அமலாக்கத்துறை சூப்பர் போலீஸ் அல்ல! தாமாக வழக்கை தொடங்கும் அதிகாரம் கிடையாது.. கர்நாடக ஐகோர்ட் குட்டு

  • பெங்களூர்: தமக்கு தெரிய வரும் அனைத்து வழக்குகளையும் விசாரிக்க அமலாக்கத்துறை ஒன்றும் சூப்பர் போலீஸ் இல்லை எனவும், தானாக ஒரு வழக்கை தொடங்கும் அதிகாரம் அமலாக்கத்துறைக்கு இல்லை என்றும் கர்நாடக உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

    Advertisement

    கர்நாடக எம்.எல்.ஏ நஞ்சேகவுடாவுக்கு எதிராக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்த நிலையில், அதை எதிர்த்து எம்.எல்.ஏ தரப்பில் தாக்கல் செய்த மனு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த கர்நாடக உயர் நீதிமன்றம், அமலாக்கத்துறை ஒன்றும் சூப்பர் போலீஸ் கிடையாது. அமலாக்கத்துறையின் அதிகாரம் வரம்புக்கு உட்பட்டது.

    Advertisement

    அமலாக்கத்துறைக்கு குட்டு வைத்த நீதிமன்றம்

    தாமாக ஒரு வழக்கை தொடங்கும் அதிகாரம் அமலாக்கத்துறைக்கு இல்லை. தனக்கு தெரிய வரும் அனைத்து வழக்குகளையும் விசாரிக்க அமலாக்கத்துறை ஒன்றும் சூப்பர் போலீஸ் இல்லை. அடிப்படை குற்றச்சாட்டு அல்லது முதல் தகவல் அறிக்கை வலுவாக இருந்தால் மட்டுமே பணப்பரிமாற்றம் குறித்து விசாரிக்க முடியும்.

    மற்ற புலனாய்வு அமைப்புகள் ஒரு குற்றச்சாட்டின் மீது நடவடிக்கை எடுக்க மறுக்கும் பட்சத்தில் அமலாக்கத்துறை நேரடியாக ஒரு தனிநபர் புகாரை அளித்து விசாரணை நடத்த சட்டத்தில் இடமில்லை. விசாரணையின் போது முறைகேடுகளை கண்டறிந்தால் அந்த தகவலை மாநில புலனாய்வு அல்லது மத்திய புலனாய்வு அமைப்புகளுக்கு அனுப்ப வேண்டுமே தவிர தாமாக அந்த புகாரை விசாரிக்கக் கூடாது" என்று நீதிபதி குறிபிட்டார்.

    Advertisement

    வழக்கின் பின்னணி

    கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டம் மாலூர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக இருந்து வருபவர் நஞ்சேகவுடா. இவர், மீது ஒரு நில முறைகேடு வழக்குப் பதிவாகி இருந்தது. அதுபற்றி அமலாக்கத்துறை அதிகாரிகளும் விசாரணை மேற்கொண்டனர். அத்துடன் நஞ்சேகவுடாவுக்கு சொந்தமான வீடுகளிலும் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர். அப்போது கிடைத்த ஆவணங்கள் மூலமாக நஞ்சேகவுடா எம்எல்ஏ மீது அமலாக்கத்துறையில் வழக்குப் பதிவாகி இருந்தது.

    பிஎல்எம் நிறுவனர் பிரேம்குமார் தொடர்புடைய இடங்களில் ED ரெய்டு.. ரூ.5000 கோடி மோசடி புகாரில் சோதனை

    அத்துடன் 2023 ஆம் ஆண்டு கோமுல் பால் கூட்டமைப்பில் ஆட்கள் நியமனத்தில் முறைகேடு நடந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த முறைகேட்டிலும் நஞ்சேகவுடா முறைகேட்டில் ஈடுபட்டு இருப்பதாக குற்றச்சாட்டு கூறப்பட்டது. இதுபற்றி லோக் அயுக்தா போலீசார் விசாரணை நடத்த வேண்டும் என்று கோரி நஞ்சேகவுடாவுக்கு எதிராக பெங்களூர் மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை சார்பில் தனிநபர் புகார் அளிக்கப்பட்டது.

    Advertisement

    ரத்து செய்து உத்தரவு

    அதன்பேரில், பெங்களூர் மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்றத்திலும் நஞ்சேகவுடா மீது வழக்குப் பதிவாகி விசாரணை நடந்து வருகிறது. இந்த நிலையில்தான், தன் மீது அமலாக்கத்துறை மற்றும் பெங்களூர் மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு கோர்ட்டில் பதிவான வழக்குகளை ரத்து செய்ய கோரி நஞ்சேகவுடா எம்.எல்.ஏ. சார்பில் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி எம்.ஐ அருண் முன்பு விசாரணைக்கு வந்தது.

    விஜய்க்கு இருபுறமும் ED கத்தி.. BLM பிரேம்குமார் மோசடி, விஜயபாஸ்கர் சம்மன்.. வசமாக செக் வைக்கிறாங்க
    Advertisement

    நஞ்சேகவுடா சார்பில் ஆஜரான வழக்கறிஞர் மனுதாரர் மீது ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டுகளை அமலாக்கத்துறையினர் கூறியுள்ளனர். அந்த குற்றச்சாட்டுக்கு உரிய ஆதாரங்கள் எதுவும் இல்லை. எனவே அவர் மீது பதிவான வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என்று வாதிட்டார்.

    இதற்கு அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான வக்கீல் கடும் எதிர்ப்பு தெரிவித்து வாதிட்டார். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி எம்.ஐ. அருண், காங்கிரஸ் எம்.எல்.ஏ.வான நஞ்சேகவுடா மீது அமலாக்கத்துறை மற்றும் மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு கோர்ட்டில் பதிவான வழக்குகளை ரத்து செய்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    English Summary

    Enforcement Directorate: Karnataka High Court has stated that the Enforcement Directorate (ED) is not a 'super police' force empowered to investigate every case that comes to its attention, nor does it have the authority to initiate a case on its own.