போது கட்டிலின் மீது 2 குழந்தைகளும் சடலமாகக் கிடக்க, கழிவறையில் கழுத்து அறுபட்டுக் குருதி வெள்ளத்தில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார் இம்ரான்.. உடனே அவரை மீட்டு மணிப்பால் மருத்துவமனையில் ஐசியூவில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்துள்ளனர்.

    Advertisement

    சம்பவ இடத்திலிருந்து கைப்பற்றப்பட்ட கடிதத்தில், தனது மனைவியின் கள்ளத்தொடர்பு குறித்து தனக்கு சந்தேகம் இருந்ததாகவும், அதற்கான ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாகவும், இப்படிப்பட்ட தாயிடம் தனது குழந்தைகள் வளரக் கூடாது என்பதற்காகவே அவர்களைக் கழுத்தை நெரித்துக் கொன்றுவிட்டுத் தானும் தற்கொலைக்கு முயன்றதாகவும் இம்ரான் எழுதி வைத்துள்ளார்..

    இதையடுத்து, இம்ரான் மீது வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் இந்த சம்பவம் குறித்துத் தீவிர விசாரணையை கையிலெடுத்தனர். இதில் முதல் கட்டமாக சில தகவல்கள் வெளியாகி உள்ளன.

    இம்ரானின் மூத்த மகள் ஷேக் ஜோயாவுக்கு 10 வயதாகிறது.. 2வது ஷேக் ஜெஹ்ராவுக்கு 5 வயதாகிறது.. இவர்கள் 2 பேரையும் அழைத்து கொண்டு, ஞாயிற்றக்கிழமை இவு 7.30 மணிக்கு, ச்ம்பந்தப்பட்ட 5 ஸ்டார் ஹோட்டலுக்கு வந்துள்ளார் இம்ரான்..

    Advertisement

    5 ஸ்டார் ஹோட்டல் ஊழியர்கள்

    ஹோட்டல் ஊழியர்களிடம், "நள்ளிரவுக்கு மேல் துபாயில் இருந்து என் கெஸ்ட் ஒருவர் வருகிறார், அவரை வரவேற்பதற்காகத்தான் ரூம் எடுத்துள்ளேன்.. திங்கள்கிழமை காலையிலேயே காலி செய்துவிடுகிறேன்" என்று சொல்லி 4வது மாடியில் ரூம் எடுத்துத் தங்கியுள்ளார்.

    ஆனால், திங்கள்கிழமை காலை, அவர் சொன்னபடி செக்-அவுட் செய்யவில்லை. இதனால் சந்தேகமடைந்த ஹோட்டல் பணிப்பெண்கள் மதியம் 12.30 மணிக்கு சென்று கதவைத் தட்டியுள்ளனர். எந்தப் பதிலும் இல்லை. மீண்டும் மாலை 4.30 மணிக்கும் கதவைத் தட்டிப் பார்த்துள்ளனர்.. அப்போதும் உள்ளிருந்து மூச்சுப் பேச்சுக்கூட வரவில்லை. கடைசியில் மாலை 5.30 மணியளவில் ஹோட்டல் மேனேஜர் மாற்று சாவியை பயன்படுத்தி கதவைத் திறந்து உள்ளே சென்று பார்த்துள்ளார்.

    Advertisement

    கட்டிலில் 2 குழந்தைகள்

    கட்டிலின் மீது 5 வயது ஜெஹ்ராவும், 10 வயது ஜோயாவும் சலனமின்றிப் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.. கழிவறைக்கு சென்று பார்த்தபோது, இம்ரான் கத்தியால் தனது கழுத்தை அறுத்துக்கொண்டு, ரத்த வெள்ளத்தில் மயங்கிக் கிடந்துள்ளார். அதிர்ச்சியடைந்த நிர்வாகம் உடனே ஆம்புலன்ஸுக்குத் தகவல் தெரிவிக்க, மாலை 6 மணியளவில் வடகிழக்கு மண்டல காவல் துணை ஆணையர் மிதுன் குமார் ஜி.கே தலைமையிலான போலீஸ் டீம் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளது.

    3 பேரையும் மீட்டு மணிப்பால் மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற நிலையில், 2 குழந்தைகளும் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். கழுத்து அறுபட்ட நிலையில் இம்ரானுக்கு ஐசியூவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால் இப்போது அவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக கூறுகிறார்கள். கழுத்து அறுக்க முயன்றதால், தொண்டையில் பலமான காயங்கள் உள்ளதாம்.

    Advertisement

    இம்ரான் எழுதிய கடிதம்

    சம்பவ இடத்தில் நடத்திய சோதனையில் இம்ரான் எழுதிய கடிதம் சிக்கியது. அதில், "என் மனைவியின் கள்ளத்தொடர்பால் நான் வாழ்க்கையில் முற்றிலும் வெறுப்படைந்துவிட்டேன். அவளது தவறான நடத்தைக்கு என்னிடம் அனைத்து ஆதாரங்களும் உள்ளன. அவள் என்னை மிகவும் காயப்படுத்திவிட்டாள்.

    இப்படிப்பட்ட ஒரு தாயுடன் எனது குழந்தைகள் வளர்வதை நான் விரும்பவில்லை. அதனால் தான் அவர்களைக் கொன்றுவிட்டு நானும் தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்தேன். என் மகள்களை என்னோடு அழைத்துச் செல்கிறேன்" என்று எழுதியிருந்தார்.

    போன் செய்த ஹோட்டல் மேனேஜர்

    இம்ரான் தனது பெண் குழந்தைகளை கொன்றதை ஒப்புக்கொண்டுள்ளதாகவும், அவர் மீது முறைப்படி கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுத் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் பெங்களூரு காவல் துறை தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து DCP மிதுன் குமார் ஜி.கே செய்தியாளர்களிடம் பேசும்போது, "சாயங்காலம் ஹோட்டல் பாதுகாப்பு மேனேஜரிடமிருந்து எங்களுக்கு போன் வந்தது. 2 பெண் குழந்தைகள் உயிரிழந்திருப்பதாகவும், ஒரு நபர் உயிருக்குப் போராடிக்கொண்டிருப்பதாகவும் தகவல் கிடைத்தது. உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்று சோதனையிட்டோம்.

    உண்மையிலேயே கள்ளத்தொடர்பா

    இம்ரான் மீதான கொலை வழக்கைப் பதிவு செய்யப்பட்டுள்ளது.. இந்த முடிவுக்கு மனைவியின் கள்ளத்தொடர்புதான் உண்மையான காரணமா அல்லது வேறு ஏதேனும் பின்னணி உள்ளதா என்பது குறித்து அவரது குடும்பத்தினரிடம் விசாரணையை துரிதப்படுத்தி வருகிறோம்.. ஓட்டலில் உள்ள சிசிடிவி கேமராக்களையும் ஆய்வு செய்து வருகிறோம்.. குழந்தைகளின் போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டை எதிர்நோக்கி உள்ளோம்" என்றார்.

    தனது பெற்ற மகள்களையே கழுத்தை நெரித்துக் கொன்றுவிட்டுத் தந்தையும் தற்கொலைக்கு முயன்ற இந்தச் சம்பவம் பெங்களூருவையே உலுக்கியுள்ளது.

    முன்னதாக, ஹோட்டல் அறைக்கதவை எவ்வளவு தட்டினாலும், சத்தம் இல்லை, அதனால் சந்தேகப்பட்டு ஊழியர்கள் உள்ளே நுழைந்து பார்த்ததாக ஒரு தரப்பில் சொல்கிறார்கள். மற்றொரு தரப்பில், குழந்தைகள் மற்றும் இம்ரானின் அலறல் சத்தம் வெளியே கேட்டதால்தான், ஹோட்டல் ஊழியர்கள் மற்றும் செக்யூரிட்டிகள் அறைக்குள் நுழைந்து பார்த்துள்ளனர் என்று மற்றொரு தகவலும் சொல்லப்படுகிறது. இது தொடர்பான விசாரணையும் நடக்கிறது.

    English Summary

    Bengaluru Star Hotel's 4th Floor.. Manager Opens Door to a Shocking Scene.. Who Was the Dubai Guest?