1000க்கும் அதிக உயிர் போயிருக்கும்.. போலி புற்றுநோய் மருந்து விற்பனை பற்றி அமைச்சர் பகீர் தகவல்

  • பெங்களூர்: கர்நாடகாவில் புற்றுநோய் சிகிச்சைக்கான மருந்து உள்பட உயிர் காக்கும் பிற மருந்துகளை பிரபல நிறுவனங்களின் பெயரில் போலியாக தயாரித்து ஒரு கும்பல் பாதி விலைக்கு விற்பனை செய்தது. நாடு முழுவதும் இந்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் ''போலி புற்றுநோய் மருந்துகளை விற்ற நபர் குறைந்தது ஆயிரக்கணக்கானோரின் உயிரைப் பறித்திருப்பார். அதிர்ஷ்டவசமாக போலி மருந்து தயாரிக்கப்படுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது'' என்று என்று கர்நாடக சுகாதாரத் துறை அமைச்சர் யு.டி. காதர் கூறியுள்ளார்.

    Advertisement

    இதுதொடர்பாக கர்நாடகா சுகாதாரத்துறை அமைச்சர் யுடி காதர் கூறியுள்ளதாவது: '' இந்த போலி மருந்து கும்பலை கண்டுபிடித்தது கர்நாடகா அரசு தான். நாடு முழுவதும் போலி மருந்துகளை கண்டுபிடிப்பதற்கு எடுக்கப்படும் நடவடிக்கையில் இது மிகப்பெரிய நடவடிக்கைகளில் ஒன்றாக அமைந்தது.

    Advertisement

    ஆகஸ்ட் 18ம் தேதி சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை மற்றும் கர்நாடக உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்தை சேர்ந்தவர்கள் பிடதி டோல்கேட் அருகே உள்ள பண்ணை வீட்டில் சோதனை நடத்தினர். அங்கு சுமார் ரூ.5 கோடி மதிப்புள்ள, போலி மற்றும் காலாவதியான மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டன.

    முதற்கட்ட விசாரணையில் தெலுங்கானா மற்றும் இமாச்சல பிரதேசத்தில் உள்ள மருந்து உற்பத்தி ஆலைகளில் இருந்து மலிவாக மொத்தமாக மருந்துகள் வாங்கி அவற்றை புதிய குப்பிகளில் நிரப்பி பிற வெளிநாட்டு நிறுவனங்களின் பெயரில் இறக்குமதி செய்யப்பட்ட பிராண்டுகள் போன்று பெயரிட்டு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

    Advertisement

    நோயாளிகள் மற்றும் தீவிர சிகிச்சைப் பிரிவுகளுக்கான ஃபைசர் போலி மருந்துகளும் அடங்கும்.
    அதன்பிறகு மறுநாள் முதல்வர் டிகே சிவக்குமார் மற்றும் உள்துறை அமைச்சர் பிரியங்க் கார்கே ஆகியோருடன் ஆலோசித்து உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகம் மற்றும் வணிக வரிகள் துறைகளின் அதிகாரிகளை உள்ளடக்கி எஸ்ஐடி எனும் சிறப்பு விசாரணை குழு அமைத்தோம். மூத்த ஐபிஎஸ் அதிகாரி தலைமையில் 6 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் இதுவரை எடுத்த நடவடிக்கைகளின் விவரம் பின்வருமாறு:

    * போலி மற்றும் காலாவதியான மருந்துகளின் முழுப் பட்டியல் தயாரிக்கப்பட்டு மத்திய அரசுக்கும் அனைத்து மாநில அரசுகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Advertisement

    * கர்நாடகாவில் உள்ள ஒவ்வொரு மருத்துவமனை மற்றும் நர்சிங் ஹோமும் பறிமுதல் செய்யப்பட்ட மருந்துகளை பயன்படுத்த வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    *ஆகஸ்ட் 19ம் தேதி நாடு முழுவதும் இந்த மருந்து விநியோகத்தை தடுக்க CDSCO மற்றும் மத்திய ஒழுங்குமுறை முகமைகளின் ஆதரவைக் கோரி, மத்திய சுகாதார அமைச்சர் ஜேபி நட்டாவிற்கு கடிதம் எழுதப்பட்டது.

    * சிறப்புப் விசாரணை குழு மற்றும் மருந்துக் கட்டுப்பாட்டுத் துறை, பெங்களூரு மினர்வா சர்க்கிள் அருகே உள்ள கிருபா ஹெல்த்கேர் நிறுவனத்தில் சோதனை நடத்தி, அதன் உரிமையாளரைக் கைது செய்ததுடன், போலியானவை என சந்தேகிக்கப்படும் மருந்துகளையும் பறிமுதல் செய்துள்ளன.

    Advertisement

    * பெங்களூருவில் உள்ள மருத்துவமனைகள் மற்றும் கிளினிக்குகளுக்கு போலி மருந்துகள் மற்றும் தீவிர சிகிச்சைப் பிரிவு (ICU) ஊசிகள் விநியோகிக்கப்படுவது குறித்து சிறப்பு விசாரணை குழு விசாரித்து வருகிறது. விசாரணை முடிவடைந்தவுடன் அதுபற்றிய விவரங்கள் பொதுமக்களுக்கு தெரிவிக்கப்பட்டு சம்பந்தப்பட்டவர்களுக்கு கடும் தண்டனை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    * நோயாளிகளின் பயன்படுத்தி லாபம் ஈட்டும் எவருக்கும் கருணை காட்டமாட்டோம்.

    கர்நாடக அரசு ஒவ்வொரு நோயாளிகளையும் பாதுகாக்கும். இது வாக்குறுதி மட்டுமல்ல. இது இந்த நாட்டில் உள்ள ஒவ்வொரு போலி மருந்து தயாரிப்பாளருக்கும் விடுக்கப்படும் எச்சரிக்கையாகும்.

    English Summary

    A gang in Karnataka manufactured counterfeit versions of life-saving drugs-including cancer medication-under the names of reputed companies and sold them at half price. Amidst the nationwide shock caused by this incident, Karnataka Health Minister UT Khader stated, "The person selling these fake cancer drugs would have claimed the lives of at least thousands of people. Fortunately, the manufacture of these counterfeit drugs has been uncovered."