முழுமையாக நிரம்பும் கர்நாடக அணைகள்.. ஆனாலும் தமிழகத்துக்கு நீர் விடாத டிகே சிவக்குமார்! இதோ டேட்டா

  • பெங்களூர்: கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கேஆர்எஸ் அணைகளில் இருந்து தான் காவிரியில் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடப்படும். தமிழகத்துக்கு காவிரி நீர் ஆதாரமாக இருக்கும் ஹாரங்கி, ஹேமாவதி, கேஆர்எஸ், கபினி உள்ளிட்ட அணைகள் முழு கொள்ளளவை நெருங்கி வரும் நிலையில் இன்னும் கர்நாடகா தண்ணீர் திறக்கவில்லை. இந்நிலையில் தான் டிகே சிவக்குமார் அதுபற்றி விளக்கம் அளித்தள்ளார்.

    Advertisement

    தமிழகத்துக்கு காவிரியில் 15 நாட்களுக்கு தினமும் 3,500 கனஅடி நீர் திறந்து விட வேண்டும் என காவிரி நீர் மேலாண்மை ஆணையம் கடந்த 29ம் தேதி உத்தரவிட்டது. ஆனால் கர்நாடகா அரசு இன்னும் தண்ணீர் திறக்கவில்லை. மழை இல்லை. அணைகளில் தண்ணீர் இல்லை என்று கூறி தண்ணீர் திறக்க மறுத்து வருகிறது.

    Advertisement

    ஆனால் உண்மையில் தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் வழங்கும் அணைகள் ஏறக்குறைய முழு கொள்ளளவை எட்டும் நிலையில் உள்ளதும். ஆனாலும் கர்நாடகா முதல்வர் டிகே சிவக்குமார் இன்னும் தண்ணீர் திறக்காமல் உள்ளதும் தெரியவந்துள்ளது.

    கர்நாடகாவை எடுத்து கொண்டால் காவிரியில் நீருக்கு ஆதாரமாக மொத்தம் 4 அணைகள் உள்ளன. ஒன்று ஹாரங்கி. 2வது ஹேமாவதி. 3வது கேஆர்எஸ். 4வது கபினி. இதில் ஹாரங்கி, ஹேமாவதி அணைகளில் இருந்து கேஆர்எஸ் அணைக்கு தண்ணீர் வரும். அதன்பிறகு கேஆர்எஸ் அணையில் இருந்து தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறந்து விடப்படும். அதேபோல் கபினி அணையில் இருந்தும் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடப்படும்.

    Advertisement

    தற்போது இதில் 3 அணைகள் முழு கொள்ளவை எட்டி உள்ளன. அதன்படி இன்று காலை நிலவரப்படி ஹாரங்கி அணையின் மொத்த உயரம் கடல் மட்டத்தில் இருந்து 2,859 அடியாகும். இதில் இனுறு அணையின் நீர்மட்டம் 2,857.83 அடியை எட்டி உள்ளது. இன்னும் 2 அடி மட்டுமே பாக்கி உள்ளது. அதேபோல் ஹேமாவதி அணையின் நீர்மட்டம் 2922 அடியாகும். தற்போது இந்த அணையின் நீர்மட்டம் 2,909 அடியை எட்டி உள்ளது. இன்னும் 13 அடி மட்டுமே பாக்கி உள்ளது.

    அதேபோல் கேஆர்எஸ் அணையின் நீர்மட்டம் 124.80 அடியாகும். இந்தஅணையின் நீர்மட்டம் தற்போது 94.40 அடியாக உள்ளது. கேஆர்எஸ், ஹாரங்கி அணைகள் தற்போது முழு கொள்ளளவை எட்டும் சூழலில் அங்கிருந்து அதிகளவில் தண்ணீர் கேஆர்எஸ் அணைக்கு திறந்து விடப்படுகிறது. தற்போது கேஆர்எஸ் அணைக்கு வினாடிக்கு 15 ஆயிரம் கனஅடிநீர் உள்ளே வரும் நிலையில் 500 கனஅடி நீர் திறந்து விடப்படுகிறது.

    Advertisement

    மேலும் கபினி அணையின் மொத்த உயரம்(கடல் மட்டத்தில் இருந்து) 2,284 அடியாகும். தற்போது அணையின் நீர்மட்டம் 2,280 அடியாக உள்ளது. இன்னும் 4 அடி மட்டுமே பாக்கி உள்ளது. கபினி அணைக்கு உள்ளே தற்போது வினாடிக்கு 36,293 கனஅடி தண்ணீர் வரும் நிலையில் 2,065 கனஅடி நீர் உள்ளூர் பாசனத்திற்காக திறந்து விடப்பட்டுள்ளது.

    இதற்கிடையே தான் இன்று மைசூரில் கர்நாடகா முதல்வர் டிகே சிவக்குமார் இன்று கூறியதாவது: ''காவிரியில் 36 முதல் 39 கனஅடி தண்ணீர் செல்கிறது. நாங்கள் தமிழ்நாட்டுக்கு இன்னும் தண்ணீர் திறந்து விடவில்லை. அணைகள் முழு கொள்ளளவை எட்டும் நிலையில் உள்ளன. அணை நிரம்பியதும் தண்ணீர் திறந்து விடப்படும். அணைகள் முழு கொள்ளளவை எட்டியபிறகு வெளியேறும் தண்ணீரை யாராலும் தடுக்க முடியாது.

    Advertisement

    தண்ணீர் திறக்கவில்லை எனறு தமிழ்நாடு சார்பில் உச்சநீதிமன்றத்தை நாட முடிவு செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தில் நாளை அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்பட உள்ளது. அந்த கூட்டத்தில் முன்னாள் முதல்வர்கள், பிற கட்சிகளின் தலைவர்கள், காவிரி படுகை மாவட்ட பிரதிநிதிகளின் கருத்துகள் கேட்டு முடிவெடுக்கப்படும்.

    அணைகள் நிரம்பி வருவதால் தண்ணீர் திறக்க வேண்டிய அவசியம் உள்ளது. இதனால் தமிழகத்துக்கு தண்ணீர் திறக்கூடாது என்று யாரும் அணை அல்லது காவிரி ஆற்றுக்கும் செல்ல வேண்டாம். ஏனென்றால் அணை நிரம்பி தண்ணீர் எப்போது வேண்டுமானாலும் அதிகமாக வெளியேறி அடித்து செல்லப்படலாம்'' என்றார். அதாவது அணைகள் நிரம்பும் நிலையில் இருந்தாலும் கூட முழுவதுமாக நிரம்பினால் தான் தண்ணீர் திறந்து விடப்படும் என்று டிகே சிவக்குமார் கூறியுள்ளார்.

    English Summary

    Cauvery Water Dispute: Water is released into the Cauvery for Tamil Nadu from the Kabini and KRS dams in Karnataka. Although the dams serving as the source of Cauvery water for Tamil Nadu are nearing full capacity, Karnataka has not yet released water. It is against this backdrop that D.K. Shivakumar has offered an explanation regarding the matter.