பந்த் வேண்டாம்.. கன்னட அமைப்பினரிடையே கருத்து வேறுபாடுகள்.. கர்நாடகா பந்த் தோல்வி!

  • பெங்களூர்: காவிரி நீர் விவகாரம் தொடர்பாக இன்று வியாழக்கிழமை கர்நாடகாவில் பந்த் நடத்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில், கன்னட அமைப்புகளிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை அதிகரித்துள்ளதுடன், அணைகளின் நீர் இருப்பும் மேம்பட்டுள்ளதால் பந்த் தேவையில்லை என சில அமைப்புகள் கருதுவதாக தகவல் வெளியாகியுள்ளது..

    Advertisement

    தமிழ்நாடு கர்நாடகா இடையே கடந்த பல ஆண்டுகளாகவே காவிரி விவகாரத்தில் மோதல் இருந்து வருகிறது. தமிழ்நாட்டிற்கு கிடைக்க வேண்டிய உரிய நீரை கர்நாடகா உரிய நேரத்தில் திறந்துவிட மறுப்பதே இதற்கு முக்கிய காரணம். இந்தாண்டும் கூட காவிரி நீரை உரிய நேரத்தில் கர்நாடகா திறந்து விட மறுத்தே வந்தது. பிறகு அங்கு மழை அதிகரிக்கவே அணைகளில் நீர் அதிகரித்தால் வேறு வழியில்லாமலேயே தண்ணீரை திறந்துவிட்டது.

    Advertisement

    பந்து அழைப்பு

    இந்தச் சூழலில் தான் காவிரி விவகாரத்தில் கன்னட அமைப்புகள் பந்த்திற்கு அழைப்பு விடுத்திருந்தது. இருப்பினும், இன்று காலை முதல் பந்த்திற்கு மிக பெரிய ஆதரவு கிடைப்பது போல தெரியவில்லை. ஆங்காங்கே ஓரிரு இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. இருப்பினும், பெரும்பாலான இடங்களில் கடைகள் வழக்கம் போலவே இயங்கின. எல்லையில் பேருந்து மற்றும் போக்குவரத்தும் கூட பெரியளவில் பாதிக்கப்பட்டது போல தெரியவில்லை.

    கர்நாடகாவிலிருந்து தமிழகத்துக்கு தினமும் 12,000 கனஅடி காவிரி நீரை திறந்துவிட வேண்டும் என்ற ஒழுங்குமுறை அமைப்பின் உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பந்த் நடத்த வேண்டும் என்பதில் வாட்டாள் நாகராஜ் உறுதியாக இருந்தார்.. முன்னாள் எம்எல்ஏவான வாட்டாள் நாகராஜ், காவிரி நீர் விவகாரத்தில் தமிழகத்துக்கு தண்ணீர் திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மாநிலம் முழுவதும் பந்த் நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தி வந்தார்.

    Advertisement

    பள்ளிகள்

    இதற்கிடையே கர்நாடகா அசோசியேட்டட் மேனேஜ்மென்ட் ஆஃப் ஸ்கூல்ஸ் அமைப்பு பந்த் அழைப்புக்கு தார்மீக ஆதரவு மட்டுமே தெரிவித்துள்ளது. பள்ளிகளை வழக்கம்போல் நடத்த வேண்டும் என்றும் பள்ளி ஊழியர்கள் பந்த் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் கருப்பு பேட்ஜ் அணியலாம் என்றும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. இருப்பினும், பெரும்பாலான பள்ளிகள் வழக்கம் போலவே இயங்குகின்றன.

    கருத்து வேறுபாடு

    ஆனால், சில கன்னட ஆதரவு அமைப்புகள் தங்களது முந்தைய நிலைப்பாட்டில் இருந்து பின்வாங்கியுள்ளன. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தற்போது மழை பெய்து வருவதாலும், அணைகளில் நீர் இருப்பு அதிகரித்துள்ளதாலும், தமிழகத்துக்கும் சீரான நீர்வரத்து இருப்பதாகவும் அவை சுட்டிக்காட்டியுள்ளன. இதனால் தற்போதைய சூழலில் மாநிலம் தழுவிய பந்த் நடத்த வேண்டிய அவசியம் இல்லை என்று அந்த அமைப்புகள் தெரிவித்துள்ளன.

    Advertisement

    காவிரி நீர் திறப்பு விவகாரத்தில் கர்நாடகா மற்றும் தமிழகத்துக்கு இடையே தொடர்ந்து கருத்து வேறுபாடு நிலவி வரும் நிலையில், பந்த் அழைப்புக்கு கன்னட அமைப்புகளிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதையே இது காட்டுகிறது.

    English Summary

    Karnataka bandh over the Cauvery water dispute has triggered a split among Kannada groups(கர்நாடகா பந்த் கன்னட அமைப்பினரிடையே கருத்து வேறுபாடு): Karnataka Bandh on Cauvery Water Dispute latest news in tamil.