பெங்களூர்: ''பெங்களூரில் கன்னடம் பேசாவிட்டால் அல்லது பார்க்க தென்னிந்தியாவை சேர்ந்தவர் போல் இல்லாவிட்டால் பாகுபாடாக பார்த்து ஹோட்டல்களில் கூட சில்லரை தராமாட்டார்களா?'' என கேள்வி எழுப்பி பெண் ஒருவர் தனது ஆதங்கத்தை கொட்டியுள்ளார்.
கன்னடம் பேசாவிட்டால் சில்லரை கிடையாதா? பெங்களூர் ஹோட்டலில் பெண்ணுக்கு நேர்ந்த கதி!
பெங்களூரில் வசித்து வருபவர் பிரியா. இவர் அருகே உள்ள பிரபலமான ரெஸ்டாரண்ட்டுக்கு இன்று காலையில் சாப்பிட சென்றார். தோசை, காபி சாப்பிட்டார். அதன்பிறகு சாப்பிட்ட பில்லுக்கு பணம் வழங்கினார்.
ஆனால் கேஷ் கவுண்ட்டரில் இருந்தவர் சில்லரை வைத்து கெண்டே அதனை வழங்கவில்லை. பிரியா கன்னடம் பேசாமல் பணம் கொடுத்ததாலும், அவரது தோற்றம் தென்னிந்தியர்களை போல் இல்லாமல் இருப்பதாலேயே இது நடந்து இருக்கலாம்? என சந்தேகம் கிளப்பி உள்ளார்.
மேலும் என்ன நடந்தது? என்பது பற்றி பிரியா தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது: ''நான் கன்னடம் பேசவில்லை என்பதாலோ அல்லது பார்க்க தென்னிந்தியாவை சேர்ந்தவர் போல் இல்லை என்பதால் தான் எனக்கு இப்படி நடந்ததா?. இன்று காலையில் நான் தர்ஷினிக்கு (ரெஸ்டாரண்ட்) சென்றேன்.
தோசை மற்றும் காபி ஆர்டர் செய்தேன். நான் செல்போன் எடுத்து செல்லவில்லை என்பதால் கையில் பணம் கொடுத்தேன். ஆனால் அங்கிருந்தவர் பணத்தை வாங்கவில்லை. சில்லரை இல்லை என்று கூறினார்.
ஆனால் .ண்மையில் அவர் முன்ப சில்லரை இருந்தது. இதுபற்றி நான் கேள்வி எழுப்பினேன். அதற்கு அந்த நபர், 'வேறு கஸ்டமர் வந்தால் என்ன செய்வது?'' என்று பதில் கேள்வி எழுப்பினார்.இதையடுத்து, ''அப்போது நான் உங்களின்கஸ்டமர் இல்லையா?'' என்று கேட்டேன்.
பெங்களூர் இப்போது நார்மலாக தான் இருக்கிறதா? நீங்கள் யாராவது இப்படியான பிரச்சனையை எதிர்கொண்டுள்ளீர்களா?. பின்குறிப்பு: நான் தென்னிந்தியாவை சேர்ந்தவர். கன்னடம் பேச தெரிந்தவள்'' என கூறியுள்ளார். இந்த பதிவு தற்போது கவனம் பெற்றுள்ளது. இந்த பதிவுக்கு ஒவ்வொருவரும் பெங்களூரில் தாங்கள் எதிர்கொண்ட பிரச்சனைகளை கூறி வருகின்றனர்.