விஜய் வீட்டில் கன்னட கொடி பறக்கும்! ஜனநாயகன் பேனர் கிழிப்பால் தமிழில் திட்டியவரை மிரட்டிய பிரமுகர்

  • பெங்களூர்: காவிரி விவகாரத்தில் முதல்வர் விஜய்யின் ஜனநாயகன் பேனரை பெங்களூர் தியேட்டரில் கிழித்து கன்னட அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த விவகாரத்தில் தொடர்புடைய கன்னட அமைப்பை சேர்ந்த சிவக்குமார் நாயக் தற்போது புதிய சவால் விடுத்துள்ளார். சென்னை வந்து முதல்வர் விஜய்யின் வீட்டின் முன்பே கன்னட கொடியை ஏற்றி பறக்கவிடுவேன் என்று மிரட்டல் விடுத்துள்ள வீடியோ இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

    Advertisement

    காவிரியில் தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக கர்நாடகாவில் கன்னட அமைப்பினர், விவசாய அமைப்பினர் தீவிர போராட்டத்தை நடத்தி வருகின்றனர். அந்த வகையில் நேற்று முன்தினம் கன்னட அமைப்பை சேர்ந்தவர்கள் பெங்களூரில் முதல்வர் விஜய்யின் ஜனநாயகன் திரைப்படத்தை தடுத்து நிறுத்தினர்.

    Advertisement

    பெங்ளூர் முகுந்தா தியேட்டரின் முன்பு இருந்த முதல்வர் விஜய்யின் ஜனநாயகன் போஸ்டர், பேனரை துண்டு துண்டாக கழித்தனர். இதுதொடர்பாக போலீசார் கன்னட அமைப்பினர் மீது வழக்குப்பதிவு செய்தனர். கன்னட அமைப்பை சேர்ந்த சிவக்குமார் நாயக் தலைமையில் விஜய்யின் பேனர் கிழக்கப்பட்டது.

    இந்நிலையில் தான் தற்போது சிவக்குமார் நாயக் புதிய மிரட்டலை வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் போனில் பேசும் வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் சிவக்குமார் நாயக் காரில் அமர்ந்துள்ளார். அவர் போனில் பேசுகிறார். எதிர்முனையில் பேசும் நபர் தமிழில் பேசுகிறார். அவர், ''தமிழ் தெரியுமா? '' என்று கேட்க சிவக்குமார் நாயக், ''எனக்கு தமிழ் தெரியாது. கன்னடாவில் பேசுங்கள். நான் கன்னடா. கன்னடத்தில் பேசு'' என்கிறார்.

    Advertisement

    இதையடுத்து அந்த நபர் சிவக்குமார் நாயக்கை ஆபாசமாக திட்ட தொடங்குகிறார். அதற்கு சிவக்குமார் நாயக், ''கன்னடத்தில் சரியாக பேசு. இல்லாவிட்டால் பேசாதே'' என்கிறார். அதற்கு அந்த நபர் தொடர்ந்து கெட்டவார்த்தைகள் பேசி திட்டுவதோடு, ஜனநாயகன் பேனரை கிழிக்கிறீயா.. பொறுக்கி பய என்று திட்டுகிறார்.

    அதற்கு சிவக்குமார் நாயக், ''நான் தமிழ்நாட்டுக்கு வருகிறேன். சென்னையில் உள்ள விஜய் வீட்டுக்கே கன்னட கொடியுடன் வந்து அதை ஏற்றுகிறேன்'' என்று கூறியுள்ளார். இருவரும் போனில் பேசுவதை சிவக்குமார் நாயக் வீடியோவாக செல்போனில் பதிவு செய்த நிலையில் அந்த வீடியோ தற்போது வேகமாக பரவி வருகிறது.

    English Summary

    Pro Kannada activist had previously staged a strong protest over the Cauvery issue by tearing down a banner featuring CM Vijay in a Bengaluru theatre. Now, Shivakumar Nayaka member of the Kannada organization involved in that incident—has issued a new challenge. A video of him threatening to come to Chennai and hoist the Kannada flag right in front of Chief Minister Vijay's residence is rapidly circulating online.