பெங்களூரு சுரங்கப் பாதை .. கர்நாடகா சிஎம்மின் மாஸ்டர் பிளான்.. சர்ச்சையான இரண்டு சட்டங்கள்

  • பெங்களூர்: கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமாரின் கனவுத் திட்டமான 40,000 கோடி மதிப்பிலான 16.75 கி.மீ. சுரங்கப்பாதை திட்டத்தை எளிதாக நிறைவேற்றும் பொருட்டு கர்நாடக அரசின் இரு புதிய சட்டத் திருத்த மசோதாக்களை விவாதம் இன்றி நிறைவேற்றி உள்ளது கர்நாடகா அரசு. ,

    Advertisement

    கடந்த ஆகஸ்ட் 24ஆம் தேதி அன்று நடைபெற்ற கர்நாடக சட்டப்பேரவை கூட்டத்தொடரில், கர்நாடக அரசு பூங்காக்கள் (பாதுகாப்பு) திருத்தச் சட்டம், 2026
    சட்டத் திருத்தம், பெங்களூரு பெருநகர நிலப் போக்குவரத்து அதிகார அமைப்பு திருத்தச் சட்டம், 2026
    சட்டத் திருத்தம், ஆகிய இரு முக்கிய சட்டத் திருத்த மசோதாக்கள் எந்தவித விவாதமும் இன்றி நிறைவேறி உள்ளது. இதற்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது அது பற்றி விவரமாக பார்ப்போம்.

    Advertisement


    கர்நாடக அரசு பூங்காக்கள் (பாதுகாப்பு) திருத்தச் சட்டம், 2026 சட்டத் திருத்தம்

    கர்நாடகாவில் கொண்டு வரப்பட்ட 1975-ஆம் ஆண்டின் பூங்காக்கள் பாதுகாப்புச் சட்டத்தின் பிரிவு 5-ல் மாற்றம் செய்யப்பட்டு, பொதுப் பயன்பாட்டுத் திட்டங்களுக்காக நகர்ப்புற பூங்கா நிலங்களில் 5% வரை விற்பனை, குத்தகை அல்லது பிற வழிகளில் பயன்பாட்டிற்கு மாற்ற அனுமதி அளிக்கப்பட்டுள்ளது . அதே போல இந்த நில மாற்றங்களை ஆய்வு செய்து அனுமதி அளிக்க கர்நாடகா அரசு சார்பில் ஒரு 'உயர்நிலைக் குழு' உருவாக்கப்படும் என்று சட்ட திருத்தத்தில் கூறப்பட்டுள்ளது.

    Advertisement

    கடும் எதிர்ப்பு

    பெங்களூரில் உள்ள புகழ்பெற்ற லால்பாக் (240 ஏக்கர்) மற்றும் கப்பன் பூங்கா (197 ஏக்கர்) போன்ற பசுமைப் பகுதிகளை வணிகமயமாக்கவும், உள்கட்டமைப்பு பணிகளுக்குப் பயன்படுத்தவும் இது வழிவகுக்கும் என எதிர்க்கட்சிகளும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் குற்றம் சாட்டுகின்றனர்.
    அதானி குழுமம் குறைந்த விலைக்கு ஒப்பந்தம் எடுத்துள்ள சுரங்கப் பாதை திட்டத்திற்காக, லால்பாக் பூங்காவின் நிலத்தைப் பயன்படுத்தவே இச்சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளதாக பா.ஜ.க நேரடியாக குற்றம் சாட்டியுள்ளது.

    பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யா, லால்பாக் பூங்காவின் 5 ஏக்கர் நிலத்தையும், ஹெப்பால் ஏரியின் 3.45 ஏக்கர் நிலத்தையும் இத்திட்டம் பாதிக்கும் எனக் கூறி கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

    Advertisement

    கர்நாடக முதல்வர் சிவகுமார் விளக்கம்

    கர்நாடகா முதல்வர் டி.கே. சிவகுமார் இக்குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார். இது பற்றி அவர் கூறும் போது, சுரங்கப் பாதை பூங்காவிற்கு அடியில் செல்லுமே தவிர, பூங்கா பாதிக்கப்படாது, கட்டுமானக் காலத்தில் இயந்திரங்களை வைக்க மட்டுமே மிகச் சிறிய பகுதி தற்காலிகமாகப் பயன்படுத்தப்படும் .
    மேலும், பெங்களூரைச் சுற்றி 5,000 ஏக்கரில் லால்பாக் போன்ற 6 புதிய பூங்காக்கள் உருவாக்கப்படும் என்று கூறியுள்ளார்.


    பெங்களூரு பெருநகர நிலப் போக்குவரத்து அதிகார அமைப்பு (BMLTA) திருத்தச் சட்டம்

    இந்த சட்டத் திருத்தத்தின் மூலமாக (பிரிவு 19(6)), 2023 முதல் 2026-இல் BMLTA விதிகள் அறிவிக்கப்படும் வரை தொடங்கப்பட்ட அனைத்து பெரிய போக்குவரத்து திட்டங்களுக்கும் "முன்தேதியிட்ட தானியங்கி ஒப்புதல்" வழங்கப்பட்டிருக்கிறது. இதுவும் சர்ச்சைகள் ஆகி உள்ளது.

    Advertisement

    ஏனெனில் பெங்களூரின் அனைத்து பெரிய போக்குவரத்து திட்டங்களும் 'முழுமையான போக்குவரத்து திட்டத்துடன்' பொருந்துகிறதா என்பதை BMLTA ஆய்வு செய்து ஒப்புதல் அளிக்க வேண்டியிருந்தது.
    தற்போது புதிய சட்ட திருத்தத்தின் மூலம் பெங்களூரு சுரங்கப் பாதை திட்டம் போன்ற பெரிய திட்டங்கள் BMLTA-வின் நிபுணர் ஆய்வில் இருந்து தப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது தான் சர்ச்சைக்கு காரணம் ஆகும்

    பெங்களூரில் சுரங்கப்பாதை திட்டம் பெங்களூரின் காலநிலை இலக்குகள் மற்றும் பொதுப் போக்குவரத்து சார்ந்த திட்டங்களுக்கு எதிராக உள்ளது என்றும், இது தனிநபர் கார் பயன்பாட்டையே அதிகரிக்கும் என்பது பெங்களூரு பெரு நகர வளர்ச்சி குழுமத்தின் முடிவாக இருந்தது. இப்போது அந்த நிலைப்பாடியில் இருந்து மாறி உள்ளது.

    Advertisement

    புதிய சட்டத்தை பூங்காக்களின் "முழு அளவிலான ரியல் எஸ்டேட் வணிகமயமாக்கல்" என்று பாஜக விமர்சித்துள்ளதுடன், பெங்களூருவின் புகழ்பெற்ற லால்பாக் தாவரவியல் பூங்கா வழியாக சர்ச்சைக்குரிய சுரங்கப்பாதை அமைப்பதற்கு வழிவகுக்கும் நோக்கிலேயே இது கொண்டுவரப்பட்டுள்ளது என்றும் குற்றம் சாட்டியுள்ளது. இந்தத் திட்டத்திற்கு குறைந்தபட்ச ஏலதாரராக உள்ள அதானி குழுமத்தால் இப்பணி மேற்கொள்ளப்பட உள்ளது

    பெங்களூரு ஏற்கனவே மரங்களின் நிழலை இழந்து, பசுமை இடங்களுக்காக ஏங்கி, மூச்சுத் திணறுகிறது. நமது பூங்காக்களை விரிவுபடுத்தி, தீவிரமாகப் பாதுகாப்பதற்குப் பதிலாக, இந்த அரசாங்கம் பூங்களை பணமாக்குவதற்காகக் காத்திருக்கும் ஒரு தனியார் நில வங்கியாக மட்டுமே பார்க்கிறது," என்று கர்நாடக சட்டமன்றத்தின் பாஜக எம்.எல்.ஏ மற்றும் எதிர்க்கட்சித் தலைவரான ஆர். அசோகா விமர்சித்துள்ளார்.

    ஆனால் கர்நாடக அரசு, பெங்களூருவில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்கும், அதிகரித்து வரும் போக்குவரத்துச் சவால்களுக்குத் தீர்வு காண்பதற்கும் உள்ள உடனடி மற்றும் அவசரத் தேவையைக் கருத்தில் கொண்டு, நிர்வாக முடிவெடுப்பதில் தொடர்ச்சியை உறுதி செய்ய இந்தத் திருத்தம் அவசியம்" என்று புதிய சட்டம் குறித்து கூறுகிறது.

    English Summary

    Is Bengaluru’s 'Garden City' Status at Risk? The Controversy Behind Karnataka’s New Infrastructure Laws