முதல்வர் பதவி ராஜினாமா.. அறிவித்ததுமே சித்தராமையா காலில் விழுந்து ஆசி வாங்கிய டிகே சிவக்குமார்

  • பெங்களூர்: கர்நாடகா முதல்வர் சித்தராமையா தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். இதையடுத்து புதிய முதல்வராக விரைவில் டிகே சிவக்குமார் பொறுப்பேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்நிலையில் தான் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய சித்தராமையா ஒப்புக்கொண்டதை தொடர்ந்து அவரது காலில் விழுந்து டிகே சிவக்குமார் ஆசீர்வாதம் பெற்றார். இதுதொடர்பான போட்டோ வெளியாகி உள்ளது.

    Advertisement

    கர்நாடகாவில் கடந்த 2023ம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடந்தது. இதில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. இதையடுத்து முதல்வராக சித்தராமையாக பொறுப்பேற்றார். 2025 மே மாதம் அவர் முதல்வரானார். கர்நாடகா மாநில காங்கிரஸ் தலைவரான டிகே சிவக்குமார் துணை முதல்வரானார்.

    Advertisement

    முன்னதாக முதல்வர் பதவியை எட்டி பிடிப்பதில் சித்தராமையா - டிகே சிவக்குமார் இடையே கடும் போட்டி நிலவியது. டெல்லியில் இருவரும் முகாமிட்டு இருந்தனர். இறுதியில் சீனியாரிட்டி அடிப்படையிலும், ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்காதவர்கள் என்பதாலும் சித்தராமையாவுக்கு முதல்வர் பதவி வழங்கப்பட்டது.

    டிகே சிவக்குமார் காங்கிரஸ் கட்சியின் மேலிட தலைவர்களுடன் நெருக்கமாக இருப்பவர். அதோடு பிற மாநிலங்களின் காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏக்களை பாஜக இழுக்க முயற்சிக்கும்போதெல்லாம் அவர்களை ரெசார்ட்டில் தங்கவைத்து பாதுகாப்பவர் டிகே சிவக்குமார். இவருக்கு காங்கிரஸ் மேலிட தலைவர்களிடம் நல்ல பெயர், செல்வாக்கு இருந்தாலும் கூட சொத்து குவிப்பு, சட்டவிரோத பணப்பரிமாற்றம், ஊழல் உள்ளிட்ட சில வழக்குகள் அவர் மீது உள்ளது. மேலும் அவரை முதல்வராக்கினால் அமலாக்கத்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்கலாம் என்பதால் டிகே சிவக்குமாருக்கு முதல்வர் பதவி கைநழுவியது.

    Advertisement

    தற்போது சித்தராமையா இரண்டரை ஆண்டு ஆட்சியை நிறைவு செய்த நிலையில் டிகே சிவக்குமார் முதல்வர் பதவியை தனக்கு வழங்க வேண்டும் என்று கடந்த சில மாதங்களாக மேலிடத்துக்கு அழுத்தம் கொடுத்து வந்தார். அந்த வகையில் சித்தராமையா, டிகே சிவக்குமார் ஆகியோரை டெல்லி அழைத்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி உள்ளிட்டவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சித்தராமையாவை முதல்வர் பதவியில் இருந்து இறக்கிவிட்டு டிகே சிவக்குமாரை முதல்வராக்க முடிவெடுக்கப்பட்டது.

    இதையடுத்து இன்று காலையில் முதல்வர் சித்தராமையா தனது அமைச்சர்களுக்கு காலை விருந்து வழங்கினார். அப்போது அவர் மேலிடம் கேட்டு கொண்டதன் பேரில் முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தனர். இதன்மூலம் சித்தராமையா முதல்வர் பதவியில் இருந்து விலகுவது உறுதியாகி உள்ளது. அடுத்த முதல்வராக டிகே சிவக்குமார் விரைவில் பொறுப்பேற்கிறார். இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.

    Advertisement

    இந்நிலையில் தான் இன்று முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதாக சித்தராமையா அறிவித்த பிறகு டிகே சிவக்குமார் ஹேப்பியாகி உள்ளார். அதோடு அவர் சித்தராமையாவின் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றதோடு, ஆரத்தழுவி வாழ்த்து பெற்றுள்ளார்.

    இதுதொடர்பாக கர்நாடகா காங்கிரஸ் சார்பில் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் போட்டோ பகிரப்பட்டுள்ளது. அதில், ''அன்று.. இன்று.. என்றும்.. ஒற்றுமை தான் எங்களின் பலம்.. மக்களுக்கான சேவை தான் எங்களின் நோக்கம்'' என கூறப்பட்டுள்ளது.

    English Summary

    Karnataka CM Siddaramaiah has announced his resignation from his post. Following this, reports have emerged indicating that D.K. Shivakumar is set to soon assume office as the new Chief Minister. Against this backdrop-and immediately after Siddaramaiah consented to step down-D.K. Shivakumar fell at his feet to seek his blessings. A photograph capturing this moment has since surfaced.