“இப்போதைக்கு தமிழகத்திற்கு தண்ணீர் கொடுக்க முடியாது..” கட் அண்ட் ரைட்டாக சொன்ன கர்நாடக முதல்வர்

  • பெங்களூர்: தமிழகத்திற்கு இப்போதைக்கு தண்ணீர் கொடுக்க முடியாது என, கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார் கறாராக கூறியிருக்கிறார். மட்டுமல்லாது காவிரி படுகையை நேரில் பார்வையிட முதலமைச்சர் விஜய்யை நேரில் அழைத்திருப்பதாகவும் அவர் கூறியிருக்கிறார்.

    Advertisement

    தமிழகத்திற்கு இன்று தொடங்கி அடுத்த 15 நாட்களுக்கு 4.5 டிஎம்சி தண்ணீர் கொடுக்க வேண்டும் என்று காவிரி நீர் ஒழுங்காற்று குழு தெரிவித்திருந்தது. இப்படி இருக்கையில், கர்நாடக முதல்வர் தண்ணீர் தர முடியாது என்று கூறியிருப்பது இரு மாநிலத்திற்கு இடையில் பிரச்சனையை மேலும் அதிகரித்திருக்கிறது.

    Advertisement

    காவிரி நீர்

    தமிழகத்திற்கு கடந்த ஜூன் மாதம் தொடங்கி ஜூலை வரை 40.43 டிஎம்சி தண்ணீரை கர்நாடகா திறந்துவிட்டிருக்க வேண்டும். ஆனால், இப்போது வரை வெறும் 3.54 டிஎம்சி அளவுக்கு மட்டுமே தண்ணீரை திறந்துவிட்டிருக்கிறது. இது குறித்து நேற்று நடைபெற்ற ஒழுங்காற்று குழு கூட்டத்தில் தமிழ்நாட்டின் அதிகாரிகள் விளக்கியிருந்தனர். இதையடுத்து இன்று காலை 8 மணி முதல், அடுத்த 15 நாட்களுக்கு தினமும் 3500 கனஅடி வீதம் 4.5 டிஎம்சி தண்ணீர் திறந்துவிடப்பட வேண்டும் என்று குழு உத்தரவிட்டது.

    ஆனால், குழுவின் உத்தரவின்படி தண்ணீர் திறக்கப்படவில்லை. பருவமழை இந்த ஆண்டு போதுமான அளவில் பெய்யாததால், கர்நாடக அணைகளுக்கு நீர் வரத்து குறைந்திருப்பதாகவும், குடிநீர் தேவைக்கு மட்டுமே தண்ணீர் இருப்பதாகவும் கர்நாடகா கூறி வருகிறது. எனவே ஒழுங்காற்று குழுவின் உத்தரவை எதிர்த்து மேல் முறையீடு செய்ய இருப்பதாகவும் தெரிவித்திருந்தது. இந்த நிலையில்தான் தமிழகத்திற்கு தண்ணீர் கொடுக்க முடியாது என கர்நாடக முதல்வர் கூறியிருக்கிறார்.

    English Summary

    Karnataka Chief Minister D.K. Shivakumar has firmly stated that water cannot be released to Tamil Nadu at this time. Furthermore, he mentioned that he has invited Chief Minister Vijay to visit the Cauvery basin in person.