ஐடி வேலை வேண்டாம்.. பெங்களூரில் ரேபிடோ ஆட்டோ ஓட்டி அதிகம் சம்பாதிக்கும் பெண்! வைரல் வீடியோ

  • பெங்களூர்: அப்பா இறந்துவிட்டார். தாயை கவனிக்க வேண்டிய நிலையில் துணிச்சலாக பெங்களூரை சேர்ந்த இளம்பெண் ஒருவர் ஐடி வேலை வேண்டாம் என்று உதறிவிட்டு ரேபிடோ ஆட்டோ ஓட்டி அதிகம் சம்பாதிப்பதாக கூறும் வீடியோ கவனம் பெற்றுள்ளது. இந்த இளம்பெண்ணை தற்போது பலரும் பாராட்டி வருகின்றனர்.

    Advertisement

    ஐடி வேலைக்கு சென்றால் போதும்.. கைநிறைய சம்பளம்.. மேம்பட்ட வாழ்க்கை.. நினைத்ததை வாங்கி விடலாம் என்ற எண்ணம் பல இளைஞர்களுக்கு உள்ளது. இதனால் தான் வேறு படிப்பை படித்தாலும் கூட ஐடி பணிக்கு ஏற்ற படிப்புகளை தனியே படித்து அந்த துறைக்குள் நுழைகின்றனர்.

    Advertisement

    பெங்களூரில் அதிகமான ஐடி நிறுவனங்கள் உள்ளன. இதனால் கர்நாடகா மட்டுமின்றி தமிழகம் உள்பட வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமானவர்கள் வேலை தேடி பெங்களூர் சென்று வருகின்றனர். இந்நிலையில் தான் பெங்களூரை சேர்ந்த இளம்பெண் ஒருவர் ஐடி வேலையை விட்டுவிட்டு ரேபிடோ ஆட்டோ ஓட்டி வருவதும், ஐடி துறையில் தான் சம்பாதித்ததை விட தற்போது அதிகம் சம்பாதிப்பதாகவும் கூறியுள்ள வீடியோ கவனம் பெற்றுள்ளது.

    இந்த வீடியோவை தன்வி என்பவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். கண்டென்ட் கிரியேட்டராக இருக்கும் இவர் பெங்களூரில் ரேபிடோ ஆட்டோவில் பயணித்தார். அப்போது அந்த ஆட்டோவை இளம்பெண் ஒருவர் ஓட்டினார். அந்த இளம்பெண்களிடம் பேசினார் தன்வி. ஆட்டோ ஓட்டும் பெண்ணின் பின்னணி பற்றி கேட்டார்.
    அப்போது அந்த பெண் சரளமாக ஆங்கிலத்தில் பேசி பதிலளித்தார்.

    Advertisement

    பின்னணி பற்றி கூறுகையில், ''நான் ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தேன். தந்தை இறந்ததால் தாய் தனிமையில் தவித்தார். ஐடி துறையில் வேலை என்றால் ஷிப்ட் முறையில் இருக்கும். நைட் ஷிப்ட் ிருக்கும். இதனால் தாய் தனிமையில் இருப்பார். அவருக்காக தாயை வீட்டில் தனியாக விட்டு செல்வது கடினமாக இருந்தது. இதனால் ஐடி பணியை விட்டுவிட்டு ஆட்டோ ஓட்டுகிறேன்.

    நான் முதலில் ஐடி பணியை விடுவதாக கூறியபோது தாய் உள்பட குடும்பத்தினர் ஏற்கவில்லை. நன்கு படித்த ஒரு பெண் ஆட்டோ முடியுமா? மக்கள் என்ன நினைப்பார்கள்? என கேட்டனர். ஆனால் அதுபற்றி எதையும் கேட்காமல், இந்த பாதையை தேர்ந்தெடுத்தென். இது கார்ப்பரேட் வேலையை விட சிறந்தது. என் அம்மாவுடன் நேரம் செலவிட முடிகிறது.

    Advertisement

    ஐடியில் சம்பாதித்ததை விட அதிகமாக சம்பாதிக்கிறேன்'' என்று கூறினார். இதனை தன்வி வீடியோவாக எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது அனைவரின் கவனத்தையும் பெற்றுள்ளது. இதனை பார்க்கும் நெட்டிசன்கள் பலரும் ஒரு சுதந்திரமான வாழ்க்கையை அமைத்து கொண்ட அந்த இளம்பெண்ணின் தைரியத்தையும், தாய் மீது கொண்ட அன்பையும் பாராட்டி வருகின்றனர்.

    English Summary

    A video featuring a young woman from Bengaluru has garnered attention; she gave up her IT job to care for her mother and now earns a higher income by driving a Rapido auto-rickshaw. She is currently receiving praise from many quarters.