தமிழகத்துக்கு நீர் கொடுத்தால்.. கர்நாடகாவே பற்றி எரியும்.. வாட்டாள் நாகராஜ் - நாராயண கவுடா வார்னிங்

  • டெல்லி: தமிழகத்துக்கு அடுத்த 15 நாட்களுக்கு காவிரியில் இருந்து 3,500 கனஅடி தண்ணீர் திறக்க வேணடும் என்று காவிரி நீர் ஒழுங்காற்று குழு பரிந்துரை செய்துள்ளது. இந்நிலையில் தான் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடக்கூடாது. இல்லாவிட்டால் கர்நாடகாவே பற்றி எரியும் என்று கன்னட அமைப்பை சேர்ந்த வாட்டாள் நாகராஜ், கர்நாடகா ரக்சண வேதிகே அமைப்பின் தலைவர் நாராயண கவுடா வார்னிங் கொடுத்துள்ளார்.

    Advertisement

    தமிழகம் மற்றும் கர்நாடகா இடையே காவிரி நதி நீர் பங்கீடு செய்வதில் பிரச்சனை உள்ளது. உச்சநீதிமன்ற உத்தரவுப்படி காவிரி நீர் மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் ஒழுங்காற்று குழு அமைக்கப்பட்டுள்ளது. காவிரி நீர் ஒழுங்காற்று குழுவின் பரிந்துரையின்படி காவிரி நீர் மேலாண்மை ஆணையம் காவிரி நீர் திறப்பது தொடர்பான உத்தரவுகளை பிறப்பிக்கப்பட்டு வருகிறது.

    Advertisement

    இந்நிலையில் தான் டெல்லியில் இன்று காவிரி நீர் ஒழுங்காற்று குழுவின் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் கர்நாடகா மற்றும் தமிழகத்தின் அதிகாரிகள் காணொளி காட்சி மூலமாக பங்கேற்றனர். அப்போது அடுத்த 15 நாட்களுக்கு கர்நாடகா காவிரியில் தமிழகத்துக்கு தினமும் 3,500 கனஅடி தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

    இதற்கு கர்நாடகாவில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. தமிழகத்துக்கு தண்ணீர் திறந்தால் தீவிரமாக போராட்டம் நடத்தப்படும் என்று

    கர்நாடக அரசுக்கு கன்னட அமைப்புகள் வார்னிங் கொடத்துள்ளது. இதுபற்றி கன்னட சலுவளி வாட்டாள் கட்சி தலைவர் வாட்டாள் நாகராஜ் கூறுகையில், ''
    கர்நாடகத்தில் கடும் வறட்சி நிலவுகிறது. காவிரி அணைகளில் தண்ணீர் இல்லை. இந்த சூழலில் தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்று கூறியிருப்பதை ஏற்க முடியாது.

    Advertisement

    தமிழகத்துக்கு ஒரு சொட்டு நீர் கூட திறக்கக்கூடாது.
    இதில் முதல்வர் டிகே சிவக்குமார் உறுதியாக இருக்க வேண்டும். கர்நாடக அரசு காவிரி நீரை திறந்துவிட்டால் நாங்கள் தீவிரமாக போராட்டம் நடத்துவோம். ஆயிரக்கணக்கானோர் சிறை செல்லவும் தயாராக உள்ளோம்.
    காவிரி நீரை திறந்துவிட்டால் கர்நாடகம் தீப்பற்றி எரியும்'' என்று வார்னிங் செய்துள்ளார்.

    அதேபோல் கர்நாடகா ரக்சண வேதிகே அமைப்பின் தலைவர் நாராயண கவுடா கூறுகையில், ''தற்போதைய சூழலில் கர்நாடகாவில் இரந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட முடியாதசூழல் உள்ளது. ஆனால் தினமும் 3,500 கனஅடிதண்ணீரை 15 நாட்கள் திறந்து விட வேண்டும் என்று கூறியுள்ளது. இதன்மூலம் 4 டிஎம்சி வரை தண்ணீர் கொடுக்க வேண்டி உள்ளது.

    Advertisement

    இதனை மாநில அரசு தடுக்க வேண்டும். காவிரி நீர் மேலாண்மை ஆணையம் அல்லது நீதிமன்றத்துக்கு செல்ல வேண்டும். ஆனால் அதனை செய்யாமல் தமிழகத்துக்கு தண்ணீர் கொடுத்தால் பெங்களூர், காவிரி கரையோர நகரங்கள் குடிநீரின்றி தவிக்க வேண்டிய சூழல் வரும். இதனால் தமிழகத்துக்கு எந்த காரணம் கொண்டும் தண்ணீர் வழங்க கூடாது. இல்லாவிட்டால் நாங்கள் புரட்சிகரமான முறையில் போராட்டம் நடத்துவோம்'' என்று எச்சரித்துள்ளார்.

    மேலும் டாக்டர் ராஜ்குமார் ரசிகர் மன்ற தலைவர் சாரா கோவிந்த் உள்பட பல்வேறு கன்னட அமைப்புகளின் தலைவர்கள் காவிரி நீர் திறக்கக்கூடாது என்று கூறியுள்ளனர். தமிழகத்துக்கு காவிரி நீரை திறந்தால் கர்நாடகத்தில் கன்னட அமைப்புகளின் போராட்டங்கள் தீவிரம் அடையும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இதனால் மீண்டும் தமிழகம் - கர்நாடகா இடையே காவிரி நீர் பங்கீடு தொடர்பாக பதற்றம் ஏற்படலாம் என்று அஞ்சப்படுகிறது.

    English Summary

    The Cauvery Water Regulation Committee has recommended the release of 3,500 cubic feet of water per second from the Cauvery river to Tamil Nadu for the next 15 days. Amidst this, Vatal Nagaraj of a Kannada organization and Narayana Gowda, leader of the Karnataka Rakshana Vedike, have issued a warning stating that water should not be released to Tamil Nadu, adding that Karnataka would otherwise go up in flames.