பெங்களூரு: பெங்களூருவின் ஸ்ரீராம்புரா பகுதியில் இந்து சேகர் என்பவர் தனது மனைவி திவ்யா, மாமியார், இரண்டு மைத்துனர்கள், இரண்டு மைத்துனிகள் மற்றும் 7 வயது சிறுவன் ஆகியோரைக் கொலை செய்துள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. உயிரிழந்தவர்களின் உடல்களை பெங்களூருவின் பல்வேறு பகுதிகளிலும், சிக்கபள்ளாப்பூர் உள்ளிட்ட இடங்களிலும் வீசியதாகக் கூறப்படுகிறது. மனைவியுடன் அடிக்கடி ஏற்பட்ட வாக்குவாதம் மற்றும் குடும்பத் தகராறுகளால் ஆத்திரமடைந்து அவர் இந்தக் கொலைகளைச் செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். உயிரிழந்தவர்கள் அனைவரும் ஒரே நாளில் கொல்லப்படாமல் வெவ்வேறு நாட்களில் கொல்லப்பட்டிருக்கலாம் என்றும் முதற்கட்ட விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகா தலைநகர் பெங்களூரில் சாதாரண குடும்பத் தகராறுக்காக ஒரு குடும்பத்தின் அத்தனை பேரையும் ஒருவர் பின் ஒருவராக ஒருவர் கொன்றுள்ளார் என்பதை உங்களால் நம்ப முடிகிறதா? ஆம்.. அப்படியான ஒரு சம்பவம்தான் நடந்துள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. அப்படிக் கொலை செய்தவர் ஒரு கேப் டிரைவர். அவர் பெயர் இந்து சேகர். குடும்பத் தகராறு காரணமாக தனது மனைவி மற்றும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த 6 பேரைக் கொன்றுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்தக் கொலைகள் தொடர்பாக இந்து சேகரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்தச் சம்பவம் பெங்களூருவின் ராஜாஜிநகர் பகுதியில் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. முதலில் குடும்பத்தில் ஒருவர் பின் ஒருவராகக் காணாமல் போயிருக்கிறார்கள். இது தொடர்பாக ஸ்ரீராம்புரா காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. காணாமல் போனவர்கள் தொடர்பான புகார் குறித்து போலீசார் விசாரணை நடத்திக் கொண்டிருந்த போது தான் வியாழக்கிழமை இரவு இந்தக் கொலைகள் குறித்த அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையின்படி, தனது மனைவி சுனிதாவின் நடவடிக்கைகள் மற்றும் அவர் தொடர்ந்து தனது தாய் வீட்டினருடன் தொடர்பில் இருந்தது இந்து சேகருக்குப் பிடிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. தனது மனைவி குறித்து மாமியார் மற்றும் மைத்துனர்களிடம் புகார் தெரிவித்தபோதெல்லாம் அவர்கள் மனைவிக்கே ஆதரவாகப் பேசியதாக அவர் கருதி வந்துள்ளார். இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் மனைவி மற்றும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த 6 பேரையும் கொலை செய்யத் திட்டமிட்டாராம். அதன்படியே யாருக்கும் சந்தேகம் வராத வகையில் தனது மனைவி, மாமியார், இரண்டு மைத்துனர்கள், அவர்களது மனைவிகள் மற்றும் 7 வயது சிறுவன் ஆகியோரைக் கொலை செய்தாராம். உயிரிழந்தவர்கள் விவரம்: 1. சுனிதா - இந்து சேகரின் மனைவி. ஒவ்வொருவரும் எந்தச் சூழலில் கொலை செய்யப்பட்டனர், கொலைகள் எந்த வரிசையில் நடைபெற்றன என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். விருந்து வைப்பதாகக் கூறி மைத்துனர்களை வீட்டுக்கு அழைத்தார் கொலைகளைத் திட்டமிட்டு வெவ்வேறு கட்டங்களாக இந்து சேகர் செய்திருக்கலாம் என விசாரணையில் தெரியவந்துள்ளது. முதலில் தனது மனைவி சுனிதாவைக் கொலை செய்ததாகக் கூறப்படுகிறது. அதன்பிறகு, விருந்து வைப்பதாகக் கூறி தனது இரண்டு மைத்துனர்களான சிவக்குமார் மற்றும் சங்கர் ஆகியோரை வீட்டுக்கு அழைத்துள்ளார். அவர்கள் வீட்டுக்கு வந்த பிறகு இருவரையும் கொலை செய்ததாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அதன்பின்னர் அவர்களது மனைவிகள், தனது மாமியார் மற்றும் 7 வயது சிறுவன் ஆகியோரையும் கொலை செய்ததாகக் கூறப்படுகிறது. இந்தக் கொலைகளுக்குப் பயன்படுத்தப்பட்ட ஆயுதம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அம்மிக்கல்லைப் பயன்படுத்திக் கொன்றிருக்கலாம் என்று விசாரணை அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். எனினும், கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட ஆயுதம் மற்றும் கொலை செய்யப்பட்ட விதம் இன்னும் உறுதியாகவில்லை. உடல்களை வெவ்வேறு இடங்களில் வீசியதுடன், தடயங்களை அழிக்க ரசாயனங்கள் பயன்படுத்தியதாகச் சந்தேகம் போலீசாருக்கு வந்துள்ளது. கொலைகளுக்குப் பிறகு உயிரிழந்தவர்களின் உடல்களைத் தனது காரில் எடுத்துச் சென்று பெங்களூரு நந்தி ஹில்ஸ் மலைப்பகுதி உள்ளிட்ட வெவ்வேறு இடங்களில் வீசியதாகக் கூறப்படுகிறது. மேலும், கொலை நடந்த வீட்டில் இருந்த ரத்தக் கறைகளை அகற்றவும், தடயங்களை அழிக்கவும் ரசாயனப் பொருட்களைப் பயன்படுத்தியிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். குற்றம்சாட்டப்பட்டவரின் பயண விவரங்கள், உடல்கள் வீசப்பட்டிருக்கக்கூடிய இடங்கள் மற்றும் சம்பவ இடத்தில் எஞ்சியுள்ள தடயங்கள் ஆகியவற்றை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். ஸ்ரீராம்புரா காவல் நிலையத்தில் காணாமல் போனவர்கள் தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் இந்த வழக்கு வெளிச்சத்துக்கு வந்துள்ளது. விசாரணையின்போது இந்து சேகர் முன்னுக்குப் பின் முரணான தகவல்களைத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவரிடம் தொடர்ந்து தங்கள் பாணியில் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது 7 பேரைக் கொலை செய்தது தொடர்பான தகவல்கள் வெளியானதாகக் கூறப்படுகிறது. 7 பேரைக் கொலை செய்ததை இந்து சேகர் ஒப்புக்கொண்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இருப்பினும், இதுவரை ஒருவரது உடல் மட்டுமே மீட்கப்பட்டுள்ளது. நந்தி மலை அடிவாரப் பகுதியில் சுமார் 4 மணி நேரம் போலீசார் தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது 7 வயது சிறுவன் புனீத்தின் உடலை மீட்டனர். எஞ்சிய 6 பேரின் உடல்களைத் தேடும் பணி பெங்களூருவின் பல்வேறு இடங்களில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கொலைகள் எப்படி நடந்தன.. யார் முதலில் கொல்லப்பட்டார்கள்.. எப்படி உடலை வீசினார் என்பது குறித்து இந்து சேகரிடம் விசாரித்து வருகிறார்கள். அதேநேரம் இந்தக் கொலைகளின் பின்னணி மற்றும் சம்பவம் தொடர்பான அனைத்து விவரங்களும் இன்னும் முழுமையாக உறுதிப்படுத்தப்படவில்லை. கர்நாடகாவைத் தாண்டி இந்தியாவையே உலுக்கிய இந்த வழக்கை விசாரிக்க பெங்களூரு மேற்கு மண்டல துணைக் காவல் ஆணையர் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
2. ரூபவதி - அவரது மாமியார்.
3. சிவக்குமார் - அவரது மைத்துனர்.
4. சங்கர் - அவரது மற்றொரு மைத்துனர்.
5. திவ்யா - சிவக்குமாரின் மனைவி.
6. நளினி - சங்கரின் மனைவி.
7. புனீத் - சிவக்குமாரின் 7 வயது மகன்.ரயிலில் ஏசி பெட்டியில் டிக்கெட் எடுக்காமல் ஏறிய பலர்.. பொங்கி எழுந்த பயணிகளின் தரமான சம்பவ வீடியோ
யார் இந்த ரத்தினம்.. திண்டுக்கல் பிரபல தொழிலதிபர் வீட்டில் அதிகாலையிலேயே ரெய்டு ஏன்.. பின்னணி