பெங்களூர்: காவிரி நீர் ஒழுங்காற்று குழுவின் 139வது கூட்டம் நேற்று வீடியோ கான்பரன்சிங் மூலம் நடந்தது. இதில், இன்று காலை 8 மணி முதல் 15 நாட்களுக்கு தினமும் 3500 கனஅடி நீர் என மொத்தம் 4.5 டிஎம்சி அளவுக்கு தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்று கார்நாடகாவுக்கு குழு உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து மேல் முறையீடு செய்ய உள்ளதாக கர்நாடகா தெரிவித்திருப்பதால், நீர் திறக்கப்படுமா? என்கிற எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.
ஒவ்வொரு ஆண்டும் காவிரி நீர் பெற, கர்நாடகாவிடம் நாம் போராட வேண்டி இருக்கிறது. இந்த வருஷம் கொஞ்சம் அதிகமாகவே சண்டை செய்து வருகிறோம். டெல்டா பாசனத்திற்காக ஜூன் மாதம் திறக்க வேண்டிய மேட்டூர் அணை இன்னும் திறக்கப்படவில்லை. காரணம் காவிரி நீர் கிடைக்காததுதான்.
கர்நாடகாவின் 4 அணைகளில் அம்மாநிலத்திற்கு தேவையான அளவுக்கு போதுமான நீர் இருப்பு இருந்தும் கூட.. அம்மாநில அரசு இன்னும் நீரை திறக்கவில்லை. இதனால் மேட்டூர் அணை வறண்டு போய் உள்ளது. எனவே அணை திறக்கப்படாததால், டெல்டா மாவட்டங்கள் வறட்சியடைந்திருக்கின்றன. நிலைமை இப்படி இருக்கையில் ஒழுங்காற்று குழு கூட்டத்தில் தமிழகத்தின் நிலைமையை அதிகாரிகள் விரிவாக எடுத்துக்கூறி தண்ணீர் கேட்டனர். பதிலுக்கு கர்நாடகா, "இந்த வருஷம் போதுமான அளவுக்கு மழை பெய்யல.. நாங்க என்ன செய்யுறது? தண்ணி எல்லாம் தொறக்க முடியாது" என்று கறாராக பேசியது. இரு தரப்பு வாதங்களை கேட்ட குழுவின் தலைவர் வினீத் குப்தா.. இதெல்லாம் சரிப்பட்டு வராது.. தமிழகத்திற்கு சேர வேண்டிய நீரை உடனே கொடுங்க.. என்று கர்நாடகாவுக்கு உத்தரவிட்டது. அதன்படி, இன்று காலை 8 மணி முதல் 3500 கன அடி நீர் திறக்க வேண்டும். குழுவின் உத்தரவை எதிர்த்து காவிரி மேலாண்மை ஆணையத்தில் மேல்முறையீடு செய்ய கர்நாடாக ரெடியாகி வருவதாகவும், எனவே தண்ணீர் திறக்கப்போகதில்லை என்றும் சொல்லப்படுகிறது.