மண்டை மேல் இருந்த கொண்டையை மறந்த கர்நாடாக.. பிலிகுண்டுலுவில் நடந்த மாற்றம்! தமிழகம் ஹாப்பி!

  • பெங்களூர்: காவிரி நீர் ஒழுங்காற்றுக்குழு மற்றும் நீர் ஒழுங்காற்று ஆணையம் ஆகிய அமைப்புகள், தமிழ்நாட்டுக்கு உரிய நீரை கொடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டும், தண்ணீர் இல்லை என்று கூறி.. கர்நாடகா அரசு மறுத்துவிட்டது. ஆனால் பருவமழை அதிகரித்திருப்பதால் கர்நாடக அணைகளிலிருந்து உபரி நீர் அதிக அளவில் திறந்துவிடப்பட்டிருக்கிறது. இதனால் பிலிகுண்டுலுவுக்கு நீர் வரத்து 27,000 கனஅடியாக அதிகரித்திருக்கிறது.

    Advertisement

    தமிழகத்தை பொறுத்தவரை, டெல்டா மாவட்டங்கள் காவிரி நீரை நம்பிதான் இருக்கின்றன. ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் மேட்டூர் அணை திறக்கப்படும். மேட்டூர் அணைக்கு காவிரி நீர் வந்தால்தான் அணை திறக்கப்படும்.

    Advertisement

    ஆனால், இந்த ஆண்டு பருவமழை எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்றும், குடிநீருக்கு மட்டுமே போதுமான நீர் இருக்கிறது என்றும் சொல்லி.. காவிரி நீரை திறக்க கர்நாடகா மறுத்துவிட்டது. இது தொடர்பான ஆணைய கூட்டத்திலும் கர்நாடாக பஞ்ச பாட்டைதான் பாடியது. தண்ணீர் இல்லை.. தண்ணீர் இல்லை என்று கூறியிருந்தது. இப்படி இருக்கையில், கேரளாவின் வயநாடு மற்றும் கர்நாடகாவின் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி பகுதிகளில் தென்மேற்கு பருவமழை பெரிய அளவுக்கு பெய்திருக்கிறது. இதனால் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் நீர் வரத்து அதிகரித்திருக்கிறது.

    கபினி அணையின் மொத்த நீர் தேக்க கொள்ளவு 19.52 டிஎம்சி, இப்போது 18.68 டிஎம்சி அளவுக்கு தண்ணீர் இருக்கிறது. அதாவது அணை முழு கொள்ளவை எட்டியிருக்கிறது. அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு 27,988 கனஅடியாக இருக்கிறது. அணையிலிருந்து வினாடிக்கு 27,000 கனஅடி நீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது. இதனால் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு நீர் வரத்து அதிகரித்திருக்கிறது. கர்நாடகா தண்ணீர் திறந்துவிட முடியாது என்று சொன்னாலும் கூட தமிழகத்திற்கு நீர் வரத்து அதிகரித்திப்பது ஒருளவுக்கு நிம்மதியை ஏற்படுத்தியிருக்கிறது.

    Advertisement

    இருப்பினும் மற்ற அணைகளிலிருந்து நீர் திறக்கப்படாததால் தமிழகத்திற்கான நீர் போதுமான அளவுக்கு வரவில்லை. எனவே காவிரி நீரை தமிழக உறுதியாக கேட்டு பெற வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.

    தமிழகத்தின் நிலை என்ன?

    தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை, கடலூர், புதுக்கோட்டை என டெல்டா மற்றும் அதை ஒட்டிய மாவட்டங்களில் மொத்தம் 28 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் இருக்கின்றன. கோடிக்கணக்கான மக்களின் வாழ்வாதாரமாக காவிரி நீர் இருக்கிறது. ஜூன் தொடங்கி செப்டம்பர் வரை மொத்தம் 5 லட்சம் ஏக்கர் வரை குறுவை சாகுபடி நடக்கும். ஆனால் இந்த ஆண்டு குறுவை சாகுபடி முற்றிலுமாக பாதிக்கப்பட்டிருக்கிறது. இதனால் இந்த மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.

    English Summary

    Cauvery Water: Despite orders from the Cauvery Water Regulation Committee and the Water Regulation Authority to release the water due to Tamil Nadu, the Karnataka government refused to do so, citing a lack of water. However, due to increased monsoon rainfall, large quantities of surplus water have been released from Karnataka's dams, causing the water inflow at Biligundlu to rise to 20,000 cubic feet per second.