‘ரேட்' என்ன? ரூ.10,000 தரேன் வர்றீயா.. பெங்களூரில் காருக்கு நின்ற பெண்ணை உடலுறவுக்கு அழைத்த நபர்.. வீடியோ

  • பெங்களூர்: பெங்களூரில் இரவில் வாடகை காருக்காக காத்திருந்த பெண்ணிடம் எவ்வளவு ரேட்? ரூ.10,000 தருகிறேன் என்று பாலியல் உறவுக்கு ஒருவர் அழைத்தார். அதனை அந்த பெண் வீடியோ எடுத்து வெளியிட்ட நிலையில் அந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

    Advertisement

    பெங்களூரில் இரவு நேரத்தில் தனியாக நிற்கும் பெண்கள், தனியாக வாகனங்களில் செல்லும் பெண்களிடம் சிலர் அத்துமீறி பாலியல் தொல்லை கொடுக்கும் சம்பவங்கள் அவ்வப்போது நடந்து வருகிறது. அந்த வரிசையில் தான் தற்போது நடந்த நிகழ்வு அதிர வைத்துள்ளது. அதுபற்றிய விவரம் வருமாறு:

    Advertisement

    பெங்களூர் ராமமூர்த்தி நகர் போலீஸ் எல்லைக்குட்பட்ட மஞ்சுநாத் நகர் கல்கெரே பகுதியில் இரவு நேரத்தில் பெண் ஒருவர் வாடகை காருக்காக காத்திருந்தார். அங்கிருந்து அவர் தான் வசிக்கும் இடத்துக்கு செல்வதற்காக காத்திருந்தார். இந்த சமயத்தில் டீசர்ட் அணிந்து ஸ்கூட்டரில் ஒருவர் வந்தார். அந்த பெண்ணை பார்த்தவர் உடனடியாக ஸ்கூட்டரை நிறுத்தினார்.

    அதன்பிறகு அவர், ''ரேட் என்ன?'' என்று அந்த பெண்ணை பார்த்து கேட்டார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த அந்த பெண், ''எவ்வளவு?'' என்று கேட்டார். அதற்கு அந்த நபர், ''ரூ.10,000 தருகிறேன்'' என்றார். இதை கேட்டு டென்ஷனான அந்த பெண்,''எதற்கு? என்று கேட்டார். அதற்கு அந்த நபர் ''அந்த பக்கம் போகலாம்'' என்று ஏதோ சொல்ல.. அந்த பெண், ''நான் போலீசில் புகாரளிக்க வேண்டும். ரெக்கார்ட் செய்துள்ளேன்'' என்று கூறினார். இதனால் பயந்துபோன அந்த நபர் ஸ்கூட்டரில் அங்கிருந்து சென்றார்.

    Advertisement

    அதாவது ரோட்டில் நின்ற அந்த பெண்ணை பாலியல் தொழிலாளி என்று நினைத்து அவரை பாலியல் ரீதியிலான உறவுக்கு அந்த நபர் அழைத்தது தெரியவந்தது. இந்த முழு சம்பவத்தையும் அந்த பெண் தனது செல்போனில் வீடியோவாக ரெக்கார்ட் செய்துள்ளார். அதனை அந்த பெண் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு போலீசில் புகார் அளித்தார்.

    அதில், அந்த பெண், ''ஒரு பெண்ணாக நான் வாடகை காருக்காக கூட காத்திருக்க முடியவில்லை. பணத்திற்காக பாலியல் ரீதியாக அணுகுகின்றனர். அந்த நபரின் சொற்கள உள்நோக்கம் கொண்டது. அவதூறாதது மட்டுமின்றி என்னுடைய பாதுகாப்பை நினைத்து கண்ணீரை வரவழைத்தது''என்று கூறியுள்ளார்.

    Advertisement

    இதுபற்றி பெங்களூர் ராமமூர்த்தி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி என்ஆர்ஐ லே-அவுட்டில் வசித்து வரும் விஜய் ராகவ் (வயது 42) என்பவரை கைது செய்தனர். அவர் பழவியாபாரி ஆவார். அவரிடம் இருந்து ஸ்கூட்டர் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதற்கிடையே தான் அந்த பெண்ணிடம் விஜய் ராகவ் பேசி உறவுக்கு அழைத்த வீடியோ இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

    English Summary

    In Bengaluru, a man propositioned a woman waiting for a hired car at night, asking for her "rate" and offering Rs.10,000 for sexual relations. The woman recorded the incident and released the video, leading to the man's arrest by the police.