கர்நாடகா பந்த்துக்கு நாளை ஆதரவு இல்லை.. கர்நாடகா ரக்‌ஷண வேதிகே திடீர் பல்டி.. பிரவீன் ஷெட்டி அறிவிப்பு

  • பெங்களூர்: காவிரியில் தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க எதிர்ப்பு தெரிவித்து நாளை கர்நாடகாவில் பந்த நடத்தப்படும் என்று கன்னட சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் வாட்டாள் நாகராஜ் அறிவித்துள்ளார். இந்த பந்த் போராட்டத்துக்கு ஆதரவு இல்லை என்று கர்நாடகா ரக்‌ஷண வேதிகே அமைப்பின்(பிரவீன் ஷெட்டி குழு ) தலைவர் பிரவீன் ஷெட்டி அறிவித்துள்ளார்.

    Advertisement

    கர்நாடகா சார்பில் இன்று முதல் அடுத்த 15 நாட்களுக்கு தினமும் 1 டிஎம்சி தண்ணீர் திறக்க காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க கூடாது எனக்கூறி கர்நாடகாவில் நாளை பந்த் நடத்தப்பட உள்ளதாக வாட்டாள் நாகராஜ் அறிவித்துள்ளார்.

    Advertisement

    இந்த போராட்டத்துக்கு முதலில் ஏராளமான அமைப்பினர் ஆதரவு தெரிவித்தனர். ஆனால் தற்போது கர்நாடகா அணைகளில் போதிய அளவு தண்ணீர் உள்ளதால் பந்த்-துக்கு கொடுத்த ஆதரவை பல்வேறு அமைப்பினர் வாபஸ் பெற்று வருகின்றனர்.

    இருப்பினும் வாட்டாள் நாகராஜ் பின்வாங்கவில்லை. யார் ஆதரவு தந்தாலும், தராவிட்டாலும் நாளை திட்டமிட்டப்படி கர்நாடகா பந்த் நடத்தப்படும் என்று உறுதியாக கூறியுள்ளார். இதற்கிடையே தான் வாட்டாள் நாகராஜியின் ஒவ்வொரு போராட்டம் மற்றும் பந்த்துக்கு ஆதரவு தெரிவித்து வரும் கன்னட அமைப்பான கர்நாடகா ரக்‌ஷண வேதிகே (பிரவீன் ஷெட்டி குழு) நாளைய பந்த்தில் கலந்து கொள்வதில் இருந்து பின்வாங்கி உள்ளது.

    Advertisement

    கர்நாடகா ரக்‌ஷண வேதிகே அமைப்பின் (பிரவீன் ஷெட்டி குழு) நிர்வாகிகள் அதன் தலைவர் பிரவீன் ஷெட்டி தலைமையில் பெங்களூரில் ஆலோசனை மேற்கொண்டனர். இந்த ஆலோசனை கூட்டத்துக்கு பிறகு பிரவீன் ஷெட்டி கூறியதாவது: கர்நாடகா பந்த் தொடர்பாக வாட்டாள் நாகராஜ் உடன் விவாதம் நடத்தினோம். அவரிடம் கோரிக்கையாக சில விஷயங்களை வைத்தோம். ஆனால் அவர் எந்த காரணம் கொண்டும் கர்நாடகா பந்த் போராட்டத்தை வாபஸ் பெறமாட்டேன் என்று அறிவித்துள்ளார்.

    உங்களின் (பத்திரிகையாளர்கள்) வழியாகவும் வாட்டாள் நாகராஜ்க்கு மீண்டும் கோரிக்கை வைக்கிறேன். இந்த சமயத்தில் பந்த் போராட்டம் வேண்டாம். வரும் காலங்களில் பிரச்சனைகள் ஏற்பட்டால் பந்த் போராட்டம் அறிவித்து நடத்தலாம் என்பதை சொல்லி கொள்கிறேன். வாட்டாள் நாகராஜ் மீது மதிப்பு உள்ளது. அவரது போராட்டத்திற்கு எப்போதும் எங்களின் ஆதரவு உள்ளது. எப்போதும் அவர் உடன் நிற்போம் என்பதை கூறி கொள்கிறேன்.

    Advertisement

    ஆனால் தற்போது கர்நாடகா அணைகளில் தண்ணீர் உள்ளது. அதேபோல் தமிழகத்துக்கு தண்ணீர் விடமாட்டோம் என்று கர்நாடகா அரசும் உறுதியளித்துள்ளது. இதனால் என்னுடைய அமைப்பின் மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர்களுடன் ஆலோசனை மேற்கொண்டேன். அனைவரும் ஒன்றாக இன்று ஆலோசனை நடத்தி முடிவு எடுத்துள்ளோம்.

    அதன்படி நாளை நடக்கும் கர்நாடகா பந்த்க்கு ஆதரவில்லை. அதேவேளையில் காவிரியில் கர்நாடகாவின் உரிமையை நிலைநாட்டுவதற்கான போராட்டம், ஆர்ப்பாட்டத்துக்கு ஆதரவு வழங்குகிறோம்'' என்றார். இதன்மூலம் நாளைய பந்த்துக்கு கர்நாடகா ரக்‌ஷண வேதிகே (பிரவீன் ஷெட்டி குழு) ஆதரவு வழங்கவில்லை என்பது உறுதியாகி உள்ளது.

    English Summary

    Vatal Nagaraj, leader of the federation of Kannada organizations, has announced that a bandh will be observed in Karnataka tomorrow to protest the release of Cauvery water to Tamil Nadu. However, Praveen Shetty, leader of the Karnataka Rakshana Vedike (Praveen Shetty faction), has announced that his organization does not support this bandh protest.