நடத்தையில் ஏற்பட்ட சந்தேகம்.. 22 வயது காதலிக்கு, காதலன் கொடுத்த கொடூர தண்டனை.. உயிரே போச்சே

  • பெங்களூர்: பெங்களூரில் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் காதலியுடன், காதலன் சண்டையிட்டார். சண்டை முற்றவே ஆக்ரோஷான காதலன், தனது காதலியின் கழுத்தை கத்தியால் அறுத்து படுகொலை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

    Advertisement

    மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங்கை சேர்ந்தவர் புர்வா லெப்சா (வயது 25). இவருக்கும் சிக்கிம் மாநிலத்தை சேர்ந்த 22 வயது நிரம்பிய அதி ஹங்மா சுபா என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. முதலில் இருவரும் நட்பாக பழகினர்.

    Advertisement

    பிறகு இந்த நட்பு காதலாக மாறியது. இருவரும் உருகி உருகி காதலித்தனர். பல்வேறு இடங்களில் அவர்கள் சேர்ந்து வசித்து தனித்தனியாக பணியாற்றி வந்தனர். இந்நிலையில் தான் இவர்கள் 2 பேரும் ஜோடியாக கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு பெங்களூரு சென்றனர்.

    பெங்களூரில் இருவரும் தொட்டனஹள்ளியில் வீடு ஒன்றை எடுத்து ஜோடியாக வசிக்க தொடங்கினர். அதன்பிறகு புர்வா தனியார் ஹோட்டலில் பணிக்கு சேர்ந்தார். அதேபோல் அதி, சலூன் ஒன்றில் ரிஷப்ஷனிஸ்ட் ஆக பணிக்கு சேர்ந்தார். இந்நிலையில் தான் புர்வாவிற்கு தனது காதலியான அதியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டது. அதி இன்னொருவருடன் கள்ளக்காதலில் இருப்பதாக புர்வா நினைத்தார்.

    Advertisement

    மேலும் தன்னை கழற்றிவிட்டுவிட்டு அதி தனது கள்ளக்காதலனுக்கு முக்கியத்துவம் கொடுத்து விடுவாரோ என்று நினைத்தார். இந்நிலையில் தான் இன்று காலையில் இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த புர்வா தனது காதலி அதியின் கழுத்தை கத்தியால் வெட்டினார். இதில் அதி துடிதுடித்து பலியானார். இதுபற்றிய புகாரின் பேரில் பெல்லந்தூர் போலீசார் வழக்குப்பதிவு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    English Summary

    In Bengaluru, a boyfriend got into an argument with his girlfriend over suspicions regarding her conduct. As the dispute escalated, the enraged boyfriend brutally murdered her by slitting her throat with a knife-an incident that has caused widespread shock.