மாணவிகளுக்கு மட்டுமில்லை, பள்ளி, கல்லூரி மாணவர்கள் அனைவருக்கும் இலவச பஸ் பாஸ்! டிகே சிவகுமார் பலே

  • பெங்களூர்: ''மாணவிகளுக்கு மட்டும் இலவச பஸ் ஏன் என்று மாணவர்கள் கேட்கின்றனர். இதனால் இனி அனைத்து பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கும் இலவச பஸ்பாஸ் எந்த கட்டணமும் இன்றி வழங்கப்படும்'' என்று கர்நாடகா முல்வரானதுமே முதல் முடிவை எடுத்துள்ளார் டிகே சிவக்குமார்.

    Advertisement

    தமிழகத்தை போல் கர்நாடகாவிலும் பெண்களுக்கு அரசு பேருந்துகளில் இலவச பயணம் திட்டம் அமலில் உள்ளது. தமிழகத்தில் முந்தைய திமுக ஆட்சியில் 'விடியல் பயணம்' என்ற பெயரில் இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. மாநகர பஸ்களில் பெண்கள் கட்டணமின்றி பயணித்து வருகின்றனர்.

    Advertisement

    அதேபோல் கர்நாடகாவை எடுத்து கொண்டால் 'சக்தி திட்டம்' என்ற பெயரில் இந்த திட்டம் செயல்பாட்டில் உள்ளது. இதன்மூலம் கர்நாடகாவில் பள்ளி, கல்லூரி மாணவிகள் முதல் இளம்பெண்கள், மூதாட்டி வரை பயணம் செய்து வருகின்றனர்.

    இந்த திட்டத்தின் காரணமாக கர்நாடகாவில் பள்ளி, கல்லூரி மாணவிகள் பஸ்களில் இலவசமாக பயணிக்கின்றனர். இந்நிலையில் தான் மாணவர்களும் தங்களுக்கு இலவச பஸ் திட்டத்தை விரிவுப்படுத்த வேண்டும் என்று கூறி வந்தனர். இந்நிலையில் தான் கர்நாடகாவின் முதல்வராக இன்று பதவியேற்ற டிகே சிவக்குமார் முதல் உத்தரவாக பள்ளி - கல்லூரி மாணவர்களின் கோரிக்கையை நிறைவேற்றி உள்ளார்.

    Advertisement

    அதாவது கர்நாடகா முதல்வரானதுமே டிகே சிவக்குமார் தனது கேபினட் அமைச்சர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். அதன்பிறகு டிகே சிவக்குமார் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது டிகே சிவக்குமார், ''இது இளைஞர்களின் காலம். மாணவிகளுக்கு மட்டும் இலவச பஸ் ஏன் என்று மாணவர்கள் கேட்கின்றனர். நாங்கள் அனைத்து மாணவர்களுக்கும் பஸ் பாஸ் வாழங்கி வருகிறோம். இனி அனைத்து பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கும் பஸ்பாஸ் எந்த கட்டணமும் இன்றி வழங்கப்படும். இதுதான் டிகே சிவக்குமார் கேபினட்டின் முதல் முடிவாகும். இதற்கு மாணவர்கள் விண்ணப்பம் செய்ய வேண்டும். இதுபற்றி போக்குவரத்து துறையுடன் ஆலோசனை மேற்கொள்ளப்படும்'' என்றார்.

    Advertisement

    இதன்மூலம் கர்நாடகா முழுவதும் உள்ள பள்ளி ,கல்லூரி மாணவ-மாணவிகள் அனைவரும் அரசு பேருந்துகளில் இனி இலவசமாக பயணிக்க முடியும். இது மாணவர்களின் டிக்கெட கட்டண செலவை குறைக்கும். இந்த அறிவிப்பால் கர்நாடகாவில் உள்ள பள்ளி - கல்லூரி மாணவர்களின் பெற்றோர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தற்போது பள்ளி, கல்லூரி கட்டணங்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் இந்த அறிவிப்பு பெற்றோர்களுக்கு ஓரளவு நிம்மதியை தந்துள்ளது.

    English Summary

    Karnataka CM D.K. Shivakumar says, "This is the youth era. Students were asking why there is a free bus just for girls. We are giving passes to all students - free bus pass without any charge. Bus pass is free for all school and college students. This is the first decision by DK Shivakumar cabinet. Students have to apply for this, will discuss this with the Transport Department."