15,000 டூ 25 லட்சம் சம்பளம்.. 2.5 ஆண்டுகளில் வாங்கிய ஐடி ஊழியர்.. சக்சஸ் பார்முலா

  • பெங்களூர்: ஒரு ஐடி ஊழியர் வெறும் 15 ஆயிரம் சம்பளத்திற்கு இன்டர்ன்ஷிப் போனவர், அடுத்த வெறும் 2.5 வருடங்களில் 25 லட்சம் சம்பளம் வாங்கும் அளவிற்கு மாறி உள்ளார். அவரது சக்சஸ் பார்முலாவை வருடைய முன்னாள் கல்லூரி தோழியான ருதுஜா என்பவர் சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொண்டுள்ளார். இந்த பதிவு பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. வெறும் இரண்டரை ஆண்டுகளில், இன்டர்ன்ஷிப்பில் உதவி தொகை வாங்கி கொண்டு வேலை செய்தவர், எப்படி அதிக சம்பள வேலை வாய்ப்பை பெற்றார் என்று விளக்கி உள்ளார்.

    Advertisement

    15 ஆயிரம் இன்டர்ன்ஷிப் வாங்கி கொண்டு வேலைக்கு சேர்ந்தவர், தனது கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பால், அடுத்த ஆறு மாதங்களுக்குள் தனது முதல் முழுநேரப் பணியைப் பெற்றார். அதன் மூலம் ஆண்டுக்கு ரூ. 7 லட்சம் சம்பாதித்தார். அதன் பின்னர் அவர் ஒரு படி அதிகமான வேலையில் சேர்ந்தார். இதனால் அவரது பேக்கேஜ் ஆண்டுக்கு 9 லட்சமாக உயர்ந்தது. அதற்குப் பிறகு, அவர் ஆண்டுக்கு ரூ. 14 லட்சம் மதிப்புள்ள மற்றொரு வேலை வாய்ப்பைப் பெற்றார். அதை அவருடைய தற்போதைய நிறுவனம் அவரைத் தக்க வைத்துக் கொள்வதற்காக அள்ளி கொடுத்தது. பின்னர் அவர் சிங்கப்பூரைச் சேர்ந்த ஒரு நிறுவனத்தில் ஆண்டுக்கு 25 லட்சம் பேக்கேஜ்ஜில் வேலை வாய்ப்பை பெற்றுள்ளார். வெறும் 2.5 வருடங்களில் 4 நிறுவனங்களுக்கு மாறிய அவர் இந்த உயரத்தை அடைந்துள்ளார்.

    Advertisement

    அந்த ஐடி ஊழியரின் கல்லூரி தோழி ருதுஜா எழுதிய பதிவில், "நான் அவனுடைய வளர்ச்சியை கண்டு உண்மையில் மிகவும் சந்தோஷப்படுகிறேன். கல்லூரி நாட்களில் இருந்தே அவனது அர்ப்பணிப்பை நான் பார்த்திருப்பதால், என் நண்பன் இதற்கு முற்றிலும் தகுதியானவர். அதே நேரத்தில், என்னால் யோசிக்காமல் இருக்க முடியவில்லை... 'நானும் கோடிங் செய்வதைத் தொடர்ந்திருந்தால், நானும் அங்கேயே இருந்திருப்பேனா? நான் என்னை யாருடனும் ஒப்பிடக்கூடாது என்று எனக்குத் தெரியும். ஒவ்வொருவருக்கும் ஒரு பயணம் இருக்கிறது. "இருப்பினும்... உங்கள் சக கல்லூரி நண்பர் வளர்வதைப் பார்க்கும்போது, அது உங்கள் சொந்தப் பாதையைப் பற்றி யோசிக்க வைக்கும் தானே" என்று நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

    Advertisement

    எக்ஸ் தளத்தில் ருதுஜா வெளியிட்ட பதிவிற்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. பல இளம் நிபுணர்களின் மனதைத் தொட்டுள்ளது, ஏனெனில் ஒரு துறையில் நுழைந்த புதிதில் சம்பளம் குறைவாக இருக்கும்.. ஆனால் நாம் தொடர்ந்து திறமையை வளர்த்துக் கொண்டே இருக்க வேண்டும்.

    அதேபோல ஒரே இடத்தில் தேங்கி நிற்காமல், தகுதிக்கேற்ப சரியான நேரத்தில் அடுத்தடுத்த வேலைகளுக்கு மாறுவது குறுகிய காலத்தில் நம் சம்பளத்தை பல மடங்கு உயர்த்தும் என்பது ஐடி ஊழியரின் முயற்சியில் நாம் அறிய முடிகிறது.

    அதேபோல் நம்மைச் சுற்றியுள்ள நண்பர்கள் வேகமாக வளரும்போது, "நாம் பின் தங்கிவிட்டோமோ?" என்று நமக்கு தோன்று இயல்பான ஒன்று தான்.. அதுதான் அவரது கல்லூரி தோழிக்கும் தோன்றியுள்ளது. ஆனால், ஒவ்வொருவரின் பயணமும், திறமையும், பாதையும் மாறிவிடும் என்பது உண்மை. பிறரின் வெற்றியைக் கண்டு பொறாமைப்படாமல், அதே சமயம் நம்முடைய பாதையை சுயபரிசோதனை செய்து கொள்வதே உண்மையான வளர்ச்சியாக இருக்கும்.

    Advertisement

    இதுபற்றி நெட்டிசன் ஒருவர் எழுதிய பதிவில், "உங்கள் கல்லூரி நண்பருக்காக உண்மையாகச் சந்தோஷப்படும் அதே வேளையில், உங்கள் சொந்த எண்ணங்களைப் பற்றி நேர்மையாக இருந்தது எனக்குப் பிடித்துள்ளது. அந்த வகையான சுய விழிப்புணர்வு அரிதானது," என்று கூறியுள்ளார்.

    இன்னொரு நெட்டிசன் வெளியிட்ட பதிவில், "பொதுவாக வேலையைவிட்டு உடனே மாறுவது என்பது இரண்டு பக்கங்களையும் கொண்டது. சரியான நேரத்தில் மாறுவது சம்பளத்தையும் வாய்ப்புகளையும் விரைவாக உயர்த்தும், ஆனால் அதிகச் சம்பளத்திற்காக மட்டுமே ஒவ்வொரு முறையும் மாறுவது மீண்டும் மீண்டும் புதிதாகத் தொடங்குவதையும் குறிக்கலாம்-புதிய குழு, புதிய எதிர்பார்ப்புகள், புதிய அழுத்தம் மற்றும் குறைந்த நிலைத்தன்மை. சம்பளத்திற்காக மட்டும் மாறாமல், வளர்ச்சி + சம்பளம் ஆகிய இரண்டிற்காகவும் மாறுவதே முக்கியமானது," என்று கூறியுள்ளார்.

    Advertisement

    "அக்கரையில் உள்ள மாட்டுக்கு இக்கரையில் உள்ள பச்சை எப்போதும் அதிகமாகவே தெரியும். ஆனால் நிஜம் வேறு; நீங்கள் எங்கிருந்தாலும், ஒரு நல்ல நிலையில் தான் இருக்கிறீர்கள்," என்று இன்னொரு நெட்டிசன் கூறியுள்ளார்.

    English Summary

    An IT professional who started as an intern earning a modest salary has risen to command an annual salary of ₹25 lakh in just two and a half years. His former college classmate, Rutuja, shared his success formula on social media, and the post has received a tremendous response.