அண்ணி மீதான மோகம்.. இளைஞரை எரித்து கொன்ற வழக்கில் பெரிய ட்விஸ்ட்! ஷாக் காரணம்

  • பெங்களூர்: கர்நாடகாவில் கடந்த 8 ம் தேதி இளைஞர் ஒருவர் எரித்து கொல்லப்பட்டு இருந்தார். இதுதொடர்பா போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் புதிய ட்விஸ்ட் கிடைத்துள்ளது. அந்த இளைஞர் தனது அண்ணி மீது மோகம் கொண்டு ஆபாசமாக மெசேஜ் அனுப்பியதால் அவரது அண்ணன் உள்பட 2 பேர் சேர்ந்து தீர்த்து கட்டியது தெரியவந்துள்ளது.

    Advertisement

    கர்நாடகாவின், பல்லாரி மாவட்டம் மோகா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசித்து வந்தவர் பசவனகவுடா (வயது 27). இவர் கடந்த 7ம் தேதி மாலையில் வீட்டில் இருந்து வெளியே சென்றார். ஆனால் நீண்டநேரம் ஆகியும் அவர் வீடு திரும்பவில்லை.

    Advertisement

    இதனால் குடும்பத்தினர் மோகா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். புகாரின் பேரில், போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது கடந்த 8ம் தேதி பல்லாரியில் உள்ள எல்எல்சி கால்வாய் அருகே ஒருவரின் உடல் எரிந்து கிடந்தார்.

    உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, இறந்து கிடந்தவர் பசவனகவுடா என்பது உறுதியானது.
    மேலும் உடல் கிடந்த இடத்தில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் பசவனகவுடாவின் மோட்டார் சைக்கிள் மற்றும் செருப்பு கிடைத்தது. இதையடுத்து, பசவனகவுடாவை கொலை செய்தது யார்? பின்னணி என்ன? என்பது பற்றி தீவிரமாக விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

    Advertisement

    இதையடுத்து பசவனகவுடாவை கொலை செய்ததாக அவரது அண்ணன் தொட்டபசவகவுடா மற்றும் அவரது மனைவி ஸ்வேதா மற்றும் அவரது சகோதர் சதீஷ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது. அதாவது சில மாதங்களுக்கு முன்பு அண்ணன் தொட்டபசவகவுடாவின் மனைவியுடன் கொலையான பசவனகவுடாவிற்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. செல்போன் எண்ணையும் பசவனகவுடா வாங்கி கொண்டார்.

    பிறகு அண்ணி என்று கூட பாராமல் அவர் மீது பவசனகவுடா மோகம் கொண்டுள்ளார். ஆபாசமாக குறுஞ்செய்தி செய்தததோடு, ஆபாச வீடியோக்களை வாட்ஸ்அப்பில் அனுப்பி வைத்துள்ளார். இதனை பார்த்த ஸ்வேதா அதிர்ச்சியடைந்துள்ளார். பசவனகவுடாவை கண்டித்தார். ஆனால் பசவனகவுடா திருந்தவில்லை. இதனால் ஸ்வேதா தனது கணவர் தொட்டபசவகவுடாவிடமும், சகோதரர் சதிஷிடமும் புகார் கூறினார். இதையடுத்து 3 பேரும் சேர்ந்து பசவனகவுடாவை தீர்த்து கட்ட பிளான் போட்டனர்.

    Advertisement

    அதன்படி கடந்த 7 ம் தேதி ஸ்வேதாவின் செல்போனில் இருந்து தனியாக வரும்படி பசவனகவுடாவிற்கு மெசேஜ் அனுப்பினர். அண்ணி மீதான மோகத்தால் அவரை சந்திக்க பசவனகவுடா சென்ற நிலையில் அங்கிருந்த அண்ணன் தொட்டபசவகவுடா மற்றும் ஸ்வேதாவின் சகோதர் சதிஷ் ஆகியோர் பசவனகவுடாவின் கழுத்தை ரோப்பால் இறுக்கி கொன்றனர். பிறகு அவரது உடலை தீயிட்டு எரிந்து சென்றது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் கர்நாடகாவை உலுக்கி உள்ளது.

    English Summary

    A young man was burned to death in Karnataka on the 8th of this month. While the police were conducting an intensive investigation into the incident, a new twist has emerged: it was revealed that he was killed by two individuals-including his own elder brother-after he developed a lustful interest in his sister-in-law and sent her obscene messages.