இது ஆப்கானிஸ்தானா? பாகிஸ்தானா? இஸ்லாமிய தம்பதியை திட்டி தீர்த்த அரசு பஸ் கண்டக்டர்! வீடியோ

  • பெங்களூர்: கர்நாடகாவில் தான் செல்லும் ஊருக்கு பதிலாக இன்னொரு ஊருக்கு செல்லும் அரசு பஸ்சில் இஸ்லாமிய தம்பதி ஏறினர். இதுதொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதத்தில் இஸ்லாமிய தம்பதியை கீழே இறக்கிவிட்ட பஸ் கண்டக்டர், ''இது ஆப்கானிஸ்தானா? பாகிஸ்தானா?'' என கேள்வி கேட்ட வீடியோ வெளியாகி சர்ச்சையை கிளப்பி உள்ளது.

    Advertisement

    தற்போது இணையதளங்களில் வீடியோ ஒன்று வேகமாக பரவி வருகிறது. அந்த வீடியோவில் கர்நாடகா அரசு போக்குவரத்து கழகத்துக்கு சொந்தமான கேஎஸ்ஆர்டிசி பஸ்சில் இருந்து கண்டக்டர் ஒருவர் இறங்குகிறார்.

    Advertisement

    பஸ் அருகே நிற்கும் முஸ்லிம் தம்பதிக்கும், கண்டக்டருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படுகிறது. பஸ் மாறி ஏறியதால் தான் இந்த வாக்குவாதம் நடந்தது.

    அப்போது கண்டக்டர், ''ஏன் பஸ்சின் போர்ட்டை பார்த்து ஏறவில்லை? நிற்க சொன்னதால் பஸ்சை நிறுத்திவிட்டேன். வாயை மூடிக்கொண்டு செல்ல வேண்டும். பிரச்சனை செய்ய இது ஆப்கானிஸ்தானா, இல்லை பாகிஸ்தானா? '' என்று கேட்கிறார்.

    இதையடுத்து அந்த தம்பதி, ''பாகிஸ்தான் என்று சொல்ல வேண்டாம்'' என்று கூறினர். இதையடுத்து கண்டக்டர் பஸ்சில் ஏறி சென்றார். இந்த சம்பவத்தை அந்த இஸ்லாமிய நபர் மற்றும் அங்கிருந்தவர்கள் தனது செல்போனில் வீடியோவாக எடுத்தார். இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.

    Advertisement
    சிக்கலில் பெங்களூர்! ஐடி வளர்ச்சியும்.. உள்ளூர் மக்களின் வேலை வாய்ப்பும்! எப்போது நிறைவேறும் கனவு?

    இஸ்லாமியர் நபர் பஸ் மாறி ஏறியதற்கு ஆப்கானிஸ்தான், பாகிஸ்தானா? என்று கேட்ட கண்டக்டர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர். இதுபற்றி நடத்திய விசாரணையில் தான் இந்த சம்பவத்தின் பின்னணி பற்றிய பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.

    அதாவது மண்டியா மாவட்டம் கேஆர் பேட்டைக்கு செல்வதற்காக மவுலானா சாஹிப் என்பவர் தனது மனைவியுடன் பஸ்சுக்காக காத்திருந்தார். அப்போது கேஎஸ்ஆர்டிசி பஸ் சிவமொக்காவிற்கு சென்று கொண்டிருந்தது. அந்த பஸ் கேஆர் பேட்டைக்கு தான் செல்வதாக மவுலானா சாஹிப் நினைத்து ஏறினார்

    Advertisement

    பஸ்சில் ஏறி கேஆர் பேட்டைக்கு டிக்கெட் கேட்டபோது தான் அது அங்கு செல்லாது என்பதும், பஸ் சிவமொக்கா செல்வதும் தெரியவந்தது. இதையடுத்து அந்த தம்பதி பஸ்சை நிறுத்தும்படி கூறினர். இதுதொடர்பாக தம்பதி மற்றும் கண்டக்டர் இடையே ஏற்பட்ட பிரச்சனை தான் இது என்பது தெரியவந்துள்ளது.

    English Summary

    In Karnataka, a Muslim couple boarded a state-run bus that was headed to a different destination than the one they intended to reach. Following an argument, the bus conductor made the couple get off the vehicle and asked, "Is this Afghanistan? Or Pakistan?" A video of this incident has surfaced, sparking a controversy.