விஜய் முதல்வர் பதவிக்கு ஏற்றவர் இல்லை என்கிறீர்களா? கர்நாடக சட்டசபையில் நடந்த விவாதத்தால் பரபரப்பு!

  • பெங்களூர்: கர்நாடக சட்டசபையில் இன்று, தமிழக முதல்வர் விஜய் அறிக்கையை முன்வைத்து விவாதம் நடந்துள்ளது. கர்நாடக வனத்துறையினரால் 3 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக கர்நாடக சட்டசபையில் எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பின.

    Advertisement

    கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் உள்ள ஹனூர் பகுதியில் காவிரி வனவிலங்கு சரணாலயத்துக்குட்பட்ட ஷாக்யா வனப்பகுதி உள்ளது. அங்கு மானை வேட்டையாடியதாக வனத்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்ட அந்தோணிசாமி (50), ஜான்ரோஸ் பீட்டர் (42), லாசர் குமார் (33) ஆகிய மூவரும் உயிரிழந்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    Advertisement

    கர்நாடக வனத் துறையினரால் 3 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தமிழ்நாட்டில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. கட்சி வித்தியாசமின்றி அனைத்து தரப்பினரும், கர்நாடக வனத்துறையின் இந்த நடவடிக்கையைக் கண்டித்தனர். இந்தச் சம்பவத்திற்கு தமிழக முதல்வர் ஜோசப் விஜய் கண்டனம் தெரிவித்தார்.

    இந்த கொடூர சம்பவம் தொடர்பாக நேர்மையான விசாரணை நடைபெற வேண்டும். உயர்நிலை விசாரணைக் குழு அமைத்து, தவறு இழைத்தவர்களுக்கு உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் கர்நாடக அரசு வழங்க வேண்டும். இதுபோன்று இனியொரு சம்பவம் நடக்காமல் இருக்க, கர்நாடக அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தமிழக முதல்வர் விஜய் தெரிவித்திருந்தார்.

    Advertisement

    கர்நாடகாவில் 3 தமிழர்கள் வனத்துறையால் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரம் அம்மாநில சட்டமன்றத்தில் கடுமையாக எதிரொலித்துள்ளது. மழைக்கால கூட்டத்தொடரின் மூன்றாவது நாளில் சட்ட மேலவை கூடிய உடனேயே இந்த விவகாரம் எழுப்பப்பட்டது.

    இச்சம்பவம் குறித்து தமிழக முதல்வர் விஜய் வெளியிட்ட கண்டன அறிக்கையைச் சுட்டிக்காட்டி எதிர்க்கட்சிகள் ஆளும் கட்சி மீது விமர்சனங்களை முன்வைத்து, கடும் அமளியில் ஈடுபட்டன. இந்த விவாதத்தின் போது, கர்நாடக வனத்துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி, "அறிக்கையே இப்போதுதான் வெளியாகிறது. அப்படி இருக்கும்போது தமிழ்நாடு முதல்வர் விஜய்க்கு என்ன அறிக்கை கனவில் வந்ததா?" என்று கேள்வி எழுப்பினார்.

    Advertisement

    அதற்கு உடனடியாக பதிலடி கொடுத்த எதிர்க்கட்சித் தலைவர் ஆர்.அசோகா, "அப்படியானால் ஜோசப் விஜய் முதலமைச்சர் பதவிக்கு ஏற்றவர் அல்ல என கூறுகிறீர்களா?" என்று கேள்வி எழுப்பினார். இதனால் கர்நாடக சட்டசபையில் சிறிது நேரம் கடும் கூச்சல் குழப்பம் நிலவியது.

    இதையடுத்து, சுதாரித்துக்கொண்ட வனத்துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி தான் அந்த அர்த்தத்தில் கூறவில்லை என்று விளக்கம் அளித்தார். தொடர்ந்து, இந்தச் சம்பவம் குறித்து விரிவான விவாதம் நடத்தப்படும் என சபாநாயகர் அறிவித்தார்.

    பின்னர், இந்த விவகாரத்தில் பதில் அளித்த வனத்துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி, துப்பாக்கிச் சூடு வேண்டுமென்றே நடத்தப்படவில்லை என்றும், வேட்டையாடுதலுக்கு எதிரான நடவடிக்கையின்போது வனத்துறையினர் தற்காப்புக்காகவே செயல்பட்டனர் என்றும் கூறினார்.

    Advertisement

    ஆகஸ்ட் 15 அன்று அதிகாலை 5 மணியளவில், கரடிகல்லு வனப்பகுதிக்கு அருகே தீப்பந்தம் எரிவதை வனத்துறையினர் கவனித்தனர். உயரமான இடத்தில் இருந்த நான்கு வேட்டைக்காரர்கள், வனத்துறையினரை நோக்கி நாட்டுத் துப்பாக்கிகளால் சுட முயன்றதாகவும், சரணடையுமாறு கேட்டுக்கொண்ட பிறகும் அவர்கள் தொடர்ந்து சுட்டதாகவும் ராமலிங்க ரெட்டி கூறினார்.

    வனக் காவலர் சிவராஜ் சசலவாடா தற்காப்புக்காக துப்பாக்கிச் சூடு நடத்தியதில் மூன்று பேர் கொல்லப்பட்டனர். பணியாளர்கள் வேண்டுமென்றே சுடவில்லை. தங்களைத் தற்காத்துக் கொள்வதற்காகவே அவர்கள் அவ்வாறு செயல்பட்டனர். நீதித்துறை விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றும், வனத்துறைப் பணியாளர்கள் ஏதேனும் தவறு செய்தது நிரூபிக்கப்பட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் ராமலிங்க ரெட்டி தெரிவித்தார்.

    English Summary

    A debate took place in the Karnataka Legislative Assembly today following a statement presented by Chief Minister Vijay. Opposition parties raised questions regarding the incident in which three Tamils ​​were shot dead by the Karnataka Forest Department.