கர்நாடக முதல்வர் டிகே சிவக்குமாருக்கு சூனியம்? பெங்களூர் வீட்டருகே தலையின்றி கிடந்த சேவல் + எலுமிச்சையால் ஷாக்

  • பெங்களூர்: கர்நாடகா முதல்வராக கடந்த 3ம் தேதி டிகே சிவக்குமார் பதவியேற்றார். இந்நிலையில் தான் பெங்களூர் சதாசிவநகரில் உள்ள டிகே சிவக்குமாரின் வீட்டின் பின்னால் செல்லும் முச்சந்தியில் கழுத்து அறுக்கப்பட்ட சேவல், 3 எலுமிச்சை பழங்கள் கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. டிகே சிவக்குமாரின் அரசியல் வாழ்க்கையில் சரிவை ஏற்படுத்துவதற்காக சூனியம் வைக்கப்பட்டதாக தகவல்கள் பரவி வருகிறது.

    Advertisement

    கர்நாடகாகாங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. முதல்வராக இருந்த சித்தராமையா தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து புதிய முதல்வராக டிகே சிவக்குமார் பதவியேற்றார். இவர் கடந்த 3ம் தேதி முதல்வராக பதவியேற்று செயல்பட்டு வருகிறார்.

    Advertisement

    டிகே சிவக்குமார், பெங்களூர் சதாசிவநகரில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். டிகே சிவக்குமார் வசித்து வரும் வீட்டுக்கு பின்புறம் எஸ் பங்காரப்பா மைதானம் அமைந்துள்ளது. இந்த மைதானத்தில் அருகே மூன்று சாலைகள் ஒன்றாக இணையும் முச்சந்தி உள்ளது.

    இந்நிலையில் தான் இன்று காலையில் முச்சந்தியில் சேவல் ஒன்று கழுத்து அறுக்கப்பபட்டு கிடந்தது. அதன் அருகே 3 எலுமிச்சை பழங்கள், குங்குமம் உள்ளிட்டவை கிடந்தன. சாலையில் வட்டம் வரைப்பட்டு இருந்தது. இதனை பார்த்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். சாலையில் நடக்கவே பயந்தனர். யாரோ இரவு நேரத்தில் பூஜை செய்து சேவல் பழிகொடுத்ததாக நினைத்தனர்.

    Advertisement

    மேலும் முதல்வர் டிகே சிவக்குமாரின் இல்லத்தின் அருகே இந்த சம்பவம் நடந்ததால் அவரது அரசியல் வளர்ச்சியை தடுக்கும் வகையில் சூனியம் வைக்கப்பட்டதாக தகவல்கள் பரவி தொடங்கியது. இதுபற்றி அறிந்தவுடன் காவல்துறையினர் அங்கு சென்று சேவல்மற்றும் எலுமிச்சை பழத்தை அப்புறப்படுத்தினர். அதோடு பொதுமக்களிடம் பயத்தை போக்குவதற்காக அந்த இடத்தை சுத்தம் சென்றனர்.

    இந்த சேவல் மற்றும் எலுமிச்சை பழம் எப்படி அங்கு வந்தது? என்பது தெரியவில்லை. இதுபற்றி போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர். முதற்கட்டமாக அந்தபகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

    English Summary

    DK Shivakumar assumed office as the Chief Minister of Karnataka on the 3rd. Amidst this, a major stir has been caused by the discovery of a rooster with its throat slit and three lemons at a three-way junction behind his residence in Sadashivanagar, Bengaluru. Rumors are circulating that a black magic ritual was performed to cause a downfall in D.K. Shivakumar's political career.