பிரபல நடிகையின் தங்கையுடன் உல்லாசம்.. திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றிய இளைஞர் கைது

  • பெங்களூர்: பெங்களூரில் வசித்து வரும் பிரபல கன்னட நடிகை ஒருவரின் சகோதரியை காதலிப்பதாக ஆசை வார்த்தைகள் கூறி உல்லாசம் அனுபவித்து திருமணத்துக்கு மறுத்த புகாரில் இளைஞரை போலீசார் கைது செய்துள்ள நிலையில் அதன் பின்னணி பற்றிய திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது.

    பெங்களூர் தலகட்டபுராவில் வசித்து வருபவர் ராகவேந்திரா. இவருக்கும் கன்னட திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் ஒருவரின் தங்கைக்கும் பழக்கம் ஏற்பட்டது. ராகவேந்திராவும், நடிகையின் தங்கையும் ஒரே நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர்.

    முதலில் இருவரும் நட்பாக பழகினர். இந்த நட்பு இருவருக்கும் இடையே காதலாக மாறியுள்ளது. இவர்கள் 2 பேரும் 4 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். சமீபத்தில் இருவருக்கும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அதன்பிறகு இருவரும் பிரிந்துவிட்டனர்.

    இந்நிலையில் தான் கடந்த ஜூலை மாதம் 7 ம் தேதி ராகவந்திரா மீது நடிகையின் தங்கை சந்திரா லே-அவுட் போலீசில் புகார் ஒன்றை அளித்தார். அதில், ''ராகவேந்திரா காதலித்து ஏமாற்றிவிட்டார். திருமணம் செய்வதாக ஆசை வார்த்தைகள் கூறி உல்லாசம் அனுபவித்து ஏமாற்றிவிட்டார். என்னுடைய கிரெடிட் கார்டை பயன்படுத்தி பொருட்கள் வாங்கினார். இதனால் பிரச்சனை வந்தது.

    அப்போது தான் அவருக்கு திருமணம் நடந்து இருப்பதும், திருமணத்தை மறைத்து என்னை ஏமாற்றி இருப்பதும் தெரியவந்தது. இதுபற்றி கேட்டபோது இருவரும் சேர்ந்து இருக்கும் தனிப்பட்ட போட்டோ, வீடியோக்களை காட்டி மிரட்டினார். நான் சொல்வது போல் கேட்க வேண்டும். இல்லாவிட்டால் ஆபாச போட்டோக்களை சமூக வலைதளங்களில் பதிவிடுவதாக மிரட்டினார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். '' என்று புகாரளித்தார்.

    இதுபற்றி விசாரணை நடத்திய போலீசார் வழக்குப்பதிவு செய்து ராகவேந்திராவை தேட தொடங்கினர். ராகவேந்திரா போலீசாரின் கைது நடவடிக்கைக்கு பயந்து தற்கொலைக்கு முயன்றார். இருப்பினும் அதிர்ஷ்டவசமாக அவர் காப்பாற்றப்பட்டார். மருத்துவ சிகிச்சைக்கு பிறகு அவர் குணமானார். இதையடுத்து ராகவேந்திராவை போலீசார் அதிரடியாக கைது செய்து நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.

    முன்னதாக ராகவேந்திரா சார்பில் தலகட்டபுரா போலீஸ் நிலையத்தில் மே மாதம் நடிகையின் தங்கை மீது புகார் அளிக்கப்பட்டு இருந்தது. அந்த புகாரில், ''திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி அவ்வப்போது நடிகையின் தங்கை பணம் வாங்கினார். மொத்தம் ரூ.15 லட்சம் வரை பணம் வாங்கிவிட்டு இன்னொருவரை காதலிக்கிறார். இதனால் நான் அவரை விட்டு விலகிவிட்டேன். இப்போது பணத்தை கேட்டால் தர மறுக்கிறார். அவர் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை திரும்ப பெற்று கொடுக்க வேண்டும்'' என்று கூறியிருந்தார்.

    இந்த புகாரை பெற்று கொண்ட போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ராகவேந்திரா மீண்டும் மீண்டும் அழுத்தம் கொடுத்த நிலையில் இந்த புகாரை தொடர்ந்து போலீசார் நடிகையின் தங்கைக்கு நோட்டீஸ் அனுப்பி விசாரணைக்கு அழைத்தனர். ஆனால், அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை. இப்படியான சூழலில் தான் நடிகையின் தங்கை அளித்த பலாத்கார புகாரில் ராகவேந்திராவை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

    English Summary

    Police have arrested a young man following a complaint that he engaged in a sexual relationship with famous Kannada actress's sister living in Bengaluru—after wooing her with promises of marriage—only to later refuse to marry her; shocking details regarding the background of this incident have now emerged.