முடிவெட்ட ரூ.50 தான் கொடுப்பேன்.. இந்தியாவிலேயே பணக்கார முதல்வர் டிகே சிவக்குமாரின் மறுபக்கம்

  • பெங்களூர்: கர்நாடகா முதல்வர் டிகே சிவக்குமார் கடந்த 2023 சட்டசபை தேர்தலில் தாக்கல் செய்த வேட்புமனுவில் தனக்கு ரூ.1,400 கோடி சொத்து இருப்பதாக கூறியிருந்தார். இவ்வளவு பெரிய கோடீஸ்வரராக இருக்கும் டிகே சிவக்குமார் இப்போதும் கூட 50 ரூபாய்க்கு முடிவெட்டி கொள்வதாக கூறி அனைவரின் புருவத்தையும் உயர்த்த வைத்துள்ளார்.

    Advertisement

    தற்போது கிராமங்களிலேயே முடிவெட்டுவதற்கு ரூ.50க்கு மேல் செலவாகிறது. இது ஒவ்வொரு கடைகளுக்கு கடை மாறுபடும். ஆனால் டெல்லி,பெங்களூரில் இது சாத்தியமா? என்றால்.. நம்முடைய அனைவரின் பதிலும் இல்லை என்பதாக தான் இருக்கும். ஆனால் கர்நாடகா முதல்வராக இருக்கும் டிகே சிவக்குமார் இப்போதும் ரூ.50 செலவில் முடி வெட்டிக்கொள்வதாக தெரிவித்து அனைவரின் புருவங்களையும் உயர்த்த வைத்துள்ளார்.

    Advertisement

    'இந்தியா டூடே' செய்தி சேனல் சார்பில் 'இந்தியா டூடேரவுண்ட்டேபிள் கர்நாடகா' என்ற நிகழ்ச்சி நடந்தது. இதில் கர்நாடக முதல்வர் டிகே சிவக்குமார் பங்கேற்று பேசினார். அப்போது சார்பில் நடந்த நிகழ்ச்சியில் டிகே சிவக்குமார் பங்கேற்று பேசினார்.

    ''டெல்லியில் நான் வசித்த பகுதியில தனக்கு பிடித்த சலூன் கடைக்காரரிடம் முடி வெட்டிக்கொள்ள விரும்பினேன். ஆனால் முதல்வராக இருப்பதால் முடி வெட்ட பொது இடத்துக்கு சாதாரணமாக செல்ல முடியாது என்று பாதுகாவலர் தடுத்தார். அதேவேளையில் முடிவெட்டுபவரை இங்கே வரவழைக்கலாம் என்று ஐடியா தந்தார். ஆனால் நான் அதனை விரும்பவில்லை.

    Advertisement

    ரூ.50 செலவில் முடி வெட்டி கொண்டேன். சம்பாதிப்பது எவ்வளவு கடினமோ.. அதை உணர்ந்து தான் செலவு செய்ய வேண்டும். என்னை பொறுத்தவரை நான் எளிமையான வாழ்க்கையை வாழ விரும்புகிறேன். நான் பயன்படுத்தும் விலை உயர்ந்த பொருட்கள் எல்லாம் நான் தேடிதேடி போய் வாங்கியது இல்லை.

    எனக்கு நிறைய பரிசுகள் வருகின்றன. இப்போதும் கூட 'லூயிஸ் விட்டன்' (Louis Vuitton) மஃப்லர் உள்ளிட்டவை நண்பர்களிடம் இருந்து பரிசாக கிடைத்தது தான். நான் எனது நண்பர்களை சந்திக்கும் போதெல்லாம் அவர்கள் லூயிஸ் விட்டன், மஃப்லர் போன்ற விலையுயர்ந்த பொருட்களை எனக்கு தருகிறார்கள். நான் அதனை எப்போதும் கேட்டது இல்லை. ஒரு மனிதன் எவ்வளவுதான் சாப்பிட முடியும்? எளிமையான முறையில் வாழ்வது ஒரு அடிப்படை நாகரிகம்'' என்றார்.

    Advertisement

    இப்படி கூறியுள்ள டிகே சிவக்குமார் உண்மையில் பெரும் கோடீஸ்வரர். கடந்த 2023 கர்நாடக சட்டசபை தேர்தலில் டிகே சிவக்குமார் தனது வேட்புமனுவில் இணைத்த பிரமாண பத்திரத்தில் சொத்து விவரங்களை குறிப்பிட்டு இருந்தார். அதில் தன்னுடைய சொத்து மதிப்பு ரூ.1,400 கோடி என்று அவர் கூறியிருந்தார். இவர்தான் இந்தியாவிலேயே பெரும் கோடீஸ்வர முதல்வராக உள்ளார்.

    இந்நிலையில் தான் டிகே சிவக்குமாரை பாஜக விமர்சனம் செய்துள்ளது. டிகே சிவக்குமார் ரூ.1,400 கோடி சொத்துகளை வைத்து கொண்டு ரூ.50க்கு முடிவெட்டுவதாக கூறி தன்னை எளிமையான முதல்வராக காட்ட இரட்டை வேடம் போடுகிறார் என்று விமர்சனம் செய்துள்ளது.

    English Summary

    Karnataka CM D.K. Shivakumar declared assets worth Rs.1,400 crore in the nomination papers filed for the 2023 Assembly elections. Despite being such a wealthy multi-crore tycoon, he has raised eyebrows by revealing that he still gets his hair cut for just ₹50.