இந்து மதம் அழிய போகிறது.. மல்லிகார்ஜுன கார்கே பரபரப்பு பேச்சு! உற்று பார்த்த பொதுமக்கள்

  • பெங்களூர்: சாதிப் பாகுபாடு மற்றும் தீண்டாமை காரணமாக இந்து மதம் அழியும் பாதையில் சென்று கொண்டிருப்பதாக அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். இந்து மதத்தில் நிலவும் அநீதிகளையும் தீண்டாமையையும் சுட்டிக்காட்டியே டாக்டர் அம்பேத்கர், "நான் இந்துவாக பிறந்தேன்; ஆனால் இந்துவாக இறக்க மாட்டேன்" என்று அறிவித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    Advertisement

    கர்நாடக மாநிலம் கலபுரகியில் உள்ள புத்த விஹாராவில், விஜயதசமியை முன்னிட்டு 70வது 'தம்ம சக்கர பிரவர்த்தன தின' நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கலந்து கொண்டார்.

    Advertisement

    சாதிய பாகுபாடு

    சித்தார்த்த விஹாரா அறக்கட்டளை ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்துப் பேசிய அவர், நாட்டில் இன்றளவும் சாதியப் பாகுபாடு ஒழிக்கப்படவில்லை என்று விமர்சித்தார். இது குறித்து கார்கே மேலும் பேசுகையில், "நாட்டில் இன்றும் சாதியம் ஒழிக்கப்படவில்லை. உத்தராகண்டில் நான் உரையாற்றிய இடத்தையே இரண்டு நாட்களுக்கு பிறகு கழுவிச் சுத்தம் செய்துள்ளனர்.

    உடனடியாக கழுவியிருந்தால் கூட அங்கு நிகழ்ச்சியின்போது ஏற்பட்ட அழுக்கை அகற்றுவதற்காக செய்தார்கள் என்று நினைத்திருக்கலாம். ஆனால், இரண்டு நாட்களுக்கு பிறகு அந்த இடத்தை கழுவுவது எப்படிப்பட்ட மூடநம்பிக்கை? இது மனரீதியான துன்புறுத்தல் இல்லையா? சாதி பாகுபாடு மற்றும் தீண்டாமை காரணமாக இந்து மதம் அழியும் பாதையில் சென்று கொண்டு இருக்கிறது" என்றார்.

    Advertisement

    அவமரியாதை

    மேலும், சாதியப் பாகுபாட்டால் மக்கள் எதிர்கொள்ளும் அவமதிப்பையும் அவர் சுட்டிக்காட்டினார். இது குறித்து அவர் "நமது நாட்டில் நடப்பதை பாருங்கள். மார்ட்டினையும் முகமதுவையும் (மாற்று மதத்தினரை குறிப்பிடுகிறார்) அழைக்கிறீர்கள்; ஆனால் மல்லிகார்ஜுனை அழைப்பதில்லை. எனது மக்களை ஏன் ஒதுக்குகிறீர்கள்? எங்களுக்கு தண்ணீரும் கல்வியும் வழங்குவதில்லை. நாங்கள் மனிதர்கள் இல்லையா? இந்து மதத்திற்குள் பிளவுகள் உருவானதற்கு இதுவே காரணம் இல்லையா?" என்று அவர் கேள்வி எழுப்பினார்.

    மதத்தின் பெயரால் மக்கள் அடிமைத்தனத்தில் வைக்கப்பட்டதாக கூறிய கார்கே, டாக்டர் அம்பேத்கர் புத்த மதத்தை தழுவியதன் மூலம் அவர்களுக்கு விடுதலைக்கான பாதையை காட்டியதாகத் தெரிவித்தார். இது குறித்து அவர் கூறுகையில், "மதத்தின் பெயரால் மக்கள் அடிமைகளாக வைக்கப்பட்டனர். புத்த மதத்தைத் தழுவியதன் மூலம் அம்பேத்கர் அவர்கள் அனைவருக்கும் விடுதலைக்கான பாதையைக் காட்டினார்.

    Advertisement

    பவுத்தம்

    வெளிநாட்டில் தோன்றிய மதத்தை ஏற்று கொண்டிருந்தால் நாட்டின் ஒற்றுமைக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கலாம். அதனால் தான் இந்தியாவின் தொன்மையான மதமான புத்த மதத்தை அவர் தேர்ந்தெடுத்தார்" என்றார். தொடர்ந்து பேசிய கார்கே, சாதி பாகுபாடு மற்றும் தீண்டாமைக்கு எதிராக அம்பேத்கர் எடுத்த நிலைப்பாட்டையும், புத்த மதத்தை தழுவியதன் பின்னணியையும் விளக்கினார்.

    பின்னணி

    உத்தரகாண்ட் மாநிலம் ஹல்த்வானி பகுதியில் காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தேர்தல் பேரணி ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றினார். அவர் நின்று பேசிய மேடை மற்றும் ஒட்டுமொத்த இடத்தையும் மாற்று அமைப்பினர் சிலர் யாகம் வளர்த்து, புனித நீர் தெளித்தாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விவகாரத்தை நாடாளுமன்றத்தில் எழுப்பிய கார்கே, தான் ஒரு தலித் என்பதால் தான் நின்ற இடத்தை இவ்வாறு சுத்தம் செய்துள்ளதாக தனது வேதனையை பதிவு செய்தார்.

    Advertisement

    நவீன இந்தியாவின் இந்த தீண்டாமைச் செயலுக்கு கே.சி. வேணுகோபால் மற்றும் பல அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்தப்படும் என்று மத்திய அரசும் உறுதியளித்திருந்தது. அதைத் தொடர்ந்து உத்தரகண்டில் இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    English Summary

    Congress president Mallikarjun Kharge criticised continuing caste discrimination and untouchability(இந்து மதம் குறித்து காங்கிரஸ் கார்கே எச்சரிக்கை): Mallikarjun Kharge about caste and how it threatens Hinduism.