எடப்பாடி – ஸ்டாலினுடன் பணி! டிகே சிவக்குமாரின் ஆலோசகரானார் தேர்தல் வியூக வகுப்பாளர் சுனில் கனுகோல்

  • பெங்களூர்:கர்நாடகாவில் காங்கிரஸ் வெற்றிக்கு வியூகம் வகுத்து கொடுத்த சுனில் கனுகோலுக்கு, முதல்வர் டிகே சிவக்குமார் முக்கிய பதவியை வழங்கி உள்ளார். அவரை தனது ஆலோசகராக டிகே சிவக்குமார் நியமனம் செய்த நிலையில் சுனில் கனுகோல் இன்று பொறுப்பேற்றார். இவர் தமிழகத்தின் முன்னாள் முதல்வர்கள் எடப்பாடி பழனிச்சாமி, முக ஸ்டாலினுக்கு நெருக்கமாக செயல்பட்டு தேர்தல் வியூகங்களை வகுத்து கொடுத்தவர் என்பது கவனிக்கத்தக்கது. இந்த சுனில் கனுகோல் யார்? பின்னணி பற்றி இங்கு பார்க்கலாம்.

    Advertisement

    கர்நாடகாவின் புதிய முதல்வராக டிகே சிவக்குமார் கடந்த 3ம் தேதி பதவியேற்றார். அவருடன் பரேமஸ்வர் உள்பட 13 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர். இதில் பரமேஸ்வர் துணை முதல்வராக்கப்பட்டுள்ளார்.

    Advertisement

    இந்த பதவியேற்பை தொடர்ந்து டிகே சிவக்குமார் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை தொடர்ந்து மாற்றி வருகிறார். மேலும் தனக்கான செயலாளர்கள், ஆலோசகர்களை நியமனம் செய்து வருகிறார்.

    அந்த வகையில் பிரபல தேர்தல் வியூக வகுப்பாளரான சுனில் கனுகோலுக்கும், டிகே சிவக்குமார் முக்கிய பொறுப்பை வழங்கி உள்ளார். சுனில் கனுகோல் கடந்த 2023ம் ஆண்டில் கர்நாடகா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வியூக வகுப்பாளராக செயல்பட்டு வந்த நிலையில் அவரை தனது ஆலோசகராக டிகே சிவக்குமார் நியமனம் செய்துள்ளார்.

    இதற்கு முன்பு கர்நாடகா முதல்வர் சித்தராமையாவுக்கும் அவர் ஆலோசகராக பணியாற்றினார். அவர் ராஜினாமா செய்த பிறகு தற்போது புதிய முதல்வர் டிகே சிவக்குமாரும், சுனில் கனுகோலை அரவணைத்துள்ளார். இவருக்கு கேபினட் அமைச்சருக்கு இணையான அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. அதன்படி கேபினட் அமைச்சர்களுக்கு கிடைக்கும் அனைத்து சலுகைகளையும் சனில் கனுகோலும் பெற முடியும்.

    Advertisement

    சுனில் கனுகோல் கர்நாடகாவின் பல்லாரி மாவட்டத்தை சேர்ந்தவர். இவர் சென்னையில் நீண்டகாலம் வசித்தார். அதன்பிறகு பெங்களூர் சென்றார். கடந்த
    2014ல் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு தேர்தல் வியூகு வகுப்பாளராக பணியாற்றிய பிரசாந்த் கிஷோர் குழுவில் பணியாற்றினார். அந்த தேர்தலில் பாஜக வென்று நரேந்திர மோடி பிரதமானார். அதன்பிறகு உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், ஹிமாச்சல் பிரதேசம், குஜராத், கர்நாடகா .ள்ளிட்ட மாநிலங்களில் பாஜகவின் தேர்தல் வெற்றிக்கு வியூகம் வகுத்து கொடுத்தார்.

    தமிழகத்திலும் இவர் தேர்தல் வியூக வகுப்பாளராக பணியாற்றி உள்ளார். திமுக மற்றும் அதிமுகவிற்காக பணியாற்றியுள்ளார். தமிழகத்தில் நடந்த 2016 சட்டசபை தேர்தல், 2019 நாடாளுமன்ற தேர்தலில் திமுகவிற்கு தேர்தல் வியூகம் வகுத்து கொடுத்தார். 2021 சட்டசபை தேர்தலில் அதிமுகவிற்கு வியூகம் வகுத்து கொடுத்தார்.

    Advertisement

    முன்னதாக இவருக்கு காங்கிரஸ் கட்சியின் தலைவர்களுடன் நெருக்கம் ஏற்பட்டது. காங்கிரஸ் கட்சியின் டாஸ்க் போர்ஸ் 2024ல் ப சிதம்பரம், முகுல் வாஸ்னிக், ஜெய்ராம் ரமேஷ், கேசி வேணுகோபால், அஜய் மேக்கான், பிரியங்கா காந்தி, ரந்தீப் சுர்ஜேவாலா உள்ளிட்டவர்களுடன் இடம் பெற்றார். ராகுல் காந்தியின் 'பாரத் ஜோடோ யாத்திரை' வியூகத்தை வகுத்து கொடுத்தார். ராகுல் காந்திக்கு ஆலோசகராகவும் செயல்பட்டார். 2023ம் ஆண்டில் கர்நாடகாவில் காங்கிரஸ் வெல்லவும், அதன்பிறகு தெலுங்கானாவில் காங்கிரஸ் வெல்லவும் பிரசார வியூகங்களை வகுத்து கொடுத்த சுனில் கனுகோல் கர்நாடகா முதல்வர் டிகே சிவக்குமாரின் ஆலோசகராக தொடர உள்ளார்.

    English Summary

    Karnataka CM DK Shivakumar has appointed Sunil Kanugolu—the strategist behind the Congress party's victory in Karnataka—to a key position. Kanugolu assumed office today as an advisor to Shivakumar. It is noteworthy that he previously worked closely with former Tamil Nadu Chief Ministers Edappadi Palaniswami and M.K. Stalin, devising election strategies for them. Who is Sunil Kanugolu? Let us take a look at his background here.