வேலையை காட்டும் வாட்டாள் நாகராஜ்.. அத்திப்பள்ளி முற்றுகை! தமிழக-கர்நாடக எல்லை நாளை மூடல்?

  • பெங்களூர்: மேகதாது அணை திட்டத்தை உடனே அமல்படுத்தக்கோரி, தமிழக-கர்நாடக எல்லையான அத்திப்பள்ளியை முற்றுகையிட்டு நாளை போராட்டம் நடத்தப்போவதாக கன்னட அமைப்பின் தலைவர் வாட்டாள் நாகராஜ் அறிவித்திருக்கிறார். முன்னதாக இந்த முற்றுகை போராட்டத்தை கைவிட வேண்டும் என்று அம்மாநில முதல்வர் டி.கே.சிவகுமார் கேட்டிருந்தார்.. ஆனால் வாட்டாள் நாகராஜ் மறுத்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Advertisement

    மேகதாது அணை கட்டினால், தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய காவிரி நீர் முற்றிலுமாக கிடைக்காமல் போக வாய்ப்பு இருக்கிறது என்று கூறி, மொத்த தமிழ்நாடும் இந்த திட்டத்திற்கு எதிராக திரண்டிருக்கிறது. இருந்தும் கூட.. இந்த திட்டத்தை உடனே அமல்படுத்த வேண்டும் என்று வாட்டாள் நாகராஜ் கூறி வருவது இரு மாநிலத்திற்கும் இடையில் சலசலப்பை தீவிரப்படுத்தியிருக்கிறது.

    Advertisement

    வாட்டாள் நாகராஜின் பிடிவாதம்

    மேகதாது திட்டத்தை உடனே அமல்படுத்த வேண்டும் என்று ஆக.13ம் தேதி மாநிலம் தழுவிய பந்த் நடத்தப்போவதாக வாட்டாள் நாகராஜ் அறிவித்திருக்கிறார். இந்த பந்த்துக்கு முன்னோட்டமாக நாளை, தமிழக-கர்நாடக எல்லை மூடப்படும் என்று கூறியிருக்கிறார். நாளை காலை 11 மணி முதல் இரு மாநில எல்லையான அத்திப்பள்ளியை மூடப்போவதாகவும், எனவே தமிழகத்திலிருந்து கர்நாடகாவுக்கும், கர்நாடகாவிலிருந்து தமிழகத்திற்கும் வாகனங்கள் அனுமதிக்கப்படாது என்றும் கூறியுள்ளார்.

    போராட்டத்திற்கான காரணம்

    மேகதாது திட்டம் உடனே அமல்படுத்தப்பட வேண்டும் என்பதுதான் இந்த போராட்டத்தின் நோக்கம். கர்நாடக அரசுக்கும் இந்த திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்றுதான் ஆசை. ஆனால் இதில் பல சிக்கல்கள் இருக்கின்றன.

    Advertisement

    தமிழ்நாட்டின் டெல்டா மாவட்டங்களில் 2000 ஆண்டுகளுக்கும் மேல் காவிரி நீரை வைத்து விவசாயம் நடந்து வந்திருக்கிறது. கர்நாடகா இடையில் ஒரு 100 ஆண்டுகளுக்கு முன்பு காவிரி நதியின் கிளை ஆறுகளின் குறுக்கே அணைகளை கட்டி நீரை தடுத்ததால், இந்த விவசாயம் பாதிக்கப்பட்டிருக்கிறது. இந்த ஆண்டு காவிரி நீரை போதுமான அளவுக்கு கர்நாடாக திறக்கவில்லை. எனவே டெல்டாவில் குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டிருக்கிறது.

    2000 ஆண்டு கால பாரம்பரியம்

    நிலைமை இப்படி இருக்கும்போது, காவிரி குறுக்கே மேகதாது அணை கட்டப்பட்டால், தமிழ்நாடு சும்மா இருக்குமா என்ன? 2000 ஆண்டு மரபை நாம் சீக்கிரத்தில் விட்டுக்கொடுக்க மாட்டோம். இதெல்லாம் தெரிந்துதான் கர்நாடக அரசு மெதுவாக காய் நகர்த்தி வருகிறது.

    Advertisement

    இதற்கிடையில்தான் கன்னட அமைப்புகள் இந்த பிரச்சனையில் குளிர் காய தொடங்கியிருக்கின்றன. நாளை தமிழக-கர்நாடக எல்லை அடைப்பு, அதை தொடர்ந்து ஆக.13 அன்று கர்நாடக முழுவதும் பந்த் நடத்தப்படும் என்று வாட்டாள் நாகராஜ் கூறியிருக்கிறார். இதற்கு எராளமான கன்னட அமைப்புகள் ஆதரவு தெரிவித்திருப்பதாகவும், கூறியிருக்கிறார். இந்த போராட்டத்தை வாபஸ் வாங்க வேண்டும் என்று கர்நாடக முதல்வர் வலியுறுத்தியும் கூட, வாட்டாள் நாகராஜ் பின்வாங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    English Summary

    Vatal Nagaraj, the leader of a Kannada organization, has announced plans to stage a protest tomorrow by laying siege to Athipalli, located on the Tamil Nadu-Karnataka border, to demand the immediate implementation of the Mekedatu dam project. It is noteworthy that, although the state's Deputy Chief Minister D.K. Shivakumar had previously requested that the siege protest be called off, Vatal Nagaraj refused to do so.