பெங்களூரு கார் டிக்கியில் ரூ.9 கோடி.. நிலம் வாங்க போன தூத்துக்குடி ஜுவல்லரி ஓனர் சிக்கியது எப்படி?

  • பெங்களூரு: பெங்களூருவிலிருந்து தமிழகம் நோக்கி சென்ற சொகுசு கார் ஒன்றில் கட்டுக்கட்டாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 9 கோடி ரூபாய் ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம், மாநில எல்லைப் பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் தூத்துக்குடியைச் சேர்ந்த பிரபல "சிந்து ஜுவல்லர்ஸ்'" உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.. மாநில எல்லையில் என்ன நடந்தது?

    Advertisement

    கடந்த ஆகஸ்ட் 18-ம் தேதி இரவு, பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டி அருகே போலீசாருக்கு, வருமான வரித்துறையின் 22-வது பிரிவின் துணை இயக்குநர் ஜெகதீஷ் மூலம் ரகசியத் தகவல் கிடைத்தது.

    Advertisement

    பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டி செக்போஸ்ட்டில் அதிரடி

    அதன்படி, கேரள பதிவு எண் கொண்ட கார் ஒன்று, பெங்களூருவிலிருந்து ஓசூர் வழியாக தமிழகத்திற்குச் சட்டவிரோதமாக பணத்தை கடத்தி செல்வதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த ரகசிய தகவலின் அடிப்படையில் மின்னணு நகர அதாவது எலக்ட்ரானிக் சிட்டி போலீசார் அலர்ட் ஆனார்கள்..

    நைட் நேர ரோந்துப் படையினர், ஹோசூர் சாலையில் உள்ள BETL சுங்கச்சாவடிக்கு விரைந்து சென்று கண்காணித்தனர்.. அங்கே சில நிமிடங்களிலேயே எதிர்பார்த்தபடியே கார் ஒன்று வந்தது.. சந்தேகத்திற்கிடமான அந்த காரை தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர்.

    காரின் டிக்கியில் வைக்கப்பட்டிருந்த டிராலி சூட்கேஸை திறந்து பார்த்தபோது, 500 ரூபாய் நோட்டுகள் கட்டுக்கட்டாக அடுக்கி வைக்கப்பட்டிருந்ததை கண்டு காவல்துறையினர் அதிர்ச்சியடைந்தனர். பறிமுதல் செய்யப்பட்ட பணத்தின் மதிப்பு 9 கோடி ரூபாய் என்று தெரியவந்தது. காரில் இருந்த 2 பேரிடமும் விசாரணை நடத்தியபோது, தாங்கள் நகைக் கடைகளில் வசூலித்த பணத்தை எடுத்து செல்வதாக சொன்னார்கள்.. ஆனால், அதற்கான முறையான ஆவணங்களை அவர்களால் சமர்ப்பிக்க முடியவில்லை.

    Advertisement

    10.30 கோடி ரூபாய்

    இதனையடுத்து, காரில் இருந்த 2 பேரையும் கைது செய்த போலீசார், வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். விசாரணையில், கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் தூத்துக்குடியைச் சேர்ந்த "சிந்து ஜுவல்லர்ஸ்" நிறுவனத்தின் உரிமையாளர் 42 வயதான சச்சின் என்பது உறுதியானது.

    இந்த விவகாரத்தைத் தொடர்ந்து, வருமான வரித்துறை அதிகாரிகள் சச்சினுடன் தொடர்புடைய தமிழக வீடுகளில் அதிரடி சோதனைகளை மேற்கொண்டனர். இதில் கணக்கில் காட்டப்படாத மேலும் 1.30 கோடி ரூபாய் ரொக்கம் சிக்கியது. இதன் மூலம் ஒட்டுமொத்தமாக 10.30 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கைப்பற்றப்பட்ட பணம் அத்தனைக்கும், அதன் ஆதாரம் மற்றும் நோக்கம் குறித்து அதிகாரிகள் தீவிரமாக விசாரணை நடத்தி கொண்டிருக்கிறார்கள்..

    Advertisement

    பின்னணியில் யார்

    இந்தத் தொகை நகைக்கடைகளில் வசூலிக்கப்பட்டதா அல்லது ஹவாலா பணமா? நிலம் வாங்கும் சாக்குப்போக்கு ஏன்? தூத்துக்குடிக்கும் பெங்களூருக்குமான இந்த ரகசியப் பணப் பரிவர்த்தனைக்குப் பின்னால் உள்ள பெரிய நெட்வொர்க் எது? இப்படிப் பல கேள்விகள் விடை தெரியாமல் நீடிக்கின்றன.

    பெங்களூரு-தமிழக எல்லையில் இப்போதும் பரபரப்பு குறையவில்லை. வருமான வரித்துறை அதிகாரிகள் சச்சின் மற்றும் அவருடன் வந்த இன்னொரு நபரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்

    நிலம் வாங்க பணம்

    கார் டிக்கியில் பணத்தை பார்த்ததுமே அதுகுறித்து போலீசார் இருவரிடமும் கேட்டிருக்கிறார்கள்.. அதற்கு அவர்கள், "நாங்கள் நகைக்கடை அதிபர்கள், நிலம் வாங்குவதற்காக பணத்தை எடுத்து செல்கிறோம்" என்று சொல்லி உள்ளார்கள்..

    Advertisement

    இந்த பதில்தான் போலீசாருக்கு சந்தேகத்தை அதிகப்படுத்தியிருக்கிறது.. அப்படியானால் டாக்குமெண்ட்களை காட்டுங்கள்? நிலம் எங்கே? என்று கேட்டபோதுதான், இருவருமே விழித்திருக்கிறார்கள். இதன்பிறகே உடனடியாக இவர்கள் கைது செய்யப்பட்டு வருமான வரித்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறார்கள்.

    English Summary

    How Did Thoothukudi Jeweller Get Caught With Rs 9 Crore in Bengaluru Car?