நள்ளிரவில் ஜொலிக்கும் பெங்களூர்.. RCB வெற்றியால் ரசிகர்கள் செய்த சம்பவம்.. இந்த வீடியோ பாருங்க

  • பெங்களூர்: கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் ஐபிஎல் இறுதி போட்டியில் ஆர்சிபி அணி அபார வெற்றி பெற்று தொடர்ந்து 2வது முறையாக கோப்பையை வென்றுள்ளது. இந்த வெற்றியை ஆர்சிபி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் தான் பெங்களூரில் வெற்றி கொண்டாட்டம் கலைகட்டி உள்ளது. இரவை பகலாக்கும் வகையில் வானில் வண்ண வண்ண பட்டாசுகளை வெடிக்க வைத்து ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இதுதொடர்பான வீடியோ வெளியாகி உள்ளது.

    Advertisement

    நடப்பு ஐபிஎல் சீசனின் இறுதி போட்டி இன்று குஜராத் மாநிலம் அகமதாபாத் மைதானத்தில் நடந்தது. இந்த போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) மற்றும் குஜராத் அணிகள் மோதின. முதலில் பேட் செய்த குஜராத் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுக்கு 155 ரன்கள் எடுத்தது.

    Advertisement

    இதையடுத்து களமிறங்கிய ஆர்சிபி அணி 18 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 161 ரன்கள் எடுத்து சாம்பியன் பட்டம் வென்றது.இறுதி வரை ஆட்டமிழக்காமல் விராட் கோலி 42 பந்துகளில் 75 ரன்கள் குவித்து வெற்றியை உறுதி செய்தார்.

    இதன்மூலம் ஆர்சிபி அணி கடந்த ஆண்டை தொடர்ந்து 2வது முறையாக ஐபிஎல்லில் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. இந்த வெற்றி கொண்டாட்டத்தை நாடு முழுவதும் இருக்கும் ஆர்சிபி ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். குறிப்பாக பெங்களூர் உள்பட கர்நாடகா முழுவதும் கொண்டாட்டம் களைகட்டி உள்ளது.


    பெங்களூரில் ரசிகர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர். வண்ண வண்ண பட்டாசுகளை ரசிகர்கள் வெடிப்பதால் பெங்களூர் நகரின் வானம் முழுவதும் ஒளிர்ந்த நிலையில் உள்ளது. இதுதொடர்பான வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி உள்ளது. மேலும் சாலைகளில் ஆர்சிபி அணியின் கொடிகளை கைகளில் ஏந்தி வாகனங்களி்ல பயணித்து வருகின்றனர்.

    அதேபோல் பல சாலைகளில் இளைஞர்கள் தங்களின் வாகனங்களை ரோட்டில் நிறுத்தி ஆட்டம் ஆடி கொண்டாடி வருகின்றனர். இதனால் சில இடங்களில் போக்குவரத்துகள் பாதிக்கப்பட்டுள்ளது. ஏராளமான ரசிகர்கள் சாலையில் குவிந்து நடனமாடியும், ஆர்சிபி.. ஆர்சிபி என்று கோஷமிட்டு வெற்றியை கொண்டாடுவதால் வாகனங்கள் செல்ல முடியாமல் நிற்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் வந்து ரசிகர்களை விலக்கி வாகனங்கள் செல்ல வழி ஏற்படுத்தி கொடுத்து வருகின்றனர். மொத்தத்தில் ஆர்சிபி அணியின் இந்த வெற்றி என்பது பெங்களூரைநகரில் தீபாவளி கொண்டாட்டத்தை போன்ற சூழலை ஏற்படுத்தி உள்ளது.

    English Summary

    RCB IPL Champion 2026: Just like last year, the RCB team has achieved a spectacular victory in the IPL final this year as well, clinching the trophy for the second consecutive time. RCB fans are currently celebrating this triumph. Amidst this excitement, victory celebrations have reached a fever pitch in Bengaluru. Fans are celebrating by bursting colorful fireworks into the sky, effectively turning night into day. A video capturing these festivities has surfaced online.