தடையை உடைத்து.. தமிழகத்தில் பாயும் காவிரி! வழிக்கு வந்தது கர்நாடகா!

  • பெங்களூர்: கர்நாடக அணைகளிலிருந்து காவிரியில் திறக்கப்படும் நீரின் அளவு அதிகரித்திருக்கிறது. தண்ணீரே தர மாட்டோம் என்று கர்நாடகா பேசி வந்த நிலையில், தற்போது தடையை உடைத்து தண்ணீர் காவிரியில் பாய்ந்திருக்கிறது.

    Advertisement

    நீர் வரத்து அதிகரித்திருப்பதால் மேட்டூர் அணையின் நீர் மட்டம் வேகமாக அதிகரிக்கும் என்றும், டெல்டாவில் குறுவை சாகுபடிக்கு போதுமான அளவில் தண்ணீர் கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

    Advertisement

    இன்று காலை நிலவரப்படி, கர்நாடகாவின் கபினி அணையிலிருந்து 6,100 கனஅடியிலிருந்து 6,600 கனஅடியாகவும், கேஆர்எஸ் அணையிலிருந்து 2,498 கனஅடியிலிருந்து 4,712 கனஅடியாகவும் நீர் திறக்கப்பட்டிருக்கிறது. இதனால் காவிரி ஆற்றுக்கு நீர் வரத்து தற்போது 11,321 கனஅடி ஆக அதிகரித்திருக்கிறது. இதே அளவுக்கு தண்ணீர் தொடர்ந்து வருகிறது எனில், நிச்சயம் மேட்டூர் அணையின் நீர்மட்டம் அதிகரிக்கும். அணை 100-110 அடியை எட்டினால்.. இந்த ஆண்டு குறுவை, சம்பா-தாளடி சாகுபடி சிறப்பாக நடக்கும்.

    செப்.1ம் தேதி மேட்டூர் அணையை முதலமைச்சர் விஜய் திறக்கிறார். 45 நாட்களக்கு அணை திறக்கப்பட்டிருக்கும் என்று அறிவிக்கப்பட்டது.

    Advertisement

    அணையை திறக்க இன்னும் 2 நாட்கள்தான் இருக்கின்றன. இருப்பினும் அணையில் நீர் மட்டம் இன்னும் 90 அடியை எட்டவில்லை. எனவே அணையை திறந்தால் விவசாயிகள் முழு பலனை பெற முடியாது என்று கூறி.. அணை திறப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்போது கர்நாடக அணைகளிலிருந்து நீர் திறக்கப்பட்டிருப்பதால்.. அணைக்கான நீர் வரத்து சீராக இருக்கும். 45 நாட்களை விட கூடுதலாக அணையிலிருந்து நீர் வெளியேற்றப்படலாம் என்று பலரும் கூறுகின்றனர்.

    English Summary

    Cauvery Inflow Surges: The volume of water released into the Cauvery from Karnataka's dams has increased. While Karnataka had previously insisted it would not release any water, that barrier has now been broken, and water is flowing into the river.