பெங்களூரை விட்டு மொத்தமாக வெளியேறும் மக்கள்.. ஐடி நிறுவனங்கள் மூடப்படும்! 2027 பிப்., பேராபத்து - ஜோதிடர் கணிப்பு

  • பெங்களூர்: 2027 பிப்ரவரி மாதத்தில் இருந்து பெங்களூரில் தண்ணீர் பஞ்சம் அதிகரிக்கும். இதனால் ஐடி நிறுவனங்கள் மூடப்படும். ஊழியர்களுக்கு 'வொர்க்ப்ரம் ஹோம்' கொடுக்கப்படுவோடு, நகரில் உள்ள மக்கள் தண்ணீர் பிரச்சனையை சமாளிக்க முடியாமல் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள் என்று ஜோதிடர் பிரசாந்த் கினி கணித்துள்ளார். நேபாளத்தில் 2025ல் ஆட்சி கவிழும், இந்தியாவில் பெட்ரோல், டீசல், கியாஸ் தட்டுப்பாடு ஏற்படும் என்று அவர் கணித்தது அப்படியே பலித்த நிலையில் தற்போது இந்த கணிப்பு அதிக கவனம் பெற்றுள்ளது.

    Advertisement

    Photo Credit:

    இதுதொடர்பாக ஜோதிடர் பிரசாந்த் கினி கூறியுள்ளதாவது: ''2027 பிப்ரவரி மாதத்தில் இருந்து பெங்களூரில் தண்ணீர் தட்டுப்பாடு அதிகம் ஏற்படும். இந்த தண்ணீர் பிரச்சனை வீடுகள் மற்றும் நிறுவனங்களை பாதிக்கும். குறிப்பாக ஐடி நிறுவனங்களை பாதிக்கும். தண்ணீர் பற்றாக்குறையால் ஐடி நிறுவனங்கள் மூடப்படும் சூழல் வரலாம். ஊழியர்களுக்கு 'வொர்க் ப்ரம் ஹோம்' வழங்கப்படலாம்.

    Advertisement

    அதேபோல் வெளிமாநிலங்களை சேர்ந்தவர்கள் பெங்களூரை விட்டுவிட்டு தங்களின் சொந்த ஊர்களுக்கு திரும்பலாம். பெங்களூரில் குடிநீர் பாட்டில்களுக்கும் கூட தட்டுப்பாடு ஏற்படும்'' என கூறியுள்ளார்.

    இந்த கணிப்பை தெரிவித்துள்ள பிரசாந்த் கினி இதற்கு முன்பு சொன்ன விஷயம் அப்படியே நடந்துள்ளது. இவர் கடந்த 2023ம் ஆண்டு டிசம்பர் மாதம் 16ம் தேதி நேபாளம் பற்றிய கணிப்பை வெளியிட்டு இருந்தார்.

    அதில், ''நேபாளம் பற்றிய என்னுடைய கணிப்புகள். நேபாளத்தில் ஜனநாயகம் முடிவுக்கு வரும். 2025ம் ஆண்டில் மன்னராட்சி மீண்டும் வரும்'' என்று கூறியிருந்தார். கடந்த ஆண்டு இறுதியில் நேபாளத்தில் 'ஜென்-ஸி' போராட்டத்தால் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது.

    Advertisement

    அதேபோல் கடந்த 2026 மார்ச் மாதத்திற்கு பிறகு இந்தியாவில் பெட்ரோல், டீசல் மற்றும் கியாஸ் தட்டுப்பாடு ஏற்படும் என்று கூறியிருந்தார். இந்த விஷயத்தை 2025 செப்டம்பர் 27 ம் தேதியே அவர் கணித்து கூறியிருந்தார்.

    அதன்படியே கடந்த பிப்ரவரி மாத இறுதியில் ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் போரை தொடங்கியது. அதன்பிறகு ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியை மூடி வைத்தது. இதனால் நம் நாட்டுக்கு கிடைக்க வேண்டிய கச்சா எண்ணெய் சப்ளையில், கியாஸ் சப்ளையில் பாதிப்பு ஏற்பட்டது.

    இப்படியாக ஜோதிடர் பிரசாந்த் கினியின் கணிப்பு அப்படியே பலித்த நிலையில் பெங்களூரில் 2027 பிப்ரவரியில் இருந்து தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் என்று கூறியிருப்பது அதிக கவனம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

    English Summary

    Astrologer Prashanth Kini predictes that a severe water crisis will emerge in Bengaluru starting in February 2027. He forecasts that this will lead to the closure of IT companies, the implementation of ‘work-from-home' arrangements for employees, and an exodus of residents from the city as they find it impossible to cope with the water shortage. This prediction is gaining significant attention, especially since his earlier forecast-that India would face a shortage of petrol and diesel-proved to be entirely accurate.