50% தள்ளுபடி விலையில் புற்றுநோய் மருந்துகள்.. பெங்களூர் மக்களை குறி வைத்து புது மோசடி! உஷார்!

  • பெங்களூர்: 50% தள்ளுபடி விலையில் புற்றுநோய் மருந்துகள் பெங்களூரில் விற்பனைக்கு வந்திருந்தன. ஆனால், இது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரித்தபோது.. அது போலி மருந்து என்பது தெரிய வந்திருக்கிறது. எனவே மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டிருக்கின்றனர்.

    Advertisement

    பெங்களூரில் சுமார் 90க்கும் மேற்பட்ட மருத்துவமனைகள் மற்றும் கிளினிக்குகளுக்கு 50% தள்ளுபடி விலையில் போலி புற்றுநோய் மருந்துகள் விநியோகம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இது குறித்து சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணையை தொடங்கியிருக்கிறது.

    Advertisement

    இந்த கும்பல் காலாவதியான மருந்துகள் மற்றும் அவசர சிகிச்சை பிரிவில் பயன்படுத்தப்படும் இன்ஜெக்ஷன்களை மலிவு விலைக்கு வாங்கி, பிரபல மருந்து நிறுவனங்களின் பெயர்களை போல போலியாக அச்சிடப்பட்ட லேபிள்களை ஒட்டி, புதிய பாட்டில்களில் அடைத்து மறுபேக்கிங் செய்துள்ளனர். இந்த போலியா, தரம் குறைந்த மருந்துகளை மருத்துவமனைகள் மற்றும் மருந்துக்கடைகளுக்கு சுமார் 50% தள்ளுபடி விலையில் வழங்கி ஆசை காட்டியுள்ளனர்.

    ஆக.18ம் தேதி பெங்களூர் தெற்கு மாவட்டத்தின் பிடாடி மற்றும் தொட்டேரி பகுதிகளில் உள்ள ஒரு பண்ணை வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.5 கோடி மதிப்பிலான போலி மருந்துகள், போலி இன்வாய்ஸ்கள் மற்றும் இன்ஜெக்ஷன் நிரப்பும் கருவிகள் பறிமுதல் செய்யப்பட்டன. மினெர்வா சர்கிள் அருகே உள்ள 'கிருபா ஹெல்த்கேர்' என்ற இடம் இந்த போலி மருந்துகளை சேமித்து விநியோகிக்கும் முக்கிய புள்ளியாக செயல்பட்டிருக்கிறது.

    Advertisement

    இந்த மோசடி நெட்வொர்க்கில் தொடர்புடைய மருந்துக்கடை உரிமையாளரான வீரேஷ்குமார் ஜெயின் என்பவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். இவர் கடந்த 5 ஆண்டுகளாக இந்த சட்டவிரோத தொழிலை நடத்தி வந்ததாக சொல்லப்படுகிறது. இந்த கும்பலின் தலைவனாக கருதப்படும் பிரசாந்த் என்பவர் தற்போது தலைமறைவாக உள்ளார். அவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டிருக்கிறது.

    மருந்துகளை கடத்தவும், விநியோகிக்கவும் உதவியாக இருந்த 15க்கும் மேற்பட்ட மருத்துவ பிரதிநிதிகள் குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த கும்பலுக்கு கர்நாடகா மட்டுமின்றி ஹரியானா, இமாச்சலப் பிரதேசம், தமிழகம் மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களிலும் தொடர்புகள் இருப்பது ரெய்டில் தெரிய வந்திருக்கிறது. தற்போது இந்த போலி மருந்துகளை பெற்ற மருத்துவமனைகளின் பட்டிலை தயாரிக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டிருக்கின்றனர்.

    English Summary

    Fake cancer drugs: Cancer medications were being sold in Bengaluru at a 50% discount; however, an investigation by health department officials revealed that they were counterfeit. Consequently, the public has been advised to remain vigilant.